ஜொகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up, replaced: காலக் கட்டத்தில் → காலகட்டத்தில் using AWB
வரிசை 28:
| leader_title = ஜொகூர் சுல்தான்
| leader_name = மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில்| leader_title1 = மந்திரி பெசார்
| leader_name1 = அப்துல் கனி ஒஸ்மான் [[பாரிசான்_நேசனல்பாரிசான் நேசனல்]]
| established_title = ஜொகூர் சுல்தானகம்
| established_date = 14ஆம் நூற்றாண்டு
வரிசை 66:
}}
 
'''ஜொகூர்''', [[மலேசியா|மலேசியத் தீபகற்கத்தின்]] தெற்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். [[மலேசியா]]வில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில் ஒன்றாகக் கருதப் படுகின்றது. ஜொகூர் மாநிலத்தின் தலைநகரமாகவும் அரச நகரமாகவும் [[ஜொகூர் பாரு]] விளங்குகின்றது. ஜொகூர் பாருவின் பழைய பெயர் தஞ்சோங் புத்ரி. ஜொகூர் மாநில பழைய தலைநகரத்தின் பெயர் [[ஜொகூர் லாமா]].
 
ஜொகூர் மாநிலத்தின் வடக்கே பகாங் மாநிலம் உள்ளது. வட மேற்கே [[மலாக்கா]], [[நெகிரி செம்பிலான்]] மாநிலங்கள் உள்ளன. தெற்கே [[சிங்கப்பூர்]] குடியரசு உள்ளது. ஜொகூர் மாநிலம் ‘கண்ணியத்தின் இருப்பிடம்’ (''Darul Ta'zim'') எனும் நன்மதிப்பு அடைமொழியுடன் அழைக்கப் படுகின்றது. ‘டாருல் தாக்’சிம் என்பது ஓர் [[அரபு|அரபுச்]] சொல் ஆகும்.
வரிசை 73:
[[File:SultanIskandarCIQ.JPG|thumb|200px|சுல்தான் இஸ்காந்தர் குடிநுழைவு தலைமையகம்.]]
[[File:Causeway pipeline.jpg|thumb|200px|ஜொகூரில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் நீர்க்குழாய்கள்.]]
ஜொகூர் எனும் சொல் ‘ஜவுஹர்’ எனும் அரபுச் சொல்லில் இருந்து வந்தது. ஜவுஹர் என்றால் மதிப்புமிக்க இரத்தினக்கல் என்று பொருள்படும்.<ref>[http://www.malaysiaexplorer.net/travel-guide/johor.html The Malays have a habit of naming their states after natural objects or anything that is found in abundance. Therefore Johor originated from the Arabic word “Jauhar” which means precious stone or gem.]</ref> ஒரு காலக் கட்டத்தில்காலகட்டத்தில் இங்கு இரத்தினக் கற்கள் நிறைய கிடைத்தன. அதனால், அங்கு வாழ்ந்த மலாய்க்காரர்கள் அந்த இடத்திற்கு ஜொகூர் என்று பெயர் வைத்தனர்.
 
அதற்கு முன்னர் [[மூவார்]] ஆற்றில் இருந்து சிங்கப்பூர் தீவு வரையிலான நிலப்பகுதியை 'உஜோங் தானா' என்று அழைத்தனர். உஜோங் தானா என்றால் நிலத்தின் முனை என்று பொருள். ஜொகூருக்கு இன்னும் ஒரு சிறப்பு உள்ளது. ஆசிய கண்ட நிலப்பகுதியின் தெற்கே மிகத் தொலைவில் அமைந்த முனை ஜொகூரில் தான் உள்ளது.<ref>[http://www.nst.com.my/Current_News/JohorBuzz/Monday/MyJohor/2480438/Article/index_html/ Ancient names of Johor, 2 March 2009, JohorBuzz, New Straits Times]</ref>
வரிசை 79:
==வரலாறு==
===அலாவுதீன் ரியாட் ஷா===
16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜொகூர் சுல்தானகம் உருவாக்கம் பெற்றது. அந்தச் சுல்தானகத்தை உருவாகியவர் அலாவுதீன் ரியாட் ஷா. இவர் மலாக்கா சுல்தான்களில் ஆகக் கடைசியாக மலாக்காவை ஆட்சி செய்த சுல்தான் முகமட் ஷா என்பவரின் புதல்வர் ஆவார்.
 
மலாக்காவைப் போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதும் அவர்களிடம் இருந்து தப்பிக்க சுல்தான் முகமட் ஷா அங்கிருந்து ஜொகூருக்கு இடம் பெயர்ந்தார். மலாக்கா பேரரசுவிற்குப் பின்னர் உருவாக்கம் பெற்ற இரு வாரிசு அரசுகளில் ஜொகூர் சுல்தானகமும் ஒன்றாகும். [[பேராக்]] சுல்தானகம் மற்றொரு வாரிசு அரசாகும்.
வரிசை 91:
===போர்த்துகீசியர்களுக்கு அச்சுறுத்தல்===
 
அலாவுதீன் ரியாட் ஷா உருவாக்கிய ஜொகூர் சுல்தானகம், [[போர்த்துகீசியர்|போர்த்துகீசியர்களுக்கு]] ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஜொகூர் சுல்தானகம் தனது ஆட்சியின் உச்சத்தில் இருந்த போது பகாங், இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகள், சுமத்திராவின் ஒரு பகுதி போன்றவை அதன் ஆளுமையின் கீழ் இருந்தன. <ref>[http://www.sabrizain.org/malaya/johor.htm/ For over a period of time, intermittent raids were carried out both by land and sea caused considerable hardship for the Portuguese at Melaka.]</ref>
 
1641ஆம் ஆண்டு ஜொகூர் அரசின் உதவியுடன் [[நெதர்லாந்து|டச்சுக்காரர்கள்]] மலாக்காவைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஜொகூர் அரசு மலர்ச்சி பெற்ற வணிகத் தளமாகப் புகழ் பெற்றது. இருப்பினும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட உள்நாட்டு விரிசல்களினால் ஜொகூர் அரசின் மேலாண்மை மங்கிப் போனது. <ref>[http://www.myfareast.org/Malaysia/johor/ By 1660, Johor had become a flourishing entrepôt, although weakening and splintering of the empire in the late seventeenth and eighteenth century reduced its sovereignty.]</ref>
 
===டத்தோ தெமாங்கோங் டத்தோ இப்ராஹிம்===
 
18ஆம் நூற்றாண்டில், [[சுலாவெசி|சுலாவாசியைச்]] சேர்ந்த பூகிஸ்காரர்களும், சுமத்திராவைச் சேர்ந்த மினாங்காபாவ்காரர்களும் ஜொகூர்-ரியாவ் பேரரசின் அரசியல் ஆற்றல்களைக் கட்டுப்படுத்தி வந்தனர். 1855-இல் [[சிங்கப்பூர்|சிங்கப்பூரை]] ஆட்சி செய்த [[பிரித்தானியர்|பிரித்தானியர்களுக்கும்]] ஜொகூர் மாநிலத்தின் சுல்தான் அலிக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி ஜொகூர் அரசு, டத்தோ தெமாங்கோங் டத்தோ இப்ராஹிமிடம் ஒப்படைக்கப் பட்டது.
 
டத்தோ தெமாங்கோங் டத்தோ இப்ராஹிம், ஜொகூர் மாநிலத்தின் தென்பகுதியில் தஞ்சோங் புத்ரி எனும் ஒரு புதிய நகரத்தை உருவாக்கினார். இந்த நகரம் தான் இப்போதைய [[ஜொகூர் பாரு]] ஆகும். தெமாங்கோங் டத்தோ இப்ராஹிமிற்குப் பின்னர் அவருடைய புதல்வர் டத்தோ தேமாங்கோங் அபு பாக்கார் ஜொகூர் சுல்தானகத்தின் அரியணையில் அமர்ந்தார்.
 
===நவீன ஜொகூரின் தந்தை===
 
இங்கிலாந்தின் [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா மகாராணியார்]] அவருக்கு ஸ்ரீ மகாராஜா ஜொகூர் எனும் சிறப்புப் பெயரை வழங்கினார். சுல்தான் அபு பாக்கார் ஜொகூர் மாநிலத்திற்கு ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொடுத்தார். பிரித்தானிய பாணியிலான ஓர் அரசியல் நிர்வாகத்தை ஏற்படுத்தினார். எதிர்கால சுல்தான்களுக்காக ஓர் அதிகாரத்துவ அரண்மனையையும் கட்டினார்.
 
ஜொகூர் மாநிலத்திற்கு அவர் ஆற்றியுள்ள அரும் பெரும் சேவைகளைப் பாராட்டும் வகையில் அவர் ‘நவீன ஜொகூரின் தந்தை’ எனும் சிறப்பு அடைமொழியுடன் இப்போதும் அழைக்கப் படுகின்றார். சுல்தான் அபு பாக்காரின் சேவைகளை ஜொகூர் மக்கள் இன்றும் பாராட்டி வருகின்றனர்.
வரிசை 122:
 
{{மலேசிய மாநிலங்கள்}}
 
[[பகுப்பு:ஜொகூர்| ]]
"https://ta.wikipedia.org/wiki/ஜொகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது