நற்செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (bad link repair, replaced: கிறித்து → கிறிஸ்து)
இவ்வாறு நாம் பெறக்கூடுமான இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்:
 
[[கிபி]] [[1ம் நூற்றாண்டு|முதல் நூற்றாண்டில்]] வாழ்ந்த இயேசு [[பாலஸ்தீனம்|பாலத்தீனா]]வைச் சேர்ந்த ஒரு [[யூதர்|யூத]] மனிதர். அவர் கலிலேயாப் பகுதியிலுள்ள [[நாசரேத்]]தில் வளர்ந்தார். திருமுழுக்கு யோவான் என்பவரைத் தலைமையாகக் கொண்டு உருவாகியிருந்த ஓர் இயக்கத்தில் இயேசுவும் பங்கேற்று, யோவான் கைகளில் திருமுழுக்குப் பெற்றார். ஒரு குறிப்பிட்ட காலக்கால கட்டத்தில் இயேசு யோவானை விட்டுப் பிரிந்து சென்று, தமக்கெனச் சீடர்களைச் சேர்த்தார். கப்பர்நகூமை மையமாகக் கொண்டிருந்த கலிலேயாப் பகுதியிலும், [[எருசலேம்|எருசலேமை]] மையமாகக் கொண்டிருந்த யூதேயா பகுதியிலும் இயேசு போதனை வழங்குவதிலும் மக்களுக்குக் குணமளிப்பதிலும் ஈடுபட்டுப் பொதுப்பணி ஆற்றினார்.
 
கி.பி. 30 அளவில் இயேசு எருசலேமுக்குப் போனார். அங்கே அவர் [[உரோமை]] ஆளுநராகிய பொந்தியு பிலாத்து (ஆட்சிக்காலம்: கி.பி. 26-36) என்பவரது ஆட்சியின் கீழ் கைது செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொலையுண்டார். சாவுக்குப் பின் இயேசு உயிர்பெற்றெழுந்தார் என அவருடைய சீடர்களும் வேறு சில தொண்டர்களும் ஆணித்தரமாக உரைத்ததோடு, அந்த அனுபவத்துக்கு அடிப்படையாகத் தாங்கள் இயேசுவை உயிரோடு பார்த்ததாகப் பறைசாற்றினார்கள்.
 
இவ்வாறு இயேசுவைக் குறித்துச் சான்று பகர்ந்த அவருடைய சீடர்கள் பாலசுதீனாவிலும் அதற்கு வெளியிலும் சென்று இயேசுவைப் பற்றிப் போதித்தார்கள். முதலில் யூத மக்கள் சிலர் இயேசுவில் நம்பிக்கை கொண்டார்கள். பின்னர், யூத மக்களால் ''புற இனத்தார்'' என்று கருதப்பட்ட [[கிரேக்கம்|கிரேக்க]] மற்றும் உரோமை மக்கள் நடுவே கிறித்தவ சமயம் பரவியது. அக்காலக்அக்கால கட்டத்தில்தான் ''நற்செய்தி நூல்கள்'' உருவாயின.
 
== நற்செய்தி நூல்கள் வழங்குகின்ற இயேசுவின் போதனைகள் ==
4,545

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2764786" இருந்து மீள்விக்கப்பட்டது