புவிப்புறத் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 4:
 
==இந்தியாவில்==
[[இந்தியா]]வில் 1959ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் [[தில்லி]]யில் சோதனையோட்டமாக சிறு பரப்பானைக் கொண்டு தற்காலிக ஒளிப்பதிவு தளத்திலிருந்து ஒளிபரப்பப்பட்டது. வழமையான நிகழ்சிகள்நிகழ்ச்சிகள் 1965ஆம் ஆண்டிலிருந்து [[அனைத்திந்திய வானொலி]]யின் அங்கமாக செயல்படத் தொடங்கின. இச்சேவை [[மும்பை]]க்கும் [[அமிர்தசரசு|அமிர்தசரசிற்கும்]] 1972ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டது. 1975 வரை ஏழு இந்திய நகரங்களில் மட்டுமே தொலைக்காட்சி சேவைகள் இருந்தன; தொலைக்காட்சி சேவைகளை வழங்கும் ஒரே நிறுவனமாக [[தூர்தர்சன்]] இருந்தது. 1976ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலியிலிருந்து தூர்தர்சன் தனியாக செயல்படத் தொடங்கியது. தேசிய சேவைகள் 1982ஆம் ஆண்டிலிருந்து அனைத்து நிலையங்களிலிருந்தும் ஒளிபரப்பப்பட்டன. அதே ஆண்டு வண்ணத் தொலைக்காட்சி இந்தியாவிற்கு அறிமுகமானது.
 
இந்தியாவின் பரந்த நிலப்பரப்பை கருத்தில்கொண்டு இன்சாட் செயற்கைக்கோள்களின் மூலம் ஓர் தொலைதொடர்பு பிணையம் தொலைக்காட்சி புவிப்புற பரப்பான்களுக்காக அமைக்கப்பட்டது. இந்தப் புவிப்புறப் பரப்பான்களுக்கான குறிப்பலைகள் மைய நிலையத்திலிருந்து இந்த செயற்கைக்கோள்கள் மூலம் அனுப்பப்பட்டன; இவற்றை புவிப்புற பரப்பான்கள் புவிப்புறத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பின. தற்போது இவ்வாறு பிணைக்கப்பட்ட 1400 புவிப்புற பரப்பான்கள் மூலம் இந்திய மக்கள்தொகையின் 90% நபர்கள் தூர்தர்சன் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/புவிப்புறத்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது