"திருத்தந்தை பிரான்சிசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
 
=== அர்ஜென்டீனாவின் "இழிவான போர்" காலம் (1976-1983) ===
 
அர்ஜென்டீனாவின் அண்மைக்கால வரலாற்றில் சர்வாதிகார ஆட்சி, இராணுவ ஆட்சி, அவற்றின் விளைவாக எழுந்த வன்முறைகள், அரசு எதிர்ப்பாளர்களைக் கைதுசெய்து, சித்திரவதை செய்து, கொன்றுபோடுகின்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவந்துள்ளன. அந்த வரலாற்றில் மிக மோசமான ஒரு காலக்கால கட்டம் அர்ஜென்டீனாவின் [[இழிவான போர் (அர்ஜென்டினா)|''இழிவான போர்'' காலம்]] (''Dirty War'') (1976-1983) என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் இன்று திருத்தந்தை பிரான்சிசு என்னும் பெயரில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹோர்கே பெர்கோலியோவுக்கு எந்த விதத்திலாவது தொடர்பு இருந்ததா என்பது இன்று கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
 
அர்ஜென்டீனாவின் அண்மைக்கால வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்:<ref>[http://news.bbc.co.uk/2/hi/americas/1196005.stm அர்ஜென்டீனா வரலாற்றுக் காலக்கோடு]</ref>
*1981 - இராணுவ ஆட்சிக்குத் தளபதி லெயோப்போல்டோ கல்த்தியேரி (''General Leopoldo Galtieri'') தலைமை ஏற்றார்.
*1982 ஏப்பிரல் - தளபதி கல்த்தியேரி கொடுத்த கட்டளையின்மேல் அர்ஜென்டீனிய படைகள் ஃபாக்லாந்து தீவுகளைக் கைப்பற்றின. ஐக்கிய இராச்சியம் தனது அயல்நாட்டுக் குடியேற்றப் பிரதேசமாகக் கருதிய அத்தீவுகளை மீட்க படை அனுப்பியது. போரில் 700 அர்ஜென்தீனியர் இறந்தனர். ஐக்கிய இராச்சியம் தீவுகளை மீண்டும் கைவசம் கொண்டுவந்தது. தளபதி கல்த்தியேரி பதவி இறங்கினார், தளபதி ரேய்னால்டோ பிக்னோனே என்பவர் பதவி ஏற்றார்.
*1983 - இராணுவ ஆட்சியிலிருந்து மீண்டு அர்ஜென்டீனா குடிமக்கள் ஆட்சிக்குத் திரும்பியது. ராவுல் அல்ஃபோன்சின் என்பவர் அதிபர் ஆனார். உடனேயே அரசு ''இழிவான போர்'' நடந்த காலக்கால கட்டத்தில் (1976-1983) இராணுவ ஆட்சியினர் நிகழ்த்திய அட்டூழியங்களை விசாரிக்கக் கட்டளையிட்டது. அப்போது ஆட்சியில் பங்கேற்ற இராணுவத் தலைவர்கள் மனித உரிமைகளை மீறியது பற்றித் தகவல் சேகரித்து அவர்களுக்குத் தண்டனை வழங்க வழி ஏற்பட்டது. பணவீக்கம் 900% அளவை மிஞ்சியது.
*1989 - பெரோன் கட்சியைச் சார்ந்த கார்லோஸ் மேனெம் என்பவர் நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*1995 - கார்லோஸ் மேனெம் மீண்டும் அதிபரானார்.
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2764783" இருந்து மீள்விக்கப்பட்டது