மறதிநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: (edited with ProveIt)
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 15:
}}
 
'''மறதிநோய்''' (''Dementia'' என்பது நினைவு, சிந்தனை, நடத்தையில் ஏற்படும் சீர்குலைவையும், அதனால் நாளாந்த செயற்பாடுகளில் ஏற்படும் சீர்குலைவையும் காட்டும் நோய்க் கூட்டறிகுறியாகும்.<ref name="WHO">{{cite web | url=https://www.who.int/news-room/fact-sheets/detail/dementia | title=Dementia | publisher=World Health Organization | accessdate=10 சூன் 2019}}</ref> இதன் காரணமாக ஒருவரில் ஞாபகம், மொழித்திறன், காட்சிப் புலனுணர்வு, பிரச்சனை தீர்கும் திறன், சுய மேலாண்மை, கவனக்குவிப்பு, கவனம் செலுத்தல் போன்ற தொழிற்பாடுகளில் குறைபாடு ஏற்படும்.<ref name="NIH">{{cite web | url=https://www.nia.nih.gov/health/what-dementia-symptoms-types-and-diagnosis | title=What Is Dementia? Symptoms, Types, and Diagnosis | publisher=National Institutes of Health, USA.gov | accessdate=10 சூன் 2019}}</ref> முதுமை மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே.<ref name="WHO"/> உலகளவில் 50 மில்லியன் மனிதர்களுக்கு இந்த நிலை இருப்பதாகவும், 10 மில்லியன் பேர் ஒவ்வொரு வருடமும் புதிதாக இந்நிலைக்கு ஆட்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.<ref name="WHO"/> [[அல்சீமர் நோய்|அல்சைமர் நோயே]] இந்நிலைக்கான முதன்மைக் காரணியாகவும் 60-70% மானோருக்கான காரணியாகவும் இருக்கிறது.<ref name="WHO"/> உலகளவில், வயது முதிர்ந்தோர் ஆற்றலின்மை உள்ளவர்களாயிருப்பதற்கும், ஏனையோரில் தங்கியிருப்பதற்கும் மறதிநோயே முக்கிய காரணியாக இருக்கின்றது.<ref name="WHO"/> இந்த நோய் காரணமாக நோய்க்குட்பட்டவர்களுடன், அவர்களைப் பராமரிப்போர், குடும்பத்தினர், சமூகத்தினர் அனைவருக்கும் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள் தோன்றுகின்றது..<ref name="WHO"/>
 
ஒரு தீவிரமான [[உளவியல்]] குறைபாடாகும். இது நிலைத்ததாகவோ, அதாவது மூளையில் ஏற்படும் காயத்தினால் உருவாவதாகவோ அல்லது வளரக்கூடியதாகவோ இருக்கலாம்; அல்லது, உளவியல் செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஏற்பட்ட பாதிப்பு அல்லது குறைபாட்டால் உடலானது இயல்பான முதுமையடைதலில் இருந்து அதிகரித்த அளவில் முதிர்வது ஆகியவற்றால் விளையலாம். முதுமை மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. இதனை ஒத்த அறிகுறிகள் "சேதன மூளை நோய்க்கூட்டறிகுறி" (Organic brain syndrome) அல்லது கோளாறு ஆகியவற்றாலும் விளையலாம். ஆயினும், அவை இளைய வயதினரிடையே வேறு பெயர்களில் வழங்கப்படும் இந்த நோயே ஆகும். [[19ம் நூற்றாண்டு|பத்தொன்பதாம் நூற்றாண்டின்]] இறுதிவரை, இந்த முதுமை மறதி நோயைப் பற்றிய மிக அதிகமான மூட நம்பிக்கைகள் இருந்தன.
 
இது மூளையின் தொழிற்பாட்டை பாதிக்கும் வேறு நோய்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.
"https://ta.wikipedia.org/wiki/மறதிநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது