கே. எஸ். கோதண்டராமய்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
கோதண்டராமய்யா கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாரந்தூர் கெலமங்கலம் சாலையில் உள்ள ஜாகிருகாப்கள்ளியில் 1909 ஆகத்து 6 ஆம் நாள் சிவராமதாஸ் இராமக்கா இணையருக்கு மகனாக பிறந்தார். கோதண்டராமய்யா ஒசூரில் பள்ளிப் படிப்பை முடித்து பெங்களூரில் முதுகலை பட்டப்படிப்பை (எம்.ஏ) முடித்து, தெலுங்கு மொழியில் புலவர் பட்டம் பெற்றார். இதன் பிறகு பாகலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின் ஒசூர், வேப்பனப்பள்ளி, ஆத்தூர், சேலம் ஆகிய ஊர்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்தார். பின் பொதுவாழ்வில் ஏற்பட்ட ஆர்வத்தினால் ஆசிரிரயர் பணியை விட்டு விலகினார். 1967 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் [[இராஜாஜி|இராஜாஜியின்]] [[சுதந்திராக் கட்சி]]யின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் 1971 இல் இரண்டாவது முறையும் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
== தெலுங்கு பணிகள் ==
[[தெலுங்கு]] மொழிமீது தீராத பற்று கொண்ட இவர் 1959 இல் [[பொட்டி சிறீராமுலு]] பெயரில் நூலகமும் படிப்பகமும் அமைத்து, ஆந்திரத்திலிருந்து தெலுங்கு புத்தகங்களை வாங்கிவந்து படிக்க உதவினார். சென்னையில் அகில இந்திய தெலுங்கு மாநாட்டை நடத்தினார். தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் உதவியுடன் தமிழக அரசிடம் இலவசமாக இடம்வாங்கி ஒசூர் காமராசர் காலனியில் [[ஆந்திர சாம்ஸ்கிருத்திகா சமிதி]] என்ற தெலுங்கு அமைப்பை நிறுவினார்.<ref>http://www.dinamani.com/edition_vellore/article943705.ece?service=print</ref>. அதில் பல தெலுங்கு நிகழ்சிகளைநிகழ்ச்சிகளை நடத்தி பல தெலுங்கு அறிஞர்களை வரவழைத்து சொற்பொழிவுகளை நடத்த வைத்தார். சமிதியில் [[கிருஷ்ணதேவராயன்|கிருஷ்ண தேவராயரின்]] பட்டாபிசேக ஆண்டு விழாவை ஒவ்வோராண்டும் நடத்தி வந்தார் அவர் இறந்த பின்னும் இந்த நிகழ்ச்சி சமிதியில் தொடர்ந்து நடந்துவருகிறது. இவர் கிருஷ்ண தேவராயரின் வரலாறு குறித்து புத்தகத்தின் முதல் பகுதியை எழுதி வெளியிட்டார்.<ref>{{cite journal | title=தாய்மொழி மீது பற்றுக் கொண்ட எளிமையான MLA | journal=மாநகரச் செய்திகள் | year=2017 | month=பெப்ரவரி | volume=1-6 | doi=17}}</ref> இவருக்கு ஆந்திர சாம்ஸ்கிருத்திகா சமிதி வளாகத்தின் முகப்பில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._எஸ்._கோதண்டராமய்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது