"செல்லிடத் தொலைபேசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
கைமாற்றங்கள் நகர்கருவி மூலம் துவக்கப்படுகின்றன அல்லது பிணையத்தின் உபயோகச் சுமையை சீர்ப்படுத்த நகர் நிலைமாற்றகம் மூலமும் துவக்கப்படுகின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பின் [[பயனில்லா காலகட்டங்கள்]], மற்றும் குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் குறிப்பிட்ட அலைவெண்களில் [[நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடத்தை]] வருடி அருகாமையிலுள்ள கலங்களில் 6 உன்னத கலங்களை அவைகளிருந்து பெறும் வானலை திறத்தின்படி சேகரிக்கும். இத் தகவலை தள நிலைய இயக்ககத்திற்கும் நகர் நிலை மாற்றகத்திற்கும் தெரிவிக்கும்.
 
கைமாற்றத்தின் செயல்படுத்தம் கம்பியில்லா பிணையத்தை பொறுத்தவரை உள்ளது. குறைவான ஏற்பு படிமுறைப்படி (Minimum Acceptance Algorithm) ஒரு நகர்கருவியின் பெறும் குறிகைத்திறன் (Received Signal Power) ஒரு அளவிற்க்குஅளவிற்கு மீது குறைந்தால் அதன் இயங்கும் திறன் (Operating Power) அதிகரிக்கப்படுகிறது. அது மீறி பெறும் குறிகைத்திறன் முன்னேற்றம் இல்லையினில் நகர்கருவி வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கும். திறன் சேமிப்பு படிமுறைப்படி (Power Budget Algorithm) இயங்கும் கலத்திலிருந்து குறிகைத்திறன் குறைந்தால் வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கப்படும்.
 
கம்பியில்லாவில் ஒரு நகர்கருவியின் இருப்பிடம் HLR மற்றும் VLR பதிவகங்கள் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. ஒரு நகர்கருவி ஒரு பிணையத்திலிருந்து மற்றொன்றிற்கு பயணம் செய்யும்போது அதற்கு பெறும் ஒளிபரப்பில் மாற்றம் தெரியும். அப்பொழுது நகர்கருவி தன் IMSI மற்றும் பழைய தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் எண்களை புது பிணையத்தின் VLR பதிவகத்திற்கு ஒரு புதுப்பிப்புக் கட்டளையாக (Update Request) அனுப்புகிறது. நகர்கருவிக்கு ஒரு புது MSRN எண் ஒதுக்கப்பட்டு புது பிணையத்தின் VLR மூலம் புது HLR பதிவகத்திற்கு அனுப்பபடுகிறது. புது HLR பழைய பிணையத்தின் VLRக்கு முந்திய MSRN எண்ணை ரத்து செய்யுமாறு தெரிவிக்கிறது; அந்த எண்ணை மறு உபயோகம் செய்ய இயல்கிறது. புது TMSI எண் ஒதுக்கப்படுகிறது. MSC அமைப்பு பொதுத் தொலைபேசி பிணையத்திற்கும் கம்பியில்லாப் பிணையத்திற்கும் இடைமுகமாகும். ஒரு PSTN பிணையத்திலிருந்து தோன்றும் அழைப்பு ஒரு நுழைவாயில் நகர்பேசி சந்தாதாரர் எண் (Mobile Station ISDN-MSISDN) மூலம் MSC நுழைவாயிலுக்கு திசைவு செய்யப்படுகிறது. இந்த நுழைவாயில் நகர்பேசி MSISDN எண்ணுடன் HSRஐ வினாவித்து MSRN எண்ணை பெறுகிறது. இந்த MSRN எண்ணுடன் அழைப்பு MSCக்கு திசைவு செய்யப்படுகிறது. MSCயின் VLR பதிவகம் MSRNஐ எடுத்து மாற்றி நகர்கருவிக்கு TMSI எண் ஒன்றை அளிக்கிறது. ஒரு அழைப்பு BSCயின் கட்டுப்பாடு மூலம் நகர்கருவிக்கு திசைவு செய்யப்படுகிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2754243" இருந்து மீள்விக்கப்பட்டது