"பேரரசர் அலெக்சாந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎வலிமையின் ஒருங்கிணைப்பு: typo, replaced: அதற்க்கு → அதற்கு using AWB
சி (→‎அலெக்ஸாண்டர் படையில் ராணுவப்புரட்சி: clean up, replaced: இதற்க்கு → இதற்கு using AWB)
சி (→‎வலிமையின் ஒருங்கிணைப்பு: typo, replaced: அதற்க்கு → அதற்கு using AWB)
மன்னர் ஃபிலிப்பின் மரணச்செய்தி தேபெஸ், ஏதென்ஸ், தேசாலி, மற்றும் திரேசிய பழங்குடிகள் மேலும் வடக்கு மாசிடோன் ஆகிய இடங்களில் பெரும் கிளர்ச்சியை உண்டாக்கியது. இந்த கிளர்ச்சியை கேள்விப்பட்ட அலெக்ஸாண்டர் உடனுக்குடன் பதில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். தந்திரமும் செயல்திறனும் ஒருங்கே இணைத்து செயல்பட்ட அலெக்ஸாண்டர் 3000 குதிரைப்படையை கொண்டு தேசாலி நோக்கி பயணித்தார். அப்பொழுது ஒலிம்பஸ் மலைகளுக்கும் ஒஸ்ஸா மலைகளுக்கும் இடையில் த்ரேசியன் படைகளால் சூழபட்டார். அப்பொழுது அலெக்ஸாண்டர் தனது படைகளை ஒஸ்ஸா மலைகளின் மீதாக கடந்து செல்ல ஆணையிட்டார். மறுநாள் காலை திரேசிய படைகள் விழித்தெழுந்த பொழுது தாம் சுற்றி வளைத்த அலெக்ஸாண்டரின் படைகள் தற்பொழுது தங்களை சுற்றி வலைத்திருப்பதை உணர்ந்தனர். பின்னர் அவர்களது குதிரைப்படையையும் தனது குதிரைப்படையுடன் இணைத்துக்கொண்டு அங்கிருந்து பிலோபோநீஸ் நோக்கி பயணித்தார்.
 
வழியில் தெர்மொபைலியில் முகமிட்ட அலெக்ஸாண்டர் அங்கிருந்த அம்பிக்டையோனிக் கூட்டமைப்பிற்கு தலைவராக அங்கீகாரம் செய்யப்பெற்றார். பின்னர் கோரிந்த் நோக்கி முன்னேறினார். ஏதேன்ஸும் அலெக்ஸாண்டருடன் அமைதியாக பணிந்தது. அலெக்ஸாண்டரும் பழங்குடியினரை மன்னித்தார். அலெக்ஸாண்டரின் சரித்திரத்தில் புகழ் வாய்ந்த சைனிக் டியோஜெனிஸ் உடனான போர் அலெக்ஸாண்டர் கோரிந்தில் தங்கியிருந்த பொழுது தான் நிகழ்ந்தது. அந்த போரில் வென்ற அலெக்ஸாண்டர் டியோஜெனிஸிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது தந்ததுவ வாதிகள் அலெக்ஸாண்டரிடம் ஏளனமாக பதில் கூறினர். '''நீங்கள் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும் எங்கள் மீது சூரியனின் ஒளி படவில்லை''' என்று கூறினர். இந்த பதில் அலெக்ஸாண்டரை பிரமிக்க வைத்தது. அதற்க்குஅதற்கு பதிலாக அலெக்ஸாண்டர் அவர்களிடம் '''நான் அலெக்ஸாண்டராக இல்லாமலிருந்தால் நான் ஒரு டியோஜெனிஸாகத்தான் இருக்க விரும்புகிறேன்''' என்று கூறினார். அலெக்ஸாண்டருக்கு கோரிந்தில் தான் அவர் தந்தை ஃபிலிப்பை போன்று '''முன்னின்று நடத்தும் தலைவர்''' என்று பொருள் படும் '''HEGEMON''' என்ற பட்டம் சூட்டப்பட்டது. மேலும் இதன் பின் தான் த்ரேசியர்களின் போர் மற்றும் பாரசீக போர் போன்றவை அலெக்ஸாண்டரால் நிகழ்த்தபெற்றன.
 
=== [[பால்கன் குடா]] போர்கள் ===
55,776

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2752203" இருந்து மீள்விக்கப்பட்டது