தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி (பராமரிப்பு using AWB)
அறிவொளி காலக்கட்டத்தின், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளரான '''ஜீன் ஜாக்ஸ் ரோஸ்ஸே''' (1712 - 1778) <ref>http://www.philosophybasics.com/philosophers_rousseau.html</ref>, சில முக்கிய தாராளமயம் கொள்கைகளை வடிவமைத்தார். மக்கள் தங்களது சிறு உரிமைகளை விட்டுத்தர வேண்டும், அப்போது தான் சமூக ஒழுங்கு இருக்கும்.
 
ஸ்காட்டீஸ் அறிவொளி காலக்கட்ட சிந்தனையாளர்கள், '''டேவிட் ஹ்யூம்'''(1711 - 1776), '''ஆடம் ஸ்மித்''' (1723 - 1790) தாராளமயத்தின் சித்தாந்தத்திற்கு பங்களித்தனர். ஹ்யூமைப் பொருத்த வரையில், மனிதனின் அடிப்படை குணங்கள் கட்டுப்பாடுகளை இறுதியில் உடைத்து எரியும். தனிமனிதனால் தனது அறநெறிகளையும், பொருளாதாரத்தையும் தானே வடிவமைத்துக் கொள்ள முடியும் என '''ஆடம் ஸ்மித்''' விவரித்தார். தனி மனிதன் தனது முயற்சிகளை சுதந்திரமாக, அரசாங்கத்தின் கட்டுப்பாடின்றி மேற்கொண்டால் தான், நாட்டின் பொருளாதரம் வளரும். இயற்க்கையாகவோஇயற்கையாகவோ அல்லது தேவையின் பொருட்டோ, தனிமனிதன் தன் வாழ்வாதாரத்தை தேர்ந்தெடுக்கும் போது தான், சமுதாயத்திற்கு நன்மை கிட்டும். 1776ம் ஆண்டில் படைத்த '''நாட்டின் வளமை''' என்னும் இவரது படைப்பு வலியுறுத்துவது, கட்டுப்பாடின்றி திகழும் சந்தைக்கு தாமாகவே தன்னைச் சீர் திருத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.
 
அமெரிக்க புரட்சியின் (1775 - 1783), அடிப்படைகளை கட்டமைத்தவர்கள், ''' தாமஸ் பேயின்''' (1737 - 1809), ''' தாமஸ் ஜெப்பர்சன்''' (1743 -1826) மற்றும் '''சான் ஆடம்ஸ்''' (1735 - 1826). இவர்கள் வாழ்க்கை தாராளமயத்தின் போராட்டம் பெயரில் கிளர்ச்சிகளை தூண்டிவிட்டனர். முக்கியமாக பேயினின் துண்டுப்பிரசுரங்களான 'பொது அறிவு' மற்றும் 'மனிதனின் உரிமை' மக்களிடையே மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியது.<ref name="philosophybasics.com"/>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2754607" இருந்து மீள்விக்கப்பட்டது