கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
*கி.பி. 318இல் ஆரியுசு (Arius) என்பவர் இன்னொரு பிளவுக்கு வழிவகுத்தார். "ஆரியுசு கொள்கை" (Arianism) <ref>[http://en.wikipedia.org/wiki/Arianism ஆரியுசு கொள்கை]</ref> என்று அழைக்கப்படும் இக்கோட்பாட்டின்படி, கிறித்தவம் "[[தந்தையாம் கடவுள்|தந்தை]]" என்று அழைக்கும் கடவுள் தம் "[[மகனாகிய கடவுள்|மகன்]]" இயேசுவைவிட உயர்ந்தவர். தந்தைக் கடவுள் தொடக்கமும் முடிவும் இன்றி எக்காலமும் இருப்பவர்; ஆனால் "மகன்" என்னும் [[இயேசு கிறித்து|இயேசு]] தந்தையால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தெய்வப்பண்போடு "படைக்கப்பட்டார்"; படைப்புப் பொருள் என்னும் விதத்தில் இயேசு தம்மைப் படைத்த தந்தையை விடக் குறைந்தவரே. - திருச்சபை இக்கொள்கையைக் கண்டித்தது. திருச்சபைக் கொள்கைப்படி, [[இயேசு கிறித்து|இயேசு]] தம் தந்தையாகிய கடவுளோடு எந்நாளும் இருந்துவருகிறார். இருவரிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. இருவரும் கடவுள் தன்மையில் ஒருவரொருவருக்கு சமநிலையில் உள்ளனர். இயேசு தந்தையின் படைப்பு என்பது தவறு. இயேசு பற்றிய சரியான பார்வையை கி.பி. 325இல் கூடிய முதலாம் நிசேயா சங்கம் வரையறுத்தது.<ref>[http://en.wikipedia.org/wiki/First_Council_of_Nicaea முதலாம் நிசேயா சங்கம் - ஆரியுசு கொள்கை கண்டனம் செய்யப்படல்]</ref>
 
*கி.பி. 1054இல் "பெரும் பிளவு" ("Great Schism") என்று அறியப்படுகின்ற "கிழக்கு-மேற்கு பிளவு" (East-West Schism) நிகழ்ந்தது <ref>[http://en.wikipedia.org/wiki/East-West_Schism கிழக்கு-மேற்கு பிளவு]</ref>. கி.பி. 70இல் எருசலேம் நகர் அழிந்ததிலிருந்தே கிறித்தவத்தின் மைய இடம் உரோமையாக மாறிற்று. அந்தியோக்கியா, அலெக்சாந்திரியா என்னும் பெருநகர்களில் கிறித்தவம் வலுப்பெற்றிருந்த போதிலும் உரோமையின் முக்கியத்துவம் மேலோங்கியது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. உரோமைப் பேரரசின் தலைநகர் என்னும் அளவிலும், தொடக்க காலக் கிறித்தவக் குழு உரோமையில் குடியேறியிருந்தது என்னும் அளவிலும் உரோமை முக்கியத்துவம் பெற்றது. மேலும் தொடக்க காலத் தலைவருள் ஒருவராகிய [[புனித பவுல்]] உரோமையில் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்நீத்தார். அதுபோலவே [[புனித பேதுரு|புனித பேதுருவும்]] அங்கு இறந்தார். பேதுரு [[இயேசு|இயேசுவால்]] தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரு திருத்தூதர்களுள் முதல்வராகக் கருதப்பட்டார்; உரோமையின் ஆயராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். எனவே அவரின் வழிவந்த உரோமை ஆயர்கள் பிற கிறித்தவக் குழுக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். உரோமை நகர் படிப்படியாக முக்கியத்துவம் இழந்த காலக்கட்டத்தில்காலகட்டத்தில் உரோமைப் பேரரசின் கீழைப் பகுதியாகிய பைசான்டியம் (Byzantium) முக்கியத்துவம் பெற்றது. அங்கே கான்சுதாந்திநோபுள் (Constantinople) என்னும் புதிய துணைத் தலைநகர் உருவாயிற்று. அந்நகரும் கிறித்தவ சபைகளுள் வலிமை பெற்றது. ஆனால் மேற்குப் பகுதியில் அமைந்த உரோமைக்கும் கிழக்குப் பகுதியில் அமைந்த கான்சுதாந்திநோபுளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு [[கிறித்தவ இறையியல்|இறையியல்]] காரணங்களும் இருந்தன. பல ஆண்டுகளாக நிலவிய இழுபறி 1054இல் பெரும் பிளவாக வெடித்தது. திருச்சபையும் கிழக்கு-மேற்கு என்று பிரிந்தது. மேற்கு சபை [[கத்தோலிக்க திருச்சபை|"உரோமை கத்தோலிக்க திருச்சபை"]] என்றும் கிழக்கு சபை ''ஆர்த்தடாக்சு திருச்சபை'' அல்லது ''[[கிழக்கு மரபுவழி திருச்சபை|மரபுவழி திருச்சபை]]'' (Orthodox Church) என்றும் பெயர் பெற்றன.
 
*கி.பி. 1517இல் [[புரட்டஸ்தாந்து]] பிளவு நிகழ்ந்தது <ref>[http://en.wikipedia.org/wiki/Protestant_Reformation புரட்டஸ்தாந்து சீர்திருத்தம்]</ref>.