"ஹம்பிறி போகார்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பின்னர் தனது சிறுவயது நண்பன் பில் பிராடி ஜூனியரிடம் நட்பினை புதுப்பித்தார். சீனியர் ப்ராடி திரைத்துறை தொடர்புகளோடு இருந்தார். அவர் வேர்ல்ட் பில்ம்ஸ் எனும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்த பொழுது போகார்ட் அந்நிறுவனத்தில் ஒரு அலுவலக பணிக்கு சேர்ந்தார். அங்கே அவர் திரைக்கதை எழுதுதல், இயக்குதல், தயாரித்தல் என பல்வேறு பணிகளை முயற்சித்தார். ஒன்றில் கூட அவரால் பிரகாசிக்க முடியவில்லை.
 
ப்ராடியின் மகள் ஆலிஸ் ப்ராடி ரூயின்ட் லேடி என்கிற ஒரு மேடை நாடகத்தினை இயக்க அதன் மேடை மேலாளராக பணியாற்றினார் போகார்ட். சில மாதங்களுக்குப் பின்னர் ஆலிஸின் ட்ரிப்டர் என்ற நாடகத்தின் ஒரு ஜப்பானிய சர்வராக நடுங்கிக்கொண்டே தனது முதல் வசனத்தை பேசினார் போகார்ட். தொடர்ந்து ஆலிஸ் ப்ராடியின் பல்வேறு நாடகங்களிலும் நடித்தார் போகார்ட். நடிகர்களின் நீண்ட பின்னிரவுகள் போகார்டுக்கு பிடித்திருந்தது. மேடையில் ஒரு நடிகருக்கு கிடைக்கும் கவனம் போகார்டுக்கு நிறையவே பிடித்திருந்தது. அவர் சொன்னார் "பிறவியிலேயே நான் ஒரு அசமந்தம், நடிப்பு தான் எனக்கு தகுந்த தொழில் என்று முடிவு செய்தேன்." தனது பெரும்பாலான நேரத்தை ஸ்பீக்ஈசிகளில்(ரகசிய மதுபானக் கடைகள்) செலவிட்டு ஒரு பெரும் குடிகாராக மாறிப்போனார். இந்த சந்தர்பத்தில்சந்தர்ப்பத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இவரின் உதடு பிளவுபட்டிருக்க வேண்டும். இது மிக சரியாக லூயிஸ் ப்ரூக்ஸின் கருத்தை ஒத்திருக்கிறது.
 
போகார்ட் நடிப்பு என்பது ஒரு அகவுரமான தொழில் என்று கூறி வளர்க்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும் மேடை நாடகங்களில் நடிப்பதை விரும்பினார். ஒருபோதும் நடிப்புக்கலையை முறையாக கற்றவர் இல்லை என்றாலும் விடாமுயற்சியுடன் சீராக தனது திறனை கூர்தீட்டிக்கொண்டே வந்தார். 1922 முதல் 1935 வரை பிராட்வே நிறுவனத்தின் குறைந்தது பதினேழு நாடகங்களில் நடித்திருந்தார். சிறுவனாகவோ இரண்டாம்கட்ட காதலராகவோ வரவேற்பறை நகைச்சுவை நாடகங்களில் நடித்தார். இவர்தான் டென்னிஸா யாராவது ? என்கிற வார்த்தையை முதன் முதலாக மேடையில் கேட்டது. அலெக்சாண்டர் உல்கோட் போகார்டின் ஆரம்பகால பணிகளை பார்த்துவிட்டு "வழக்கமாக கருணையோடு குறிப்பிடப்படும் பற்றாக்குறை" என்று எழுதினார். சில விமர்சனங்கள் கருணையோடு இருந்தன. போகர்ட் ஆரம்ப காலத்தில் தனக்கு வாய்த்த துக்கடா வேடங்களை வெறுத்தார். அவற்றை வெள்ளை பான்ட் வில்லி பாத்திரங்கள் என்று அழைத்தார். லின் ஸ்டார்லிங் எழுதிய மீட் தி வைப் என்கிற நாடகத்தில் பதின்ம வயது பத்திரிகையாளர் கிரிகோரி பிரவுனாக நடித்தார் போகார்ட். இந்நாடகம் நவம்பர் 26, 1923 முதல் ஜூலை 1924 வரை 232 முறை கிளா அரங்கில் வெற்றிகரமாக மேடையேறியது.
4,218

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2760005" இருந்து மீள்விக்கப்பட்டது