டைட்டன் (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typos
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 90:
 
டைட்டன் முதன்மையாக நீர், பனிக்கட்டி, பாறை பொருட்களால் உருவாக்கப்பட்டது.2004 ஆம் ஆண்டு காசினி-ஹைஜென்ஸ் செயற்கைக்கோளின் ஆராய்ச்சிக்கு பின்பே அதன் அடர்த்தியான வளிமண்டலதிற்கு அடியில் துருவ பகுதிகளில் திரவ ஹைட்ரோகார்பன் ஏரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அதன் மேற்பரப்பு இளம் நிலவமைப்பை கொண்டதாகவும் சில மலைகள் மற்றும் விண்கல் பள்ளங்களுடன் அதிக அளவில் சமதளபரப்பை கொண்டது என அறியப்படுகிறது.மற்றும் இது அதி உறைநிலை எரிமலைகளையும் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த கோளானது அதிக அளவில் நைட்ரஜனை கொண்டுள்ளதால் இதன் மேற்ப்பரப்பில்மேற்பரப்பில் மீத்தேன் மற்றும் ஈதேன் மேகங்கள் மற்றும் நைட்ரஜன் நிறைந்த கரிம பனிப்புகை அதிக அளவில் காணப்படுகிறது.மேலும் இது காற்று மற்றும் மழை உட்பட பல மாறுபட்ட காலநிலைகளை கொண்டுள்ளது.எனவே இது பூமியை போல குன்றுகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள்(திரவ மீத்தேன் மற்றும் ஈத்தேன்), மற்றும் கழிமுக பூமி போன்ற மேற்பரப்பு அம்சங்களை கொண்டுள்ளது, மற்றும் பூமியில் இருப்பது போன்று பருவகால வானிலைகளையும் கொண்டுள்ளது. அதன் திரவங்கள் மற்றும் அடர்ந்த நைட்ரஜன் வளிமண்டலத்தில் மீத்தேன் சுழற்சி பூமியின் தண்ணீர் சுழற்சியை ஒத்து குறைந்த வெப்பநிலையில் நடைபெறலாம் என கருதப்படுகிறது.
 
இதிலுள்ள இந்த அம்சங்கள் காரணமாக இது நைட்ரஜனை அடிப்படையாக கொண்ட உயிரினங்கள் இங்கு தோன்றி இருக்கலாம் அல்லது அதற்கான வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இது சூரிய குடும்பத்தில் அதிகமாக கவனிக்கப்படும் நிலவுகளில் ஒன்றாக இது உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/டைட்டன்_(துணைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது