"சுரோடிங்கர் சமன்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Fixed typo
சி (பராமரிப்பு using AWB)
சி (Fixed typo)
 
 
===மொத்த, இயக்க மற்றும் நிலை ஆற்றல்===
சுரோடிங்கர் சமன்பாட்டின் அடிப்படையான வடிவம் வழக்கத்திற்கு மாறானதோ எதிர்ப்பாராததோஎதிர்பாராததோ அல்ல, காரணம் அது ஆற்றல் அழிவின்மை கொள்கையைக் கையாள்வதே. சார்பியற்சாரா சுரோடிங்கர் சமன்பாட்டின் குறியீடுகளை அமைப்பின் மொத்த ஆற்றலைக் குறிப்பது, அமைப்பின் இயக்க ஆற்றல் மற்றும் நிலையாற்றல் ஆகியவற்றின் கூட்டுத்தொகையைக் குறிப்பது என்று விளக்கலாம். இவ்வகையில் இது மரபார்ந்த இயற்பியலில் இருப்பதை போன்றதேதான்.
 
===சொட்டாக்கம்===
சார்பியற்சாரா சுரோடிங்கர் சமன்பாடானது அலைச் சமன்பாடு என்று அறியப்படும் ஒரு வகை பகுதி வகையீட்டுச் சமன்பாடு ஆகும். இதனால் அலைகளுக்கு உரிய இயல்புகளைத் துகள்களும் வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. மிக அண்மைக்கால விளக்கங்களில் இந்த விவரம் நேரெதிராக சொல்லப்படுகிறது - குவாண்டம் நிலை, அதாவது அலைத்தன்மை, ஒன்றே உண்மையான இயற்பிய மெய்ந்நிலை, பொருத்தமான சூழல்களில் அது துகள் போன்ற இயல்புகளையும் வெளிப்படுத்தக் கூடியது.
 
அலைகள் அடிக்கடி காட்டும் இயல்புகளுக்கான ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு இரட்டைப் பிளவு விளிம்பு வளைவு ஆகும், இயல்பில் இவ்விளைவோடு துகள்களை இணைத்துப் பார்க்க இயலாது. இரண்டு பிளவுகளின் வாயிலாக வெளிவரும் அலை பிரிவுகள் ஒன்றாய்ப் படர்கையில் சில இடங்களில் ஒன்றை ஒன்று நீக்கியும் சில இடங்களில் ஒன்றோடு ஒன்று சேர்ந்தும் ஒரு சிக்கலான படிவத்தினை உருவாக்கும். பொதுவாய், ஒரு துகளை இரட்டைப் பிளவுகளை நோக்கி எறிவதன் மூலம் இவ்வாறான சிக்கலான படிவத்தை யாரும் எதிர்ப்பார்க்கஎதிர்பார்க்க இயலாது, காரணம் அந்தத் துகள் இரண்டு பிளவுகளில் ஏதேனும் ஒன்றன் வழியாகத்தான் செல்ல இயலும், இரண்டுன் ஊடாகவும் அதனால் செல்ல இயலாது.
 
ஆனால், சுரோடிங்கர் சமன்பாடு ஒரு அலைச் சமன்பாடு என்பதனால் அதன்படி இரட்டைப் பிளவை நோக்கி எறியப்படும் ஒரு தனித் துகள் அலைகள் உருவாக்குவது போன்ற ஒரு சிக்கலான படிவத்தையே தானும் உருவாக்கும் (இடப்புறம் உள்ள படம்). இந்தச் சிக்கலான படிவத்தினைப் பெற சோதனையைப் பலமுறை நிகழ்த்த வேண்டும். இந்தப் படிவம் தோன்றுதல் ஒவ்வொரு எதிர்மின்னியும் ஒரே நேரத்தில் இரண்டு பிளவுகள் வழியாகவும் செல்கின்றன என்பதற்கான சான்று ஆகும். இது உள்ளுணர்விற்கு எதிராய் தோன்றினாலும் இதுவே சரியான கணிப்பு ஆகும், குறிப்பாய் எதிர்மின்னி மற்றும் நொதுமியின் விளிம்புவளைவுகள் நன்கு புரிந்துகொள்ளப்பட்டு பல அறிவியல் துறைகளிலும் பரவலாக பயன்கொள்ளப்படுகின்றன.
4,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2755231" இருந்து மீள்விக்கப்பட்டது