நாவற்குழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 35:
கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கிவிட்டால் போதும் ஒவ்வொரு வீடும் திருவிழாக்கோலம் பூண்டு காட்சி அளிக்கும். தாய் தந்தையர் தங்கள் குழந்தைகளுடன் கோவில் சென்று ஆண்டவனை தொழுகின்ற காட்சியை பார்ப்பதென்றால் கல்நெஞ்சமும் கனிந்து உருகும் என்றே கூற வேண்டும். புலம் பெயர்ந்து உலகின் பலபகுதிகளிலும் வாழுகின்ற எமது உறவுகளே உங்களை அன்புடன் நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன். எமது பிறந்த பகுதியின் சிறப்புக்களை ஓரளவு காண்பதற்கு.
 
ஈழத்திருநாட்டின் எழில்சேர் வடக்கின் யாழ்ப்பாண நகரில் இருந்து கண்டிவீதி வழியாக சென்றால் நாவற்குழியூர் அதிக தூரமில்லை, ஆகக்கூடின் ஆறு கிலோமீற்றர் தூரம் ஆகும். நடந்தே போனால் இடிந்தும் சரிந்தும் விழுந்து கிடைக்கும் வீடுகளையும் விருட்ச்சங்களையும்விருட்சங்களையும் கண்டு கலங்கலாம். அன்று யானையை வடம் மாட்டி இழுத்து வந்து வீட்டு முற்றத்தில் கட்டிவைத்து விலை பேசிய ஈழத்தமிழன்; வேலெறிந்து புலியின் விலாவுடைத்து அதன் வலிய பல்லைப் பிடிங்கி மார்பணிந்து,  தோலை உரித்து விரித்து படுத்த விரத்தமிழன்; ஆழ் கடலில் குதித்து அதனடியில் முத்தெடுத்து மாலையாக்கி அன்பு மனையாள் மார்பணிந்து மனமகிழ்ந்த மறத்தமிழன்; கப்பல் கட்டி கடல் கடந்து அற்புதங்கள் செய்த அருந்தமிழன்; இன்று பிறந்தபதி துறந்து பாரில் பல பாகங்களிலும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
[[படிமம்:Welcomeboard.jpg|thumb|வரவேற்பு வளைவு |276x276px]]
யாழ்நகரையும் எமது கிராமமாகிய நாவற்குழியூரையும் பிரிக்கும் எல்லை வரவேற்பு வளைவு மூலம் காட்டப்பட்டுள்ளது. "யாழ்ப்பாணம் வரவேற்கிறது"  என்று ஆரம்ப காலத்தில்  வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது "வருக யாழ்நகர் வரவு நல்வரவாகுக" என்று மாற்றம் பெற்று காணப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நாவற்குழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது