முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 11:
 
== மீண்டும் சேதுபதி ஆட்சி ==
இந்தச் சூழ்நிலையில் ஆற்காடு நவாபும் சேதுபதியும் ஒரு திட்டத்துக்கு ஒத்துவந்தனர். இதன்படி சேதுபதி மன்னர் ஆற்காடு நவாபின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு ஆண்டுதோறும் கப்பத் தொகையாக (பேஷ்குஷ்) ஒரு இலட்சம் ரூபாய் வரை நவாபிற்கு செலுத்துவது என முடிவானது. இதன் மூலம் சேது மன்னரின் சிறை வாழ்க்கையை 1780இல் முடிவுக்கு வந்து மீண்டும் மன்னரானார். மன்னர் தன் அமைச்சரான முத்திருளப்ப பிள்ளையையின் உதவியுடன் ஆட்சிபுரிந்துவந்தார்.
 
== மோதல்கள் ==
சேதுபதியின் ஆட்சியின்போது கிழக்கிந்திய கம்பெனிக்கும் மன்னருக்கும் இடையில் மனத்தாபங்கள் தோன்றத் தொடங்கின. மேலும் [[சிவகங்கைச் சீமை]]க்கும் இராமநாதபுர நாட்டுக்கும் இடையில் எல்லைச் சிங்கல்களும் பகையும் தோன்றி இரு அரசுகளுக்கும் இடையில் மோதல்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. முடிவில் ஆனந்துரை அடுத்த பகுதியில் இரு சீமைப்படைகளும் நேருக்கு நேர் மோதின. இதனையறிந்த கும்பெனிக் கலெக்டரும் நவாபும் இருதரப்பினருக்கும் போர் நடவடிக்கையை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். சிவகங்கை சீமையினர் இதற்கு உடன்பட்டாலும் சேதுபதி மன்னர் போர் நிறுத்தத்திற்கு உடன்படாமல் போரை நீடித்து வந்தார். இதனால் கும்பெனியாருக்கு மன்னர் மீது கோபம் ஏற்பட்டது.
 
இதற்கிடையில் கி.பி. 1792இல் சேதுநாட்டில் கடும் வறட்சி ஏற்பட்டது. இச்சூழ்நிலையை பயன்படுத்தி கும்பெனியார் சேதுநாட்டில் தானியங்களை விற்பனை செய்வதற்கு முன் வந்தனர். விற்பனையாகும் தானியங்களுக்குச் சுங்க விலக்கு அளிக்குமாறும் சேதுபதியை கேட்டுக்கொண்டனர். இக்கோரிக்கையை மன்னர் ஏற்க மறுத்தார். இச்சூழலில் கும்பெனியாரைச் சார்ந்து நடந்து கொள்ளுமாறு பிரதானி முத்திருளப்ப பிள்ளை, மன்னரை வற்புறுத்தி வந்தார். இதற்கு உடன்படா மன்னர் பிரதானியைப் பதவி நீக்கம் செய்தார்.
 
அடுத்து இராமநாதபுரம் சீமையில் உற்பத்தியாகும் கைத்தறித் துணிகள் அனைத்தையும் ஏகபோகமாக கும்பெனியாரே வாங்குதற்கும், கொள்முதல் செய்வதற்கும் மன்னரது அனுமதியைக் கோரினர். மன்னர் இந்தக் கோரிக்கையையும் மறுத்தளித்து விட்டார்.
== கைது ==
இந்த சம்பவங்களால் மன்னரைத் ஒழித்துக் கட்டுவது என கும்பெனித் தலைமை முடிவு செய்தது. இதை செயல்படுத்த. கி.பி. 1795-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் நாள் வைகறையில் பாளையங்கோட்டை, கயத்தாறு ஆகிய ஊர்களிலிருந்து வந்த கும்பெனியாரின் பெரும்படை இராமநாதபுரம் கோட்டைக்குள் புகுந்து, அரண்மனையைச் சுற்றி வளைத்து மன்னரைக் கைது செய்தது. அடுத்தநாள் மன்னர் திருச்சிக் கோட்டைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிறை வைக்கப்பட்டார்.
 
இதற்கிடையில் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் தளபதிகளில் ஒருவரான மயிலப்பன் சேர்வைக்காரர் என்பவர் மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த பல முயற்சிகளில் ஈடுபட்டு மக்களைத் திரட்டி புரட்சியில் ஈடுபட்டார். இவற்றை கும்பெனியார் முறியடித்தனர்.
 
== மறைவு ==
இதற்கிடையில் சேதுபதி மன்னரை திருச்சிக் கோட்டையில் இருந்து சென்னைக் கோட்டைக்கு மாற்றி சிறைவைத்தனர். இதன் தொடர்ச்சியாக 23- சனவரி -1809 ஆம் நாள் இரவு மன்னர் காலமானார். <ref>{{cite book | title=சேதுபதி மன்னர் வரலாறு | publisher=சர்மிளா பதிப்பகம் | author=டாக்டர். எஸ். எம். கமால் | authorlink= முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி | year=2003 | location=இராமநாதபுரம் | pages= 59 - 70}}</ref>
 
இவரது வரலாறு குறித்து வரலாற்றாளர் [[எசு. எம். கமால்]] விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் என்ற நூலை விரிவாக எழுதியுள்ளார்.
வரிசை 34:
{{Reflist}}
 
[[பகுப்பு:இராமநாதபுரம்இராமநாதபுர சமஸ்தானம்சேதுபதிகள்]]
[[பகுப்பு:1795 இறப்புகள்]]