முடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
==விவரிப்பு==
ஒவ்வொரு மயிரிழையும் அகணி, புறணி, புறத்தோல் பகுதிகளைக் கொண்டதாகும்<ref name="Hair Structure and Hair Life Cycle">[http://www.follicle.com/hair-structure-life-cycle.html Hair Structure and Hair Life Cycle]</ref>. உள்ளார்ந்தப் பகுதியான ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை<ref name="How Does Hair Grow?">[http://www.hairlosshelp.com/hair_loss_research/hair.cfm "How Does Hair Grow?"] Web. 09 Feb. 2010</ref><ref name="Topic 2: The Layers of the Hair">[http://www.texascollaborative.org/hildasustaita/module%20files/topic2.htm Topic 2: The Layers of the Hair]</ref>. உயர் வடிவமும், ஒருங்கமைவுமுள்ள புறணி (அல்லது முடியின் மைய அடுக்கானது) வலுவிற்கும், நீர் உறிஞ்சுவதற்கும் மூலமாக உள்ளது. புறணியில் மெலனின் என்னும் நிறமிப் பொருள் உள்ளது. இதன் எண்ணிக்கை, பரவல், மெலனின் குருணைகளின் வகைகளின் அடிப்படையில் முடி இழைகளின் வண்ணம் வேறுபடுகிறது. மயிர்க்குமிழ்களின் வடிவம் புறணியின் வடிவத்தை வரையறுக்கிறது. நீளமான அல்லது சுருண்ட முடியைப் பொருத்து மயிரிழைகளின் வடிவம் மாறுபடுகிறது. நீளமான முடியை உடையவர்களின் மயிரிழைகள் வட்டவடிவமாக உள்ளது. நீள் வட்டம் அல்லது பிற வடிவங்களில் மயிரிழைகளைக் கொண்டவர்களின் முடிக்கற்றைகள் அலைஅலையாகவோ, சுருண்டதாகவோக் காணப்படுகிறது. புறத்தோல் வெளிப்புறத்தை மூடிக்கொண்டுள்ளது.
புறத்தோலின் சிக்கலான வடிவமைப்பு கொழுமிய ஒற்றை மூலக்கூறுகளாலானதால் முடி வீங்கும்போது நழுவும் தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும், இதனால் முடிக்கு நீரை விலக்கும் தன்மை உருவாகிறது<ref name="Hair Structure and Hair Life Cycle"/>. மனித முடியின் குறுக்களவு 0.017-0.18 மில்லிமீட்டர் (0.00067 - 0.00709 அங்குலம்) அளவில் வேறுபட்டு காணப்படுகிறது<ref>{{cite web |last=Ley |first=Brian |title=Diameter of a Human Hair |year=1999 |url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |accessdate=28 June 2010 |archiveurl=https://www.webcitation.org/5qpTnR6HP?url=http://hypertextbook.com/facts/1999/BrianLey.shtml |archivedate=28 June 2010 |deadurl=yes |df=dmy-all }}</ref>. இரண்டு மில்லியன் நுண்குழலியச் சுரப்பிகளும், வியர்வைச் சுரப்பிகளும் நீர்மத் திரவங்களை சுரப்பதனால் ஆவியாதல் முறையில் உடல் குளிர்சியாகிறதுகுளிர்ச்சியாகிறது. மயிரிழைத் தொடங்கும் பகுதியில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் கொழுப்புப் பொருள்கள் முடிக்கு உயவூட்டுகின்றன<ref>{{cite book |title=Disease and Its Causes |year=1913 |publisher=New York Henry Holt and Company London Williams and Norgate The University Press, Cambridge, USA |location=United States |author=Councilman, W. T. |chapter=Ch. 1}}</ref>.
 
மயிர்க்கால்களிலிருந்து முடி வளரத் தொடங்குகிறது. முடியின் ஒரே உயிர்ப்பானப் பகுதி நுண்குமிழ்களில் காணப்படுகிறது. கண்ணுக்குத் தெரியும் முடி மயிர்த்தண்டாகும். மயிர்த்தண்டுகள் எவ்விதமான உயிர்வேதியியத் தொழிற்பாடுகளும் இல்லாத இறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன. முடியின் அடிப்பகுதியிலுள்ள மயிர்க்கால்களில் (நுண்குமிழ்கள்) மயிர்த்தண்டுகளை உருவாக்கும் செல்கள் உள்ளன<ref>{{cite book |editor1=Freinkel, R.K. |editor2=Woodley, D.T. |title=The Biology of the Skin |date=15 March 2001 |publisher=[[CRC Press]] |isbn=9781850700067 |page=80}}</ref>. மயிர்க்கால்களில், முடிக்கு உயவூட்டும் எண்ணெயைத் தயாரித்து வெளியிடும் எண்ணெய்ச் சுரப்பிகள் (sebaceous glands), முடியைச் செங்குத்தாக நிற்கச் செய்யும் சிலிர்த்தசைகள் (arrector pili) ஆகியனவும் உள்ளன. மனிதர்களில் சிலிர்த்தசைகளினால் உடலிலுள்ள முடிகள் மயிர்சிலிர்ப்பு
"https://ta.wikipedia.org/wiki/முடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது