வை. மு. கோதைநாயகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 64:
1930 களில் அம்மையார் 'டாக்கி' என்று அக்காலத்தில் சொல்லப்பட்ட திரைப்படத்துறையிலும் முத்திரை பதித்துள்ளார். வை.மு.கோ.அம்மையார் திரைப்படத் தணிக்கைக் குழுவின் உறுப்பினராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார். அவர் தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்தபோது, தாம் தணிக்கை செய்த காட்சிகள் மீண்டும் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளனவா என்பதை அறிந்து கொள்ள அத்திரைப்பட அரங்கிற்குத் தன்னை யாரும் அறியாமல் இருக்கத் தலையில் முக்காடிட்டுக் கொண்டு சென்று படம் பார்ப்பது வழக்கம். 'அதிஷ்டம்' என்ற திரைப்படத்தில் தான் தணிக்கை செய்த காட்சிகள் மீண்டும் திரையிடப்பட்டிருப்பதை அறிந்து அப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய அனுப்பினார். இவ்வாறு தாம் செய்யும் பணிகளை மிகுந்த ஈடுபாட்டுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் செய்தார்.
 
கோதை நாயகியின் நாவல்கள் பல பிற்காலத்தில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. அவரது 'அனாதைப் பெண்' என்ற நாவலை ஜுபிடர் பிக்ஸர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டது. அம்மையாரின் 'தயாநிதி' என்ற நாவல் [[சித்தி (திரைப்படம்)|சித்தி]] என்ற பெயரில் வெளிவந்து மிகுந்த புகழ்ப்புகழ் பெற்றது. மேலும் [[ராஜமோகன்]] (1937), [[தியாகக்கொடி]], [[நளினசேகரன்]], (1966) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. ‘சித்தி’ படத்துக்கான சிறந்த 'கதையாசிரியர் விருது' கோதைநாயகிக்கு அவர் இறந்த பின் வழங்கப்பட்டது.
 
==பொதுத் தொண்டுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வை._மு._கோதைநாயகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது