மீசாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 91:
எமது கிராமமானது மணல் பிரதேசமாக அமைந்துள்ளது. இந்தப்பிரதேசத்தில் உற்பத்திசெய்யப்பட்ட மாம்பழம் பலாப்பழம் வாழைப்பழம் என்பனவற்றின் சுவையானது தனிச்சிறப்பைக்  கொண்ட சிறப்பைப் பெற்றுள்ளது. மீசாலை மாம்பழம் பலாப்பழமானது எந்தப்பகுதியிலும் விட்டுக்கொடுக்காத தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது. அத்துடன் இந்த மண்ணும், மண்ணில் வசிப்பவர்களும் எல்லோருடனும் அன்பு கொண்டவர்களாகவும், வந்தோரை வரவேற்று அரவணைக்கும் பெருந்தன்மை கொண்டதாகவும் உள்ள மகிமையைக் கொண்டுள்ளது.
 
இப்படியான மகிமையைக் கொண்ட மண்ணில் எமது கிராமத்தைச் சிறப்பிக்கும் வகையில் கிராம உடையராக வீரவாகுஉடையார்,கிராமவிதானையாக வேலுப்பிள்ளை விதானையார், சதாசிவம் விதானையார், கல்விசார் கல்வியாளர்கள், சாவகச்சேரி நகரசபைத்தலைவராக மீசாலையைச் சேர்ந்த திரு.சு.கனகரத்தினம் அவர்கள் 1968ல் இருந்து 1979ம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எமது தமிழ்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தமது ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்க மறுத்த வகையில் இனம் சமுதாயத்தைச் சார்ந்த இளைஞ்ஞர்களின் பெரும்பான்மை இனத்தை தலைமையக கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக சாவகச்சேரி நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு சாவகச்சேரி நகராட்சி மன்றத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினராக இரு ஆசனங்களைப் பெற்று திரு.தர்மேந்திரன் அவர்களும் மீசாலையைச் சேர்ந்த திரு. இராசரத்தினம் அவர்களும் உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மேலும் நகர சபைச் செயலாளராக மீசாலையைச் சேர்ந்த திரு.மு.காங்கேத அவர்களும், திரு.மு.தாமோதரம் பிள்ளை அவர்களும் சேவையாற்றி உள்ளார்கள். பிரதேச சபைச் செயலாளராக திரு. பாலச்சந்திரன் அவர்கள் செயலாற்றியுள்ளார்கள். மீசாலையில் தபாலகம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து முதல் தபாலதிபராக திரு.சா.தில்லையம்பலம் அவர்கள் நீண்ட காலமாக கடைமையாற்றினார். பின் திரு.சா.ரவீந்திரன் அவர்கள் தபாலதிபராக கடைமையாற்றினார். மீசாலை புகையிரத நிலைய  அதிபராக மீசாலையைச் சேர்ந்த திரு.வேலாயுதப்பிள்ளை அவர்கள் நீண்ட காலமாக கடைமையாற்றினார். புகையிரதம் வட பகுதிக்கு வருவது தடைப்பட்டதும்  அவரது கடமையும்   நிறைவடைந்தது  .மேலும் எமது கிராமத்தில் மக்களின் அரும் பெரும் சேவையான வைத்திய சேவையை வருமானத்தை மட்டும் எதிர்பாராது  மக்களுக்கு  சேவை செய்ய வேண்டும் என்றும் ,  தங்கள் திறமையை  மக்கள் அனுபவிக்க வேண்டும் என்ற என்ற எண்ணத்துடன் ஆயுள்வேத உள்நாடு  வைத்தியர்களாக திரு.நடராசா வைத்தியர் , திரு.கார்த்திகேசு அவர்கள் , தொடர்ந்து திரு கந்தசாமி அவர்கள் , திரு விகலர் அவர்கள் , திரு . வீரசிங்கம் ( வீரர் ) அவர்கள்  ,கண்  வைத்தியர்களாக திரு.குஞ்சுதம்பி அவர்கள் , விசேஷ வைத்தியராக   திரு நல்லதம்பி அவர்கள்,  முறி சொறி வைத்தியராக திரு கதிரன் அவர்களை தொடர்ந்து , கிட்டினன்  அவர்கள் ,ஆயுர்வேத வைத்தியராக திரு கதிர்காமநாதன் அவர்கள் ,திருமதி ராசபூபதி  அவர்கள் ,திருமதி சண்டிகா பரமேஸ்வரி அவர்கள் என தொடர்கிறது . மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீசாலைப்  பகுதியில் தொழில் அதிபர்  திருமதி சுப்பிரமணியம் அவர்களால் ஜெயலட்சுமி மில்  என்ற பெயரில் நெல்  குற்றும் மா ஆலைகள் அமைத்து நெல் அவித்தல் போன்ற பல வகைகளையும் கொண்ட அரிசி ஆலைகள் நீண்ட காலமாக இயங்கி வந்ததது .திரு ஆறுமுகம் அவர்களால் புது சந்தைப் பகுதியில் கூட்டுறவு சங்ககிளைக்கு  என ஓர் கட்டிடம் கட்டி கூட்டுறவு சங்க விற்பனை நிலையம் செயற்ப்பட்டுசெயற்பட்டு  வருகிறது . தனியார் வர்த்தக நிலையங்களும்  ஆங்காங்கு அமையப்  பெற்றுள்ளது . எமது கிராமத்தில்  புகழ் படைத்தவர்களாக முதன்முதலாக    திரு  மு .தா ,சுப்பிரமணியம் அவர்கள் சமாதான நீதவானாக நியமனம்  பெற்றார் .தொடர்ந்து திரு வேலன்  மார்க்கண்டு அவர்கள் சமாதான நீதவானாக நியமனம்  பெற்றார் . தொடர்ந்து 2003ம் ஆண்டு பகுதியில் அகில இலங்கை சமாதான நீதவானாக திரு மார்க்கண்டு மகேந்திரன் அவர்களும் திரு பா .வே இராசரத்தினம் அவர்களும் நியமனம்  பெற்றார்கள் .தொடர்ந்து திருமதி  பத்மநாதன்  மஹாலக்சுமி அவர்களும், திரு இராசரத்தினம் அவர்களும் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார்கள் . தொடர்ந்து திரு  ஆறுமுகம் தில்லைநாதன் அவர்களும் சமாதான நீதவானாக நியமனம் பெற்று தொடர்கிறது . இந்த வரிசையில் கிராமத்தை  சிறப்பித்தவர்களும் மக்கள் சேவையாளர்களுமாக இருந்தவர்கள் வரிசையில் வேலுப்பிள்ளை விதானையார் ,சதாசிவம் விதானையார்,திரு ராசையா விதானையார் ,திரு வீரபாகு உடையார், திரு சு . கனகரத்தினம் சேமன் ,திரு மு .தா .சுப்பிரமணியம் , திரு .இ கா .மார்க்கண்டு கிளாக்கர்  ,திரு சு ஆறுமுகம் ,திருமதி சுப்பிரமணியம் (பூரணக்கா) திரு .மு தாமோதரம்பிள்ளை செயலாளர் ,திரு ஆ  குணநாயகம் சக்கடித்தார் ,திரு சதாசிவம் சக்கடித்தார் , திரு சிவசம்பு பெருமாள் ,திரு சதாசிவம் ஆசிரியர் ,திரு தம்பிபிள்ளை , திரு அருளம்பலம்  ,திரு பொன்னையார் ,திரு சதா நடராசா ,திரு மார்க்கண்டு  பனை தென்னை அபிவிருத்தி கிளை தலைவர் , திரு சோமசுந்தரம் (சின்னர்) என தொடர்கிறது . இப்படியாக எமது கிரமானது சகல வளங்களையும் ,சகல அமைப்புகளையும் ,வணக்கஸ்த்தலங்களையும் , கல்விமான்களையும் , புகழ் படைத்தவர்களையும் கொண்டதாகவும் பரந்த பிரதேசங்களை கொண்டதாகவும் மக்கள் செறிந்ததாகவும் அமைந்த்துள்ளமை பெருமைக்குக்கும் சிறப்புக்கும் உரியதாகும்<ref>நேர்காணல்15.12.2016</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/மீசாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது