லூர்து நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: நடைப்பெற்ற → நடைபெற்ற (3) using AWB
வரிசை 18:
|population date = 2009
}}
'''லூர்து''' (''Lourdes'') என்பது [[பிரனீசு மலைத்தொடர்|பிரனீசு]] மலைத்தொடர்களின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். இந்நகரம் ஹோத்-பிரெனே மாநிலத்தில், தெற்கு-பிரனீசு மாவட்டத்தில் பிரான்சின் தென் மேற்குப் பகுதியில் பிரான்சு தலைநகர் பாரீசில் இருந்து தெற்கே 850 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நடுவே செங்குத்தானப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கற்கோட்டையானது இந்நகரின் சிறப்பாகும். இது 1858 ஆம் ஆண்டு லூர்து அன்னைத் திருத்தலம் அமைவதற்கு முன்னமே உருவாக்கப்பட்டதாகும். லூர்து நகரம் மலைகளால் சூழப்பட்ட குளிரான பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் அழகிய நகரமாகும். மலையின் மறுபக்கம் [[எசுப்பானியா|ஸ்பெயின்]] நாடு அமைந்துள்ளது.
 
1858 ஆம் ஆண்டு [[பெர்னதெத் சுபீரு|பெர்னதெத்]] எனும் ஆடு மேய்க்கும் பெண்ணிற்கு [[மரியாவின் காட்சிகள்|மரியாள் காட்சி]] கொடுத்ததிற்கு பின்னர் இந்நகர் பிரான்சிலும், உலகம் முழுமைக்கும் பிரபலமானது. அவ்விடத்தில் லூர்து அன்னை திருத்தலம் கட்டப்பட்டுள்ளது. இத்திருத்தலம் இயற்கை சூழலும் அமைதியும் கொண்ட இடமாகும். நிம்மதியாக செபிக்க, தங்க அனைத்து வசதிகளும் கொண்ட அழகிய புனித பயணத் தலமாகும்<ref name=":0">http://www.lourdhu.net/Messagebathtm.htm</ref>. மேலும், உலகின் முதன்மையான புனிதப் பயணம் மற்றும் கிறித்துவ மத சுற்றுலாத் தலமானது.
 
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுமையிலிருந்தும் வருகைத் தரும் அறுபது இலட்சம் வருகையாளர்களின் மூலம், லூர்து நகர் பிரான்சு நாட்டின் சுற்றுலாத் தலங்களில் பாரீசிற்கு அடுத்து இரண்டாமிடத்திலும், அகில உலக கத்தோலிக்க புனித பயணத்தலங்களில் [[உரோம்|ரோமிற்கும்]], புனித பூமிக்கும் அடுத்ததாக மூன்றாமிடத்திலும் அமைந்துள்ளது.
வரிசை 38:
 
=== நடுவண் காலம் ===
பதினான்காம் நூற்றாண்டில் முதன் முதலில் லூர்து நகரானது நான்காம் பிலிப் (''[[:en:Philip_IV_of_France|Philip The Fair]]'') என்பவரது கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பிறகு, நில பிரபுக்கள் பியர் அர்ணோ பியர்ன் மற்றும் அவரது சகோதரர் பியர்ன் ழான் மூலம் ஆங்கிலேயர்கள் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் வரை (1360-1407) தங்கள் கைவசம் வைத்திருந்தனர்.
 
=== சமகாலம் ===
கி.பி.778 ஆம் ஆண்டு வரை, சுமார் 46 ஆண்டுகள் [[:en:Al-Andalus|அல்-அந்தலூஸ்]] இசுலாமியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. எட்டாம் நூற்றாண்டில் லூர்தும், கற்கோட்டையும் மீரட் என்ற உள்ளூர் இசுலாமியத் தலைவர் மற்றும் ப்ராங்க் அரசர் [[சார்லமேன்]] ஆகியோரின் தாக்குதலுக்கு இலக்கானது. இருவருக்குமிடையே நடைப்பெற்றநடைபெற்ற போரின்போது, கோட்டையிலிருந்த மீரட் மனக்குழப்பத்தினால் மனம் மாறி, கோட்டையை ஒப்புவித்துவிட்டு 'லோரஸ்' எனும் பெயரில் திருமுழுக்குப் பெற்று கிறித்துவத்திற்கு மதம் மாறினார். அப்பெயராலேயே, தற்போது இந்நகர் 'லூர்து' என்று அழைக்கப்படுகிறது.
 
நூற்றாண்டு போரின்போது 1360 ஆம் ஆண்டு 'லூர்து நகர்' இங்கிலாந்திற்கு ப்ரெதெனி சமாதான உடன்படிக்கை மூலம் கொடுக்கப்பட்டது. 45 ஆண்டுகள் கழித்து, 1405 ஆம் ஆண்டு, ஆறாம் சார்லஸ் மன்னர் பதினெட்டு மாத காலம் கோட்டையை முற்றுகையிட்டு மீண்டும் பிரான்சின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். பதினாறாம் நூற்றாண்டில், லூர்து நகர் கத்தோலிக்கர்களுக்கும், பிரெஞ்சு சீர்திருத்த திருச்சபையைச் சார்ந்தவர்களுக்கும் இடையே நடைப்பெற்றநடைபெற்ற பிரெஞ்சு மதப் போரினால் கடுமையாக சேதமடைந்தது. 1568 ஆம் ஆண்டு பிரெஞ்சு சீர்திருத்த திருச்சபையின் தலைவரான கபிரியேல், அருகாமை நகரான டார்ப்சை தாக்கினார். அதன்பின் 1592 ஆம் கத்தோலிக்க கூட்டுப்போர்ப்படைகளின் மூலம் கத்தோலிக்க கொள்கை லூர்தில் மீண்டும் நிறுவப்பட்டது. இறுதியில், 1607 ஆம் ஆண்டு லூர்து பிரெஞ்சு பேரரசின் கீழ் வந்தது.
 
1858 ஆம் ஆண்டு வரை லூர்து நகர் சுமார் 4000 மக்கள் கொண்ட ஒரு அமைதியான நகராகவும், அப்ரெஷெஸ், காடெரெட்ஸ், லு சான் சவேர் மற்றும் பக்னெரெ தெ பிகோர் ஆகிய நீர் நிலைகளுக்கு செல்லும் வழிப்பாதையாகவும் இருந்தது.
 
== புனித லூர்து அன்னை ஆலயம் ==
ஆண்டின் மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஐரோப்பா மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து புனிதப் பயணம் மேற்கொள்வோரின் சிறப்பிடமாக லூர்து அன்னை திருத்தலம் விளங்குகிறது. குகையிலிருந்து வெளிவரும் நீருற்று குணமளிக்கும் சிறப்புகள் கொண்டதாக பெரும்பாலான மக்களால் நம்பப்படுகிறது. அதில் 69 குணமளிப்பு சாட்சியங்கள் அதிசயங்களாக திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. 1860 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 20 கோடி பேர் இதுவரை ஆலயத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து இத்திருத்தலத்திற்கு வரவும், க்ரொட்டோ புனித நீரூற்றில் திருமுழுக்கு குளியலுக்கும் பயண ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. மரியாள் பெர்னதெத்துக்கு காட்சி கொடுத்த இடம் க்ரொட்டா என்றும் கெபி என்றும் அழைக்கப்படுகின்றது. அவ்விடம் 9.50 மீ.ஆழமும், 9.85 மீ. அகலமும்,3.80 மீ உயரமும் கொண்டது<ref>http://www.perfettaletizia.it/archivio/servizi/madonna_lourdes/english_massabielle.html</ref>.
 
உலகில் அதிகப்படியான புனிதப் பயணிகளும் பார்வையாளரும் தரிசிக்கும் இடம் இந்தக் 'கெபி' ஆகும். ஒரு வருடத்திற்கு 6 மில்லியன் மக்கள் இங்கு வந்துபோகின்றனர்<ref name=":2">http://jesutamil.ch/news_2008v2/details.php?ID=91</ref>.
 
=== குணமளிக்கும் சாட்சியங்கள் ===
வரிசை 58:
 
=== 150 ஆம் ஆண்டு யூப்ளி கொண்டாட்டம் ===
மரியாள் முதல் காட்சிக் கொடுத்ததன் 150 ஆம் ஆண்டு யூப்ளி கொண்டாட்டம்<ref name=":2" /> பதினொன்றாம் தேதி பிப்ரவரி மாதம் 2008 ஆம் ஆண்டு, 45,000 புனிதப்பயணிகள் குழும நடைப்பெற்றதுநடைபெற்றது. இம்முதல் காட்சி கொடுத்த 150 ஆவது வருட நிறைவு யூபிலி விழாவை ஒரு வருட காலத்திற்குக் கொண்டாடுவதென பிரான்ஸ் ஆயர் மன்றம் தீர்மானித்துச் செயற்பட்டது. 08.12.2007 துவங்கி 08.12.2008 வரை சிறப்பான முறையில் மரியன்னையின் புகழை, அவர் வாழ்ந்த வாழ்க்கை நெறிகளை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், 'மரியாளின் வழியில் கிறிஸ்துவிடம்' அனைவரும் செல்ல வேண்டும் என்றும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன<ref name=":2" />. இந்தக் கொண்டாட்டத்தை உரோமில் இருக்கும் இந்தியக் கர்தினால் பேரருட் பெருந்தகை இவான் டையஸ் (Ivan Cardinal Dias) ஆண்டகை துவக்கிவைத்தார்<ref>[http://www.nilacharal.com/current-affairs/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0/ நிலாச்சாரல்]</ref>. திருத்தந்தை பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பர், இவரைத் தம் திருத்தூதராக அனுப்பி வைத்தார் <ref>[http://www.nilacharal.com/current-affairs/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0/ லூர்து நகர் திருத்தலம்]</ref>.
 
== கோட்டையின் பழைமையும், வரலாறும் ==
வரிசை 64:
லூர்து நகரின் மையத்தில் உயரே அமைந்திருக்கும் கோட்டையானது உரோமையர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
மன்னர் இருபத்தைந்தாம் லூயினால் சிறைக்கூடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 1789 ஆம் ஆண்டு பொதுக் குழு சிறைக்கைதிகளை விடுதலை செய்ய ஆணையிட்டது. பின் நெப்போலியனின் எழுச்சியின்போது, 1803 ஆம் ஆண்டு அக்கோட்டை மீண்டும் சிறைச்சாலையாக செயல்படத்துவங்கியது.
 
778 ஆண்டு சார்லமேன் முற்றுகைக்குப் பிறகு, அக்கோட்டை பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை பிஷோர் பிரபுக்களின் உறைவிடமாக பயன்படுத்தப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டில் பிலிப்பின் அரசாட்சியின் கீழ் வருவதற்கு முன் அவ்விடம் ஷாம்ப்பைன் பிரபுக்களின் கைவசம் வந்தது. 1360 ஆம் ஆண்டு ப்ரெதெனி சமாதான உடன்படிக்கையினால் ஆங்கிலேயரிடம் பறிபோனது. பதினைந்தாம் நூற்றாண்டில் இரண்டு முறை முற்றுகைக்குள்ளானது. பதினேழாம் நூற்றாண்டில் அரச சிறைச்சாலையாகவும், பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு மாநிலச் சிறைச்சாலையாகவும் பயன்படுத்தப்பட்டு, இருபதாம் நூற்றாண்டில் 1921 ஆம் ஆண்டு முதல் பிரனே அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
 
இராணுவ பொறியியல் பணியினால் பழமையான மதிற்சுவர்கள் அழிந்தப்போதும், பழங்கால சிலைகள், காணிக்கைகள், மதிற்சுவர்களின் அடித்தளங்கள் ஆகியன வெளிவந்துள்ளன. அவை அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
வரிசை 74:
 
== சான்றுகள் ==
 
[[பகுப்பு:பிரான்சின் நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லூர்து_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது