போயிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
போயிங் நிறுவனத்தின் புகழ்பெற்ற பயணிகள் விமானமான [[போயிங் 247]] [[1933]] ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விமானம் நவின பயணிகள் வானூர்திகளின் முதல் வடிவாக நோக்கப்படுகிறது. இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட இவ்வானூர்தி அக்காலகட்டத்தில் வேகமான விமானமாகவும், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ஒரு இயந்திரத்தில் பறக்கும் வல்லமை பெற்றதாகவும் விளங்கியது. போயிங் நிறுவனம் தயாரித்த 60 இவ்வகை விமானங்களை அதன் சொந்த கிளை நிறுவனமான [[போயிங் வான்வழி போக்குவரத்து நிறுவனம்]] மட்டுமே பயன்படுத்தியது. இதன் விளைவாக வினைதிறனற்ற மற்ற பலவகை விமானங்களை மட்டுமே நம்பி வணிகம் செய்து வந்த பல வான்வழி போக்குவரத்து நிறுவனங்கள் நலிவடைந்தன. [[வர்த்தக தனியுரிமை]]யை எதிர்க்கும் அமெரிக்க அரசாங்கம் 1934 ஆம் ஆண்டு நலிவடைந்த நிறுவனங்களை காப்பாற்ற [[ஏர் மெயில் சட்டத்தை]] நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி வானூர்தி உற்பத்தியில் ஈடுபடும் எந்த நிறுவனமும் வான்வழி போக்குவரத்து வணிகம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக போயிங் நிறுவனம், மூன்று சிறிய நிறுவனமாக பிரிக்கப்பட்டது. அவையாவன [[போயிங் வானூர்தி]] நிறுவனம், [[யுனைடட் வான்வழிகள்]] நிறுவனம், மற்றும் [[யுனைடட் வானூர்தி மற்றும் போக்குவரத்து கழகம்]].
 
போயிங் நிறுவனம் [[பான் அமெரிக்கன் உலக வான்வழிகள்]] நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்ததின்படி அட்லாண்டிக் கடலை கடந்து செல்லவல்ல பயணிகள் விமானங்களை உருவாக்கும் முயற்சியில், [[போயிங் 314 கிளிப்பர்]] என்ற புதிய வானூர்தி வடிவமைக்கப்பட்டது. போயிங் 314 கிளிப்பர் வானூர்தி தனது முதல் பயணத்தை ஜுலை 1938 ஆம் ஆண்டு துவக்கியது. அன்றைய காலக்கட்டதில்காலகட்டத்தில் மிகப்பெரிய வானூர்தியான இவ்வூர்தி, சுமார் 90 பயணிகளை கொண்டு செல்லும் திறன் பெற்றது. இவ்விமானம் ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய ராச்சியத்திற்கும் இடையே இயக்கப்பட்டது.
 
[[1938]] ஆம் ஆண்டு, போயிங் நிறுவனம் தயாரித்த [[போயிங் 307]] விமானம். முதன்முதலாக காற்றழுத்த கட்டுப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட வானூர்தியாகும். இவ்விமானம் சுமார் 2000 அடிகளுக்கு மேல் பறக்கும் திறன் வாய்ந்ததால், பூவியின் இயற்கை சீற்றங்களால் பாதிப்படையாமல் பயணம் செய்ய வழிவகை செய்தது.
"https://ta.wikipedia.org/wiki/போயிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது