ஹம்பிறி போகார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
போகார்ட் இந்த தழும்பினை கடலில் பெறவில்லை எனக்கூறுவோரும் உண்டு. போகார்டின் நீண்ட கால நண்பரும் எழுத்தாளருமான நாதானியேல் பெஞ்ச்லி வேறுமாதிரி கூர்கிறார். மையின் மாநிலத்தின் கிட்டரே நகரில் உள்ள ஒரு கடற்படை சிறைச்சாலைக்கு ஒரு கைதியை அழைத்து சென்ற பொழுது ஏற்பட்ட தழும்பு இது. ஒரு தொடர்வண்டி நிலையத்தில் கைதி ஒரு சிகரட்டை கேட்க போகார்ட் அவனுக்கு தர வத்திக்குச்சியை தேடிய பொழுது விலங்கிடப்பட்ட தனது கைகளால் போகார்டின் வாயை நொறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டான் அந்தக் கைதி. இந்த தாகுதலில் போகார்டின் மேலுதடு கிழிந்துவிட்டது. பின்னர் அக்கைதி பிடிபட்டு போர்ட்ஸ்மவுத் கொண்டுவரப்பட்டான். இதன் இன்னொரு வடிவமாக இது ரயில் நிலையதில் நடந்ததல்ல சிறையில் என்றும் சொல்வார்கள்.
 
எப்படியோ மருத்துவ சிகிச்சைக்கு முன்னரே தழும்பு உருவாகிவிட்டிருந்தது. நாசமா போன மருத்துவர் தையல போடுன்ன தழும்பை போட்டுட்டார் என போகார்ட் பின்னர் சொன்னார். டேவிட் நிவியன் ஒருமுறை இந்த தழும்பு உருவானதை கேட்டிருக்கிறார். அது எனக்கு சின்ன வயசில இருந்து இருக்கு என்று சொல்லியிருகிறார் போகார்ட்! நிவியன் போகார்டின் தழும்புகள் குறித்து உலவும் கதைகள் அவரது நட்சத்திர பிம்பத்தை கவர்சிகரமாககவர்ச்சிகரமாக ஆக்குவதற்காக பட தயாரிப்பு நிறுவனங்களால் கட்டப்பட்ட கதைகள் என்று கூறுகிறார்.
 
ஆனால் அவரது பணிவிடுப்பு அறிக்கையில் பல்வேறு தழும்புகள் குறித்து பதிவுகள் இருந்தாலும் உதட்டு தழும்பு குறித்து குறிப்புகள் ஏதும் இல்லாது இருப்பது இவர் இந்தத் தழும்பை பின்னர் தான் பெற்றிருக்க வேண்டும் என்று உறுதிசெய்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஹம்பிறி_போகார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது