'''விஜய நிர்மலா''' (''Vijaya Nirmala,'', (பெப்ரவரி 20, 1944 – சூன் 2627, 2019) [[ஆந்திரத் திரைப்படத்துறை]]யில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர். இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். 2002இல் இவரது பெயர் அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்று [[கின்னஸ் உலக சாதனைகள்]] பட்டியலில் இடம் பெற்றது.<ref name="Guinness">{{cite news| url=http://www.hindu.com/thehindu/mp/2002/04/30/stories/2002043000330203.htm | location=Chennai, India | work=The Hindu | title=Vijayanirmala enters the Guinness | date=2002-04-30}}</ref> 2008இல், தெலுங்கு திரைப்படத்துறையில் பங்களித்ததற்காக "ரகுபதி வெங்கையா விருதினைப்" பெற்றுள்ளார்.<ref>[http://www.tamilwire.com/forum/showthread.php?p=104058 Ragupathi Venkaiah Award to Vijaya Nirmala]{{dead link|date=July 2016 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}</ref> இவரும், தெலுங்கு நடிகையான [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]] ஆகிய இருவர் மட்டுமே புகழ் பெற்ற [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனை]] இயக்கிய பெருமைக்குரியவராகின்றனர்.