மயாபாகித்து பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: ஹயாம் புரூக் → ஹயாம் வுரூக் (8) using AWB
வரிசை 46:
}}
{{இந்தோனேசிய வரலாறு}}
'''மயாபாகித்து பேரரசு''' (''Majapahit Empire'', [[சாவகம் (மொழி)|சாவகம்]]: ''Karaton Mojopahit'', {{lang-id|Kerajaan Majapahit}}) என்பது, 1293 முதல் 1500கள் வரை, [[சாவகம் (தீவு)|சாவகத் தீவில்]] (தற்போதைய [[இந்தோனேசியா]]) அமைந்திருந்த பேரரசு ஆகும். இந்தோனேசிய மற்றும் தென்கிழக்காசிய வரலாற்றில் உச்சம் பெற்றிருந்த மிகப்பலம் வாய்ந்த பேரரசுகளில் மயாபாகித்து ஒன்றாகும். [[ஹயாம் புரூக்வுரூக்]] எனும் அதன் சக்கரவர்த்தி காலத்தில், (1350 - 1389) அதன் உன்னதமான நிலையில் காணப்பட்ட மயாபாகித்து, [[கயா மடா]] எனும் பேரமைச்சரின் வழிகாட்டலில் இன்றைய [[தென்கிழக்காசியா]]வின் பெரும் பரப்பளவைத் தன்னுடையதாகக் கொண்டிருந்தது. 1365 இல் எழுதப்பட்ட "நகரகிரேதாகமம்" எனும் சாவக நூலின் படி, மயாபாகித் பேரரசு இன்றைய இந்தோனேசியா, [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[புரூணை]], தெற்கு [[தாய்லாந்து]], [[பிலிப்பீன்சு]], [[கிழக்குத் திமோர்]] உட்பட 96 திறைநாடுகளுடன் [[சுமாத்திரா]]விலிருந்து [[நியூ கினி]] வரை பரந்திருந்தது.<ref>[http://www.indonesianhistory.info/map/majapahit.html Majapahit Overseas Empire, Digital Atlas of Indonesian History]</ref> ஆனாலும் மயாபாகித்து பேரரசின் தாக்கங்கள் இன்னும் வரலாற்றாசிரியர்களின் மத்தியில் ஆய்வுக்குரியதாக உள்ளது.<ref name ="M Wood">{{cite journal|title =The Borderlands of Southeast Asia Chapter 2ː Archaeology, National Histories, and National Borders in Southeast Asia |first =Michael|last =Wood|url=http://mercury.ethz.ch/serviceengine/Files/ISN/142914/ichaptersection_singledocument/54578174-4114-4470-a6d4-6fe4a4b376e3/en/Chapter+2.pdf| page =36|accessdate =4 மே 2015}}</ref>
 
இந்தோனேசியாவின் இன்றைய எல்லைகளுக்கு மயாபாகித்து பேரரசின் பண்டைய ஆட்சி எல்லைகளும் ஒரு காரணமாகும்.<ref name=ricklefs>{{Cite book
வரிசை 77:
 
===உருவாக்கம்===
மலாய அரசு 1290 இல் தோற்கடிக்கப்பட்டபின்,<ref>{{Cite book |last1=Spuler |first1=Bertold |authorlink = |author2=F.R.C Bagley | title = The Muslim world: a historical survey, Part 4 | publisher = Brill Archive | pages=252 | url = http://books.google.com.my/books?id=VNgUAAAAIAAJ | isbn = 9789004061965 | year = 1981 }}</ref> இந்தோனேசியப் பகுதியின் பலம்வாய்ந்த அரசாக [[சிங்காசாரி]] அரசு எழுச்சியடைந்தது. மொங்கோலிய அரசின் [[குப்லாய் கான்]], அதை அடிபணிவிக்க எண்ணி, திறைகேட்டு தூதனுப்பினான். சிங்கசாரியின் இறுதிமன்னனான கர்த்தநகரனோ, அதற்கு மறுத்ததுடன், குப்லாய் கானையும் அவமானப்படுத்தி, தூதனை இழிவுசெய்து அனுப்பிவைத்தான். இதற்குப் பழிவாங்குவதற்காக, 1293 இல், குப்லாய் கானின் ஆயிரம் கப்பல்கள் கொண்ட பெரும்படை சிங்கசாரி்யை முற்றுகையிட்டது.
 
[[Image:Harihara Majapahit 1.JPG|thumb|left|upright| [[கேசவார்த்த மூர்த்தி|மாலொருபாகனாகச்]] சித்தரிக்கப்பட்டுள்ள [[ராடன் விஜயன்|கர்த்தராயச மன்னன்]], இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகம்.]]
வரிசை 93:
| year = 1966
| isbn = 9780520050617
}}</ref>{{rp|200–201}} சக ஆண்டு 1215 கார்த்திகை 15ஆம் நாள் (நவம்பர் 10, 1293)<ref name="NGI Trowulan"/> "கர்த்தராயச செயவர்த்தனன்" எனும் பெயரில் மயாபாகித்து பேராரசனாக முடிசூடிக் கொண்ட விஜயன், கர்த்தநகரனின் நான்கு மகள்மாரையும், பின் மலாய் இளவரசி [[தாரா பிதாக்|இந்திரேசுவரியையும்]] மணந்துகொண்டான். ஆரம்பத்தில் பல கலகங்களைச் சந்தித்தாலும், மயாபாகித்துதை மிக உறுதியாக நிறுவிக்கொண்டான் விஜயன். கலகங்களுக்கு அடிப்படையாக இருந்த பழைய ""மகாபதி"யான (பேரமைச்சர், ராஜகுருவை ஒத்த மிகப்பெரும் பதவி) ஃகலாயுதனையும் தூக்கிலிட்டான்.<ref name="Slamet Muljana 2005"/>
 
1309 இல் விஜயன் இறந்தபின் ஆட்சிக்கு வந்த அவன் மகன் [[செயநகரன்]] பெரும் பெண்பித்தனாகவும் கொடுங்கோலனாகவும் இருந்தான். அதனால் அரண்மனை வைத்தியர் தங்கன் என்பவனால் திட்டமிட்டுக் கொல்லப்பட்டான் செயநகரன். அவனை அடுத்து ஆட்சியைப் பொறுப்பேற்கவிருந்த [[காயத்திரி ராஜபத்தினி|இராசமாதா காயத்திரியோ]](விஜயனின் மகாராணி), தன் கணவன் மறைந்த பின் பௌத்த துறவறத்தை ஏற்றிருந்ததால், அரசை ஏற்க மறுத்தாள். இறுதியில் அவள் மகள் [[திரிபுவன விஜயதுங்கதேவி]] அரசுபீடமேறினாள். அவள் காலத்தில் (1336) மகாபதியாகப் பொறுப்பேற்ற [[கயா மடா]] என்பவர் நாட்டை விரிவாக்கும் பெருங்கனவு கொண்டிருந்ததுடன், அதற்காக புகழ்பெற்ற [[கயா மடா#பலாபா சூளுரை|பலாபா சூளுரையையும்]] சபதமெடுத்துக் கொண்டார்.<ref name="JPMajapahit"/>
வரிசை 99:
===பொற்காலம்===
[[File:Majapahit Expansion.gif|thumb|260px|right| பதின்மூன்றாம் நூற்றாண்டில் துரோவுலானில் எழுந்த மயாபாகித்தின் விரிவாக்கமும் வீழ்ச்சியும்]]
திரிபுவனாவின் ஆட்சியின் கீழ், அவளது மதியூகியான மகாபதி [[கயா மடா]]வின் வழிகாட்டலில், அருகிருந்த [[பாலி]] நாடு, மயாபாகித்தின் கீழ் வந்ததுடன்,<ref name=Coedes/>{{rp|234}} மயாபாகித்து பெரும் வளர்ச்சி கண்டது. திரிபுவனாக்கு பின் ஆட்சிக்கு வந்த அவள் மகன் [[ஹயாம் புரூக்வுரூக்]] காலத்தில், தன் காலத்தின் அதியுச்ச நிலையில் புகழோங்கி விளங்கியது மயாபாகித்து.<ref name=Coedes/>{{rp|234}}
 
மயாபாகித்து, பெருமளவு இந்தோனேசிய தீவுக்கூட்ட நாடுகளைத் தன்வசம் கொண்டு வந்துகொண்டிருந்த காலத்தில், அண்டை நாடான சுண்டாவின் இளவரசி "டியா பிதாலோகா சித்திரரேஸ்மியை" மணமுடிக்க முடிவுசெய்தான்.<ref name="end">{{cite book |last=Munoz|first=Paul Michel|title=Early Kingdoms of the Indonesian Archipelago and the Malay Peninsula|publisher=Editions Didier Millet|year=2006|location=Singapore|url= |doi= |pages=279|isbn= 981-4155-67-5}}</ref> சுண்டா மன்னர் அதை நட்புக்கூட்டணி அழைப்பாக ஏற்றுக்கொண்டு, திருமணத்துக்கும் ஒத்துக்கொண்டார். 1357இல் அவர்கள் திருமணத்துக்காக மயாபாகித்து வந்தபோது,<ref name=Coedes/>{{rp|239}} அவர்களை எதிர்கொண்டழைக்க வந்த கயா மடா, சுண்டாவைத் தன் வலையின் கீழ் கொணரக்கூடிய சந்தர்ப்பமாக அதைக் கண்டார். மறுத்த சுண்டா அரசின் குடும்பத்தவர் யாவரும் எதிர்பாராதவிதமாக வெட்டிக்கொல்லப்பட்டனர்.<ref>{{cite book | last = Soekmono | first = Roden | title= Pengantar Sejarah Kebudayaan Indonesia | volume = Vol. 2| edition = 2nd | publisher = Kanisius | year = 2002 | isbn = 9789794132906}}</ref> துரோகமிழைக்கப்பட இளவரசியும் மனமுடைந்துபோய், நாட்டுக்காக தன் இன்னுயிரை நீத்ததாக மரபுரைகள் சொல்கின்றன..<ref>{{cite book | author= Y. Achadiati S, Soeroso M.P.,| title= ''Sejarah Peradaban Manusia: Zaman Majapahit''. | publisher = PT Gita Karya | year= 1988 | location =Jakarta| page=13}}</ref> நகரகிரேதாகமத்தில் சொல்லப்படாதபோதும் [[கயா மடா#புபாத் படுகொலை|புபாத் சதுக்கத்தில் இடம்பெற்ற இப்படுகொலை]], பல சாவக நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
 
கயா மடா மறைந்து சில ஆண்டுகளுக்குப் பின், 1377 இல் பலெம்பாங்கில் இடம்பெற்ற ஒரு கலகத்தை அடக்கிய மயாபாகித்து, சிறீவிசய அரசின் முடிவுக்கும் வழிவகுத்தது.<ref name=ricklefs />{{rp | page=19}} 14 ஆம் நூற்றாண்டில் புதிதாக உருவான சிங்கபுர அரசு, மயாபாகித்து அரசின் கடற்படையை துமாசிக்கில் (இன்றைய [[சிங்கப்பூர்]]) தாக்கியது. எவ்வாறெனினும், 1398 இல் சிங்கபுரம்,, மயாபாகித்தால் சூறையாடி அழித்தொழிக்கப்பட்டது<ref>{{harvnb|Tsang|Perera|2011|p=120}}</ref><ref>{{harvnb|Sabrizain}}</ref><ref>{{harvnb|Abshire|2011|p=19&24}}</ref> அதன் இறுதி மன்னனான இஸ்கந்தர் சா, [[மலாக்கா சுல்தானகம்|மலாகா சுல்தானகத்தை]] அமைப்பதற்காக 1400இல் மலாய்த் தீவுகளுக்குத் தப்பிச் சென்றான்.
 
மயாபாகித்தின் ஆட்சியியல்புகள் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. பாலி - கிழக்கு சாவகம் தவிர அதன் ஆட்சி நேரடியாக வேறெந்த நாட்டிலும் செல்வாக்கு செலுத்தவில்லை என்று சொல்லப்படுகின்றது.<ref name="atlas">Cribb, Robert, ''Historical Atlas of Indonesia'', University of Hawai'i Press, 2000</ref> பெரும்பாலும் திறைசெலுத்தலின் கீழ் மட்டும் மையப்படுத்தப்பட்ட அரச முறைமையின் கீழ், மயாபாகித்தின் ஆட்சி அமைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.<ref name=ricklefs />{{rp|page=19}} மயாபாகித்து மன்னர்களின் அடுத்த அரசுகளின் மீதான படையெடுப்புகளெல்லாம், இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தின் மத்தியில் தாம் மட்டுமே வாணிபப் பேருரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவர்களது பேரவாவைக் காட்டுகின்றது. அதன் எழுச்சிக்காலமே பெருமளவு முஸ்லிம் வாணிபர்கள் இந்தோனேசியாவுக்கு வருகை தந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
===வீழ்ச்சி===
ஹயாம் புரூக்வுரூக் 1389இல் மறைந்ததைத் தொடர்ந்து, அவன் மகள் குசுமாவார்த்தனியின் கணவன் [[விக்கிரமவர்த்தனன்|விக்ரமவர்த்தனுக்கும்]], ஹயாமின் மகன் முடிக்குரிய இளவரசன் வீரபூமிக்குமிடையில் அரசாட்சிக்குப் ப்போட்டி இடம்பெற்றது. இதற்காக இடம்பெற்ற போரொன்றில், வீரபூமி கொல்லப்பட்டதை அடுத்து, விக்கிரமவர்த்தனன் அரசமைத்தான்.<ref name=ricklefs />{{rp|page=18}} விக்கிரமவர்த்தனன் காலத்தில் இடம்பெற்ற சீன இசுலாமிய ஆளுநனான [[செங் ஹே]]யால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளால், வட சாவகம் செங்ஹே வசமானதுடன், அங்கு சீன மற்றும் இசுலாமியக் குடியிருப்புகள் பெருமளவு உண்டாயின.
 
[[File:Suhita.jpg|thumb|left|upright| மயாபாகித்து அரசி [[சுகிதா]]வின் தெய்வமாகச் சித்தரிக்கப்பட்ட சிற்பம்.]]
விக்கிரமவர்த்தனுக்குப் பின், அவனது ஆசைநாயகியான வீரபூமியின் மகளுக்குப் பிறந்த "[[சுகிதா]]" 1426இல் ஆட்சிக்கு வந்தாள்<ref name=Coedes/>{{rp|242}} அவள் இறந்த பின் 1447இல், அவள் சகோதரன் கர்த்தவிசயனும்,<ref name=Coedes/>{{rp|242}} அவனுக்குப் பின் 1451இல் இராயசவர்த்தனன் என்பவனும், ஆட்சிக்கு வந்தனர். இராயசவர்த்தனன் இறந்த 1453இலிருந்து மூன்றாண்டுகள், அரசரில்லாமல் மயாபாகித்து அரசியலில் குழப்பகரமான சூழ்நிலை நிலவியது. பின் கர்த்தவிசயனின் மகனான கிரீசவர்த்தனன் 1456 முதல் 1466 வரை ஆட்சிபுரிய, 1466இல் "சிங்கவிக்கிரமவர்த்தனன்" ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்டான். மயாபாகித்து அரசில் உரிமைகோரி, இன்னொரு இளவரசன் கர்த்தபூமி அவனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்தான். இதனால், மயாபாகித்து பகுதி, கர்த்தபூமிக்கும், பழைய [[கேடிரி அரசு|கேடிரி]] நாட்டின் தலைநகர் அமைந்திருந்த "டாகா" பகுதி சிங்கவிக்கிரமவர்த்தனுக்கும் பங்கிடப்பட்டது. அவனுக்குப் பின், அவன் மகன் ரணவிசயன் 1474இல் ஆட்சிக்கு வந்தான்.
 
பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மயாபாகித்து பேரரசின் மேற்குப் பகுதியில் உருவான மலாக்கா சுல்தானத்தின் எழுச்சியை, மயாபாகித்தால் தடுக்க முடியவில்லை. எனினும் இசுலாமிய வணிகர்களுக்கு வாணிப உரிமைகளைக் கொடுத்து, கர்த்தபூமி, ஓரளவு மயாபாகித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டான். இதனால், மயாபாகித்தில் இசுலாமின் வளர்ச்சி தீவிரமடைந்தது. சாவகத்தின் மரபார்ந்த சைவ - பௌத்த நெறிகள் வீழ்ச்சியடைவதைத் தாங்க முடியாத அம்மதத்தினர், கர்த்தபூமியை விட்டுவிலகி, ரணவிசயனை நோக்கி நகர்ந்தனர்.
 
[[Image:Muzium Negara KL38.JPG|thumb|right| கோலாலம்பூரில் உள்ள மயாபாகித்து கப்பலொன்றின் மாதிரியுரு.]]
 
1478இல் மயாபாகித்து சாம்ராச்சியம் சரிவடைய ஆரம்பித்தது என்று கருதப்படுகின்றது. <ref name=ricklefs />{{rp|pages = 37 and 100}}) அவ்வாண்டிலேயே, தளபதி உடாரன் தலைமையில் படையெடுத்துச் சென்ற ரணவிசயன், கர்த்தபூமியைக் கொன்றான்.<ref>Pararaton, p. 40, " .... bhre Kertabhumi ..... bhre prabhu sang mokta ring kadaton i saka sunyanora-yuganing-wong, 1400".</ref><ref>மேலும் பார்க்க: Hasan Djafar, Girindrawardhana, 1978, p. 50.</ref> டெமாக் சுல்தானத்திலிருந்து கர்த்தபூமிக்கு படையுதவி வழங்கப்பட்டபோதும், அது அவர்களை வந்தடையும் முன்பே, கர்த்தபூமி கொல்லப்பட்டிருந்தான். எனினும், தெமாகுப் படையால் ரணவிசயனின் படை பின்வாங்கச் செய்யப்பட்டபோதும், தோல்வியை ஏற்கமறுத்த ரணவிசயன், தான் பிரிந்திருந்த மயாபாகித்தை ஒன்றிணைத்திவிட்டதாக உரிமைகோரினான். <ref name="SNI448">Poesponegoro & Notosusanto (1990), pp. 448–451.</ref> கிரீந்திரவர்த்தனன் எனும் பெயரில் முடிசூடிக் கொண்ட ரணவிசயன், 1474 இலிருந்து 1498 வரை மயாபாகித்தை ஆண்டபோதிலும், கர்த்தபூமியின் கொடிவழியில் வந்த தெமாகு சுல்தானகத்தால் அடிக்கடி தாக்கப்பட்டது தலைநகர் டாகா.
 
எதிர்பாராவிதமாக, தன் தளபதி உடாரனால், 1498இல் ரணவிசயனின் ஆட்சிகவிழ்க்கப்பட்டான். இதற்குப் பின்பு, டெமாக்கிற்கும், டாகாவிற்கும் இடையே போரேதும் நடக்கவில்லை என்று சொல்லப்படுகின்றது. உடாரன், தெமாகு சுல்தானகத்துக்குத் திறை செலுத்த ஒத்துக்கொண்டது இதற்கொரு காரணமாகலாம்.
வரிசை 128:
| year = 1983
| last1 = Hefner | first1 = R. W.
}}</ref>
 
கர்த்தபூமிக்கு அவனது சீன ஆசைநாயகியிடம் பிறந்த "ராடன் பதாக்" எனும் டாகா இளவரசனின் கீழ் [[தெமாகு சுல்தானகம்]] வந்ததுடன், அவன் தன்னை மயாபாகித்தின் சட்டபூர்வ வாரிசு என்று உரிமைகோரினான். இன்னொரு கருதுகோளின்படி, முன்பு மயாபாகித்தின் சிற்றரசாக இருந்த தெமாகு, உத்தியோகபூர்வ மயாபாகித்து வாரிசான ராடன் பதாக்கை இலகுவாக தன்வசம் உள்ளீர்த்துக் கொண்டது எனலாம். [[தெமாகு சுல்தானகம்|தெமாகு]], தன்னை இந்தோனேசியாவின் முதலாவது இசுலாமிய சுல்தானகமாக நிறுவிக் கொண்டதுடன் பின்பு பிராந்திய வல்லரசாகவும் எழுந்தது. மயாபாகித்து பேரரசு வீழ்ந்த பின்னர், சாவக இந்து அரசுக்களாக, கிழக்குச் சாவகத்திலிருந்த பிளாம்பங்கனும், மேற்குச் சாவகத்து சுண்டா அரசிருக்கையான பயாயாரனும் மட்டுமே எஞ்சின. பெரும்பாலான இந்துச் சமூகங்கள், பாலிக்கு இடம்பெயர்ந்ததுடன், இந்துக்களின் மிகச் சிறிய குடித்தொகை ஒன்று, ரெங்கர் மலைப்பகுதியில் இன்றும் எஞ்சியிருக்கின்றது.
வரிசை 144:
 
===பண்பாடு===
[[File:Wringin Lawang, Trowulan.jpg|thumb| "விரிங்கின் லவாங்" - துரோவுலானிலுள்ள பதினைந்தரை அடி உயரமான செங்கல் வாயில், ஏதோவொரு முக்கிய கட்டிடத்தின் வாயிலாக இருந்திருக்கலாம்.]]
 
தலைநகர் துரோவுலான் அதன் பிரமாண்டமான விழாக்களாலும் அழகாலும் பலரையும் கவர்ந்திருந்தது. இந்து, பௌத்தம் ஆகியவற்றின் மையமாக விளங்கிய துரோவுலானின் மன்னன், [[சிவன்|சிவபிரான்]], [[புத்தர்]] ஆகியோரின் இணைந்த அவதாரமாகக் கருதப்பட்டான். "நகரகிரேதாகமத்தில்" இசுலாம் பற்றிய குறிப்புகள் காணப்படாவிடினும், அக்காலத்தில் சில முசுலீம்களும் துரோவுலானில் இருந்திருக்கலாம்.<ref name=ricklefs />{{rp|page=19}}
வரிசை 158:
| publisher = Cambridge University Press
| series = [[Hakluyt Society]]
}}</ref>
 
[[File:Golden Celestial Nymph of Majapahit.jpg|left|thumb|upright| கருணைநிறை "பிடாதாரி மயாபாகித்து" - மயாபாகித்தின் செல்வச்செழிப்பைச் சுட்டும் வண்ணம் பொன் அணங்கு வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ள மயாபாகித்து நகர்த்தெய்வம்.]]
வரிசை 167:
 
[[File:RA 3540013.JPG|thumb|ரெகோவாங்கி கோயிலிலுள்ள சிற்பங்கள்]]
கிழக்கிந்தியப் பல அரசின் செல்வாக்கு, மயாபாகித்தில் காணப்பட்டது.<ref>Encyclopedia of world art by Bernard Samuel Myers p.35-36</ref> முந்தைய சிங்கசாரி, கேடிரி சாவக அரசுகளின் கலையின் தொடர்ச்சியாக மயாபாகித்தின் கலைநுட்பம் காணப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டு சாவகச் சிற்பங்களுடன் ஒப்பிடும் போது, இவற்றில் இந்தியச் சாயலை சற்று அதிகமாகவே காணமுடிகின்றது. அரசர் - அரசியரை தெய்வச் சாயலில் செதுக்கும் மரபும் காணப்பட்டது.. ராடன் விஜயனின் மாலொருபாகன் சிற்பம், திரிபுவனாவின் பார்வதி சிற்பம் என்பன இதற்கு உதாரணமாகும்.
 
[[File:Pair of door guardians SF Asian Art Museum.JPG|thumb|left| கோயிலொன்றின் வாயிற்காவலர்கள், 14ஆம் நூற்றாண்டு.]]
வரிசை 173:
 
[[File:Candi Jabung B.JPG|thumb|upright|கிழக்கு சாவகத்திலுள்ள சண்டி யாவுங் கோயில்]]
யிங்யாயில் மயாபாகித்து கோட்டை பற்றிய சித்தரிப்புக்களும் உள்ளன.. செங்கற்களாலான அரண்மனையும், மரத்தாலான தரையும், இருதளத்திலமைந்த அரச மாளிகையும் அதில் சிறப்புறச் சொல்லப்படுகின்றன.<ref name=yingyai /> சாதாரன வீடுகள் ஓலை வேய்ந்தனவாக இருந்ததையும், செங்கல்லாலான களஞ்சிய அறைகள் இருந்ததும், அவற்றின் மேலேயே கூரை வேய்ந்து மக்கள் வாழ்ந்ததையும் அது வர்ணிக்கின்றது.
 
மயாபாகித்து ஆலயங்கள், கிழக்கு சாவக மரபில் அமைந்தவை. மெலல்லிய உயரமான ஆலயங்களே பொதுவானவை. இந்துக் கோயில்கள், கனவுரு வடிவிலும், பௌத்த விகாரங்கள், கோள வடிவிலும் காணப்பட்டன. செங்கல் முதலானவற்றால் இவை அமைக்கப்பட்டன.<ref name="Schoppert1997">{{cite book|author=Schoppert, P., Damais, S.|title=Java Style|year=1997|publisher=Periplus Editions|editor=Didier Millet|location=Paris|pages=33–34|isbn=962-593-232-1}}</ref> கிழக்கு சாவகத்தின் உயரமான கோயிலாகக் கருதப்படும் "சண்டீ பெனதாரன்" ஹயாம் புரூக்வுரூக், அடிக்கடி வரும் "பலா கோயில்" என்று நகரகிரேதாகமம் சொல்கின்றது.
 
[[File:Bajang Ratu Gate Trowulan.jpg|left|upright|thumb|பதினாறரை மீற்றர் உயரமான பயாங் ரது வாயில், துரோவுலான்.]]
வரிசை 182:
 
==ஆட்சி==
ஹயாம் புரூக்கால்வுரூக்கால் உருவாக்கப்பட்ட ஆட்சியதிகார அமைப்பு, உறுதியானதாக விளங்கியதுடன், மயாபாகித்து வரலாற்று முழுவதும் மாறாமலே காணப்பட்டது.<ref name="SNI451">Poesponegoro & Notosusanto (1990), hal. 451–456.</ref> மன்னனே பெரும் அதிகாரங்களைக் க்கொண்டிருந்ததுடன், அவன் பூமியில் வாழும் கடவுளாகக் கருதப்பட்டான். மன்னனின் நெருங்கிய உறவினர்கள், பெரும்பதவிகளை அனுபவித்ததுடன், பின்வருவோர், மயாபாகித்துஹ் அரசவையை அலங்கரித்தனர்:
:* ''ராக்ரியான் மகாமந்திரி கத்ரிணி" -மன்னனின் வாரிசு
:* ''ராக்ரியான் மந்திரி ரீ பகீரா-கிரான்'', - நாளாந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சரவை.
வரிசை 189:
 
''ராக்ரியான் மந்திரி ரீ பகீரா-கிரான்'' உடன், "ராக்ரியான மகாபதி" எனும் பேரமைச்சர்களும் அங்கம்வகித்தார்கள். இவர்கள் அனைவரும் இணைந்தே நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றைக் கண்காணித்தார்கள். தர்மதியாக்சர்களுள், "தர்மதியாக்சர் ரிங் கசேவான்களும்" (அரச சைவப் பூசகர்கள்), "தர்மதியாக்சர் ரிங் கசோகதன்களும்" (அரச பௌத்தப் பூசகர்கள்) இருந்தனர். இவர்கள் இருவரும் தத்தம் மதநெறிகளை மயாபாகித்தில் ஒழுங்கமைத்து வந்தனர். இவர்களைத் தவிர, அரச குடும்பத்தவரை அங்கத்தவராகக் கொண்ட "பத்தாரா சப்தப்பிரபு"' எனும் ஆலோசனைச் சபையும் அமைந்திருந்தது.
[[File:Parvati Majapahit 2.JPG|thumb|right| [[பார்வதி]]யாகச் சித்தரிக்கப்பட்டுள்ள [[திரிபுவன விஜயதுங்கதேவி]]யின் சிற்பம். இவளே [[ஹயாம் புரூக்வுரூக்]]கின் தாய் ஆவாள்.]]
மயாபாகித்து சிற்றரசுகள் "பாதுகா பத்தாரா" என்போரால் ஆளப்பட்டன. இவர்களுக்கு மாமன்னனுக்கு அடுத்த பட்டமாகக் கருதப்படும் "ப்ரே" என்பது வழங்கப்பட்டிருந்தது. ஹயாம் புரூக்வுரூக் காலத்தில், ப்ரேக்களால் ஆளப்பட்ட இத்தகைய பன்னிரு மாநிலங்கள் அமைந்திருந்தன.
 
==மயாபாகித்து மன்னர் பட்டியல்<ref name=ricklefs/>==
 
 
{| class="wikitable"
வரி 205 ⟶ 204:
| [[திரிபுவன விஜயதுங்கதேவி|சிறீ கிதார்யா]] || திரிபுவன விஜயதுங்கதேவி || 1328 - 1350
|-
| [[ஹயாம் புரூக்வுரூக்]] || சிறீ இராயசநகரன் || 1350 - 1389
|-
| [[விக்கிரமவர்த்தனன்]] || || 1389 - 1429
வரி 245 ⟶ 244:
[[பகுப்பு:முன்னாள் பேரரசுகள்]]
[[பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள்]]
[[பகுப்பு:இந்துப் பேரரசுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:தீவு நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மயாபாகித்து_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது