வானூர்தி அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-NASA +நாசா)
வரிசை 43:
[[ஜார்ஜ் கேலி|சர் ஜார்ஜ் கேலி]] (1773-1857) என்பவரே பொதுவாக நவீன வானூர்தியியலின் தந்தை என்று அறியப்படுகிறார். 1846-ஆம் ஆண்டுவாக்கில் முதன்முதலில் "வானூர்தியின் தந்தை" என்றழைக்கப்பட்டார்.{{sfn|Fairlie|Cayley|1965}} ஹென்சன் என்பவர் கேலியை "வான்வழி பயணத்தின் தந்தை" என்றழைத்தார்.{{sfn|Wragg|1974}} முதன்முதலில் பறத்தல் குறித்து அறிவியல் முறையில் ஆராய்ந்து அதற்கு அடிப்படையான தத்துவங்களையும் பறத்தலில் ஏற்படும் விசைகளையும் குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர் சர் ஜார்ஜ் கேலி ஆவார்.<ref>{{cite web| title = Sir George Carley| url = http://www.flyingmachines.org/cayl.html| publisher = Flyingmachines.org| accessdate = 2009-07-26| quote = Sir George Cayley is one of the most important people in the history of aeronautics. Many consider him the first true scientific aerial investigator and the first person to understand the underlying principles and forces of flight.}}</ref>
 
1809-ஆம் ஆண்டில் "வான் பயணம்" (1809-1810) குறித்த தனது மூன்று பகுதி ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் கட்டுரையினை வெளியிட்டார்.<ref name="AerNav123">''Cayley, George''. "On Aerial Navigation" [http://www.aeronautics.nasa.gov/fap/OnAerialNavigationPt1.pdf Part 1], [http://www.aeronautics.nasa.gov/fap/OnAerialNavigationPt2.pdf Part 2], [http://www.aeronautics.nasa.gov/fap/OnAerialNavigationPt3.pdf Part 3] ''Nicholson's Journal of Natural Philosophy'', 1809–1810. (Via [[NASAதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]). [http://invention.psychology.msstate.edu/i/Cayley/Cayley.html Raw text]. Retrieved: 30 May 2010.</ref> அதில் பறத்தல் குறித்த மிகமுக்கியமான அறிவியல் கருத்தினை தெளிவாக முன்வைத்தார். அதாவது, "திறன் அளித்தலின் மூலம் காற்றின் எதிர்ப்பைத் தாண்டி ஒரு குறிப்பிட்ட எடையினைத் தாங்கும் வண்ணம் ஒரு பரப்பை (இறக்கையை) உருவாக்குவதே, இப்பிரச்சினையின் மூல வடிவம்." பறத்தலின் நான்கு [[திசையன்]] விசைகளையும் தெளிவாக வரையறுத்தார்: [[உந்துவிசை]] (Thrust), [[ஏற்றம்]] (Lift), [[இழுவை]] (Drag) மற்றும் [[எடை]] (Weight). மேலும் பறத்தலின்போது வானூர்தியின் நிலைப்பாடு மற்றும் கட்டுப்பாட்டினை (Stability and Control) தனது வடிவமைப்புக் கருதுகோட்களில் தெளிவாக எடுத்துரைத்தார்.
 
நவீன வானூர்திகளின் வடிவமைப்பான நிலைத்த இறக்கையுடன், நிலைப்படுத்தும் வால்பகுதியோடு (கிடைநிலை மற்றும் செங்குத்து) கூடிய வடிவமைப்பை முதன்முதலில் கொண்டுவந்தார். அவ்வடிவமைப்பில் ஆளற்ற மற்றும் ஆளிருந்த மிதவை வானூர்திகளை பறக்கச் செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/வானூர்தி_அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது