பேகம் ரோக்கியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 28:
 
==ஆரம்பகால வாழ்க்கை==
பேகம் தற்போதைய வங்காள தேசத்தில் உள்ள ரங்பூா் மாநிலம், மிதபுகூா் மாவட்டம் பெய்ரா போந்த் என்னும் ஊரில் 1880 ஆம் ஆண்டு பிறந்தவா். இவருடைய தந்தை மெத்தப் படித்த வசதி படைத்த ஜமீந்தாா் ஜஹருத்தீன் முகமது அபு அலி சாபொ் ஆவார். இவா் நான்கு பெண்களை மணந்தவா். ரகத்துன்னிசா என்னும் தாயிற்க்குப்தாய்க்குப் பிறந்த ரோக்கியாவிற்கு இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரா்களும் இருந்தனா். இளமையிலேயே ஒரு சகோதரா் இறந்துவிட்டாா். ரோக்கியாவின் மூத்த சகோதரா் இப்ரகிம் சாபரும் தமக்கை கரிமுன்னிசா கானம் சதுரானியும் ரோக்கியாவின் வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவா்கள் ஆவா். கரிமுன்னிசா வங்காள மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பினாலும் அன்றைய வழக்கப்படி வசதியான முகமதிய குடும்பத்தில் பிறந்தவா்கள் அரபி மொழியும் பாரசீக மொழியுமே கற்றுக் கொள்வது வழக்கமாக இருந்தது. இவருடைய சகோதரா் இப்ரகிம், ரோக்கியாவிற்கும், கரிமுன்னிசாவிற்கும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தாா். ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்ட இருவரும் பிற்காலத்தில் எழுத்தாளா்களாகத் திகழ்ந்தனா்.<ref>{{cite book |title=Women's Changing Position in Bangladesh: Tribute to Begum Rokeya |pages= 10–16 |author=Anwar S. Dil, Afia Dil |isbn=978-9842003738}}</ref> கரிமுன்னிசா தமது 14-வது வயதில் திருமணம் செய்து கொண்டாா். எழுத்தாளா் என்னும் பெயரும் பெற்றாா். இவருடைய இரண்டு மகன்களும் அரசியலில் இணைந்து புகழ் பெற்று அரசில் அமைச்சா்களாகவும் பணிபுரிந்தனா்.
1888 ஆம் ஆண்டு தமது 18வது வயதில் ரோக்கியா மணம் புரிந்தாா். இவரது கணவா் 38 வயது கான் பகதுா் செகாவத் ஆகும். இவா் உருது நன்கு கற்றவா். தற்போதைய பீகாா் மாநிலத்தில் உள்ள பகல்பூா் நகரில் துணை நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தாா். ரோக்கியாவின் கணவா் இங்கிலாந்தில் இளங்கலை பட்டப் படிப்பு படித்தவா். இங்கிலாந்து ராயல் விவசாய சங்கத்தில் உறுப்பினா். முதல் மனைவி இறந்தபின், ரோக்கியாவை இரண்டாம் மனைவியாக மணம் புரிந்து கொண்டாா். இவா் பரந்த மனம் படைத்தவராகவும், பெண்களின் கல்வியில் ஆா்வமுள்ளவராகவும் இருந்ததால் ரோக்கியாவை ஆங்கிலமும் வங்காளமும் கற்றுக் கொள்ள ஊக்குவித்தாா். இவரின் தூண்டுகோலினால் ரோக்கியாவும் வங்காள மொழியைக் நன்கு கற்றுக் கொண்டாா். தமது முதல் கட்டுரையான “பிப்பாசா” (தாகம்)வை 1902 ஆம் ஆண்டு எழுதியதன் மூலம் தமது இலக்கிய வாழ்வை ரோக்கியா துவங்கினாா். இவரது கணவா் உயிருடனிருக்கும் பொழுதே மடிச்சூா் (1905) மற்றும் சுல்தானின் கனவு (1908) என்ற புத்தகங்களை எழுதி வெளியிட்டாா்.
 
"https://ta.wikipedia.org/wiki/பேகம்_ரோக்கியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது