பூட்டானின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo |
|||
வரிசை 2:
'''[[பூட்டான்|பூட்டானின்]] வரலாறு''' துவக்கத்தில் [[தொன்மவியல்|தொன்மவியலை]] அடிப்படையாகக் கொண்டு தெளிவில்லாது உள்ளது. இங்குள்ள சில கட்டமைப்புக்களைக் கொண்டு இங்கு கி.பி 2000ங்களிலேயே மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன. செவிவிழிக் காதைப்படி இதனை கூச் பிகாரின் அரசர் சங்கல்திப் கி.பி ஏழாம் நூற்றாண்டுகளில் ஆண்டார்.<ref>{{cite book|title=Geography of a Himalayan Kingdom: Bhutan|year=2001|publisher=Concept Publishing|isbn=978-8170228875|page=1|last=Fraser|first=Neil|first2=Anima|last2=Bhattacharya|last3=Bhattacharya|first3=Bimalendu|url=https://books.google.com/books?id=OzLsd5nvzGwC&q=sangaldip#v=snippet&q=sangaldip&f=false}}</ref> ஆனால் இங்கு 9ஆம் நூற்றாண்டில் [[திபெத்திய பௌத்தம்]] அறிமுகமானபிறகே வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கின்றன. அந்த நூற்றாண்டில் [[திபெத்து|திபெத்தில்]] நடந்த கொந்தளிப்புகளால் துரத்தப்பட்ட பல [[துறவி]]கள் பூட்டானுக்கு வந்து குடியேறினர். 12ஆம் நூற்றாண்டில் ''துருக்பா காக்யூபா'' பள்ளி நிறுவப்பட்டது. இது திபெத்திய காக்யூபா பள்ளியின் கிளையாகும். இன்றுவரை இது பூட்டானின் பௌத்த சமயத்தில் முதன்மை இடம் பெற்றுள்ளுள்ளது. நாட்டின் அரசியல் வரலாறு இந்த சமய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நாட்டில் உள்ள பல பௌத்த பள்ளிகள் மற்றும் விகாரங்களுக்கிடையே இருந்த தொடர்பாடலே அரசியலை முன்னிறுத்தியது.<ref name=bn>[https://www.state.gov/r/pa/ei/bgn/35839.htm#history "Background Note: Bhutan"]. [[U.S. Department of State]] (March 2008).</ref>
==கீழ்படியாத நாடு==
தங்கள் நாட்டு வரலாற்றில் முழுமையும் [[பூட்டான் சுதந்திரம்|iசுதந்திரமாகவே இருந்த]] ஒருசில நாடுகளில் பூட்டானும் ஒன்று. இந்நாட்டை எவரும் வென்றதில்லை, ஆக்கிரமித்தது இல்லை, அல்லது வெளி அதிகாரங்கள் ஆட்சி செலுத்தியதுமில்லை. பூட்டான் 7ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரை [[காமரூப பேரரசு]] அல்லது [[திபெத்தியப் பேரரசு]] கீழ் இருந்ததாக யூகங்கள் இருந்தாலும் இதற்கான உறுதியானச் சான்றுகள் இல்லை. வரலாற்றுப் பதிவுகள் தெளிவாக கிடைக்கும்
==பூட்டான் ஒருங்கிணைப்பு==
1616இல் மேற்கு திபெத்திலிருந்து வந்த ''லாமா'' சப்துருங் ரின்பொச்சே என அறியப்பட்ட [[சப்துருங் இங்கவனாக் நாம்கியால்]] மூன்றுமுறை திபெத்திய தாக்குதல்களை முறியடித்தார். சண்டையிட்டு வந்த பௌத்தப் பள்ளிகளை அடக்கி, டிசா யிக் எனப்படுகின்ற சிக்கலான, முழுமையான சட்ட நெறியை உருவாக்கி தம்மை அரசராக வரித்துக்கொண்ட இவரே பூட்டானின் ஒருங்கிணைப்பிற்கு வழிவகுத்தார்.
|