இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மின்காந்தவியல்: பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 59:
அறிவியலின் இருண்ட காலமாக அறியப்படும் இக்காலம் 1543இல் தற்கால வானியலின் தந்தை என அறியப்படும் [[நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்|நிக்கோலசு கோப்பர்னிக்கசு]] வெளியிட்ட சூரியனை மையமாகக் கொண்ட ஆய்வுக் கட்டுரையால் முடிவுக்கு வந்தது. கோப்பர்னிக்கசு கோட்பாட்டளவில் முன்மொழிந்தாலும் இதற்கான சோதனைபூர்வ சான்றுகள் இயற்பியலின் தந்தை என அறியப்படும் [[கலீலியோ கலிலி]]யால் வழங்கப்பட்டது. பைசா பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்த கலிலி தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ந்தும் சாய்தளங்களில் சோதனைகள் நடத்தியும் கோப்பர்னிக்கசு கோட்பாடுகளுக்கு சான்றுகள் அளித்தார். மேலும் அறிவியல் சோதனைகள் மூலமாக கோட்பாடுகளால் எட்டப்பட்ட தீர்வுகளை சரிபார்க்க இயலும் என்று நிறுவினார். இயற்பியல் முறைமைகள் தொடர்ந்து [[யோகான்னசு கெப்லர்]], [[பிலைசு பாஸ்கல்]], [[கிறித்தியான் ஐகன்சு]] போன்ற அறிஞர்களின் பங்களிப்பால் வலுப்பெற்றன.
 
நவீன ஐரோப்பியர்களின் துவக்க காலத்தில் இந்த சோதனை மற்றும் அளவியல் சார்ந்த முறைமைகளைக் கொண்டு தற்போது ''இயற்பியல் விதிகள்'' என அறியப்படும் விதிமுறைகளை உருவாக்கினர். இக்காலத்திலிருந்து '''செவ்வியல் இயற்பியல்''' என அறியப்பட்டது.<ref>{{cite book |last=Ben-Chaim |first=Michael |author-link= |year=2004 |publication-date=2004 |title=Experimental Philosophy and the Birth of Empirical Science: Boyle, Locke and Newton |edition= |place= |publication-place=Aldershot |publisher=Ashgate |isbn=0-7546-4091-4 |oclc=53887772 57202497 |ref=harv}}</ref><ref>{{cite book |last=Weidhorn |first=Manfred |title=The Person of the Millennium: The Unique Impact of Galileo on World History |year=2005 |publisher=iUniverse |isbn=0-595-36877-8 |page=155}} Weidhorn Introduces Galili as the "father of modern Physics"</ref> [[யோகான்னசு கெப்லர்]], [[கலீலியோ கலிலி]] மற்றும் குறிப்பாக [[ஐசாக் நியூட்டன்|நியூட்டன்]] பல்வேறு இயக்கவிதிகளை ஒருங்கிணைத்தனர்.<ref>Guicciardini, Niccolò (1999), Reading the Principia: The Debate on Newton's Methods for Natural Philosophy from 1687 to 1736, New York: Cambridge University Press.</ref> தொழிற்புரட்சியின் காலத்தில் ஆற்றல் தேவைகள் கூடியமையால் [[வெப்ப இயக்கவியல்]], [[வேதியியல்]] மற்றும் [[மின்காந்தவியல்]] குறித்த ஆய்வுகள் முன்னுரிமைப்முன்னுரிமை பெற்றன.
 
[[மேக்ஸ் பிளாங்க்]]கின் [[குவாண்டம் விசையியல்|குவாண்டம் கோட்பாடுகள்]] மற்றும் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[சார்புக் கோட்பாடு]]களால் '''தற்கால இயற்பியல்''' உருவானது; [[வெர்னர் ஐசன்பர்க்|ஐசன்பர்க்]], [[எர்வின் சுரோடிங்கர்]] மற்றும் [[பால் டிராக்]] பங்களிப்புகளால் [[குவாண்டம் விசையியல்]] தொடர்ந்து முன்னேறியது.
 
== மையக் கோட்பாடுகள் ==
[[இயற்கை]]யின் அடிப்படை உண்மையைக் கண்டறிய முற்படும் இயற்பியல், பல பிரிவுகளைக் கொண்டுள்ளபோதும், முதன்மையான ஐந்து ''கோட்பாடுகளாக'' இவற்றைக் குறிப்பிடலாம்: பேரியலளவிலான நகர்வுகளைக் குறித்த [[மரபார்ந்த விசையியல்]]; [[ஒளி]] முதலிய மின்காந்த நிகழ்வுகளை விவரிக்கும் [[மின்காந்தவியல்]]; [[வெளிநேரம்]] மற்றும் [[நியூட்டனின் ஈர்ப்பு விதி]]களை விவரிக்கும் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[சார்புக் கோட்பாடு]]; மூலக்கூற்று நிகழ்வுகளையும் [[வெப்பம் (இயற்பியல்)|வெப்பப்]] பரிமாற்றத்தையும் விவரிக்கும் [[வெப்ப இயக்கவியல்]] மற்றும்[[அணு| அணு உலகின்]] நடத்தைகளை ஆராயும் [[குவாண்டம் விசையியல்]] ஆகும் .
"https://ta.wikipedia.org/wiki/இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது