யுரேசியப் புல்வெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:சீனா using HotCat
வரிசை 1:
[[Fileபடிமம்:Красноковыльная степь в Адамовском районе.JPG|thumb|400px|[[ருசியா]]வின் புல்வெளிகள்]]
[[Fileபடிமம்:Eurasian steppe belt.jpg|thumb|400px|யுரேசியப் புல்வெளிகள் (இளஞ்சிவப்பு நிறம்)]]
 
'''யுரேசியப் புல்வெளிகள்''' (Eurasian Steppe), என்பதை ''பெரிய மேய்ச்சல் புல்வெளி நிலங்கள்'' என்றும் அழைப்பர். [[ஆசியா]] - [[ஐரோப்பா]]வை இணைக்கும் [[யுரேசியா]]வில் இப்புல்வெளி சமவெளிகள் காணப்படுவதால் இதற்கு யுரேசியப் புல்வெளி பெயராயிற்று. மரங்களற்ற '''ஸ்டெப்பி''' என அழைக்கப்படும் இப்புல்வெளிச் சமவெளிகள் கால்நடைகளை மேய்ப்பதற்கு ஏற்ற மேய்ச்சல் நிலங்களாகும். கால்நடைகளை மேய்த்த [[சிதியர்கள்]], [[பார்த்தியப் பேரரசு|பார்த்தியர்கள்]] போன்ற நாடோடி இன மக்கள் இப்புல்வெளிச் சமவெளிகளில் வாழ்ந்தவர்களே.
 
[[யுரேசியா]] ஸ்டெப்பிப் புல்வெளிகள் வழியாக செல்லும் [[பட்டுப்பாதை]], [[கிழக்கு ஐரோப்பா]], [[நடு ஆசியா]], [[சீனா]], [[தெற்காசியா]], [[மத்திய கிழக்கு]] மற்றும் [[கிழக்கு ஆசியா]] பகுதி மக்களின் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் மற்றும் வணிக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.
 
== அமைவிடம் ==
கிழக்கு [[ஐரோப்பா]]வின் ''மல்தோவா'' பகுதியிலிருந்து, [[உக்ரைன்]], [[ருசியா]], [[கசக்ஸ்தான்]], [[சீனா]]வின் [[சிஞ்சியாங்]] மற்றும் [[மங்கோலியா]] முதல் [[மஞ்சூரியா]] வரை யுரேசியா ஸ்டெப்பிப் புல்வெளிப் பகுதிகள் பரவியுள்ளது.<ref>{{cite book|url=http://books.google.sk/books?id=QpHCHdrgSVoC&pg=PA150&dq=Eurasian+Steppe&hl=sk&sa=X&ei=foIzT9-DOdDmtQaJxaSfDA&redir_esc=y#v=onepage&q=Eurasian%20Steppe&f=false |title=Canada's vegetation: a world perspective - Geoffrey A. J. Scott - Google Knihy |publisher=Books.google.sk |date= |accessdate=2012-02-09}}</ref>
 
== தட்பவெப்பம் ==
[[கிழக்கு ஐரோப்பா]] மற்றும் [[நடு ஆசியா]]வின் புல்வெளிப் பகுதிகளில் கோடைகாலத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குளிர் காலத்தில் பூஜ்ஜியம் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமும் காணப்படுகிறது. ஆனால் மங்கோலியப் பகுதி ஸ்டெப்பிப் புல்வெளிகளில் பகல் நேர வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேர வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கு கீழே சென்று விடுகிறது.
 
== புவியியல் ==
 
=== யுரேசிய புல்வெளிப் பிரிவுகள் ===
[[யுரேசியா|யுரேசியப்]] புல்வெளிகள் [[டான்யூப் ஆறு|டான்யூப் ஆற்றின்]] முகத்துவாரத்திலிருந்து தொடங்கி பல ஆயிரக்கணக்கான மைல் தொலவு வரை படர்ந்து [[பசிபிக் பெருங்கடல்]] வரை நீள்கிறது. யுரேசியப் புல்வெளிச் சமவெளியின் வடக்கில் [[ருசியா]]வின் [[சைபீரியா]]க் காடுகளும்; தெற்கில் உறுதியற்ற எல்லையும், வறட்சியும் காணப்படுகிறது. ஸ்டெப்பிப் புல்வெளி மேய்ச்சல் நிலங்கள் இரண்டு இடங்களில் குறுகிக் காணப்படுவதால் யுரேசியாப் புல்வெளிகள் மூன்று பெரும் பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
==== மேற்கத்தியப் யுரேசியப் புல்வெளிகள் ====
[[Fileபடிமம்:Pontic Caspian climate.png|thumb|150px|போண்டிக் - காஸ்பியன் ஸ்டெப்பிப் புல்வெளிகள்]]
 
* மேற்கத்திய யுரேசியப் ஸ்டெப்பிப் புல்வெளிகள் [[தன்யூப் ஆறு|தன்யூப்]] ஆற்று முகத்துவாரத்தின் அருகிலிருந்து துவங்கி, [[உரால் மலைகள்|உரால் மலைத்தொடரின்]] தெற்கு பகுதியில் முடிகிறது.
* தென்கிழக்கில் யுரேசியப் புல்வெளிகள் [[கருங்கடல்]] - [[காஸ்பியன் கடல்]] மற்றும் [[காக்கசஸ் மலைத்தொடர்]] இடையே பரந்துள்ளது.
 
==== மைய யுரேசியப் புல்வெளி ====
[[Fileபடிமம்:Seidenstrasse_GMT_Ausschnitt_ZentralasienSeidenstrasse GMT Ausschnitt Zentralasien.jpg|thumb|right|[[கிழக்கு ஆசியா|கிழக்கு ஆசியாவையும்]]வையும், [[கிழக்கு ஐரோப்பா|கிழக்கு ஐரோப்பாவையும்]]வையும் இணைக்கும் [[நடு ஆசியா]]வின் ஸ்டெப்பிப் புல்வெளிகள் வழியே கடக்கும் [[பட்டுப்பாதை]]]]
 
* நடு ஸ்டெப்பிப் புல்வெளிகள் அல்லது [[கசக்ஸ்தான்]] ஸ்டெப்பிப் புல்வெளிச் சமவெளிகள் [[உரால் மலைகள்|உரால் மலைத் தொடரிலிருந்து]] ''சுன்காரியா'' (Dzungaria) முடிய பரவியுள்ளது. பாலைவனச் சுழல் காணப்படும் இப்பகுதியில் ''அமு தாரியா'' மற்றும் ''சிர் தாரியா'' என இரண்டு ஆறுகள் பாய்கிறது. [[தாஷ்கந்து|தாஷ்கண்ட்]], [[சமர்கந்து|சமர்கண்ட்]], [[புகாரா]] போன்ற வரலாற்று கால நகரங்கள் அமைந்துள்ளது.
 
==== கிழக்கத்திய யுரேசியப் புல்வெளிகள் ====
* மேற்கில் [[பாமிர் மலைகள்]], [[சீனா]]வின் [[சிஞ்சியாங்]] பகுதியிலிருந்து துவங்கி கிழக்கில் [[மங்கோலியா]]வின் [[அல்த்தாய் மலைத்தொடர்கள்]] வழியாக படர்ந்து [[பசிபிக் பெருங்கடல்]] கரையில் உள்ள [[மஞ்சூரியா]]வில் முடிகிறது.
 
== யுரேசியாப் புல்வெளிப் பேரரசுகள் ==
யுரேசியப் புல்வெளிகளில் பெருமளவு கால்நடைகளை மேய்த்த நாடோடி இன மக்களும், சிறிதளவு உழவுத் தொழில் செய்த இன மக்களும் ஒன்றிணைந்து [[நடு ஆசியா|நடு ஆசியாவிலும்]]விலும், [[தெற்கு ஆசியா|தெற்காசியாவிலும்]]; [[மேற்கு ஆசியா|மேற்காசியாவிலும்]] மற்றும் [[கிழக்கு ஆசியா|கிழக்கு ஆசியாவிலும்]]விலும் பல பேரரசுகளை நிறுவினர். அவைகளில் சில;
* [[சிதியர்கள்|சிதியப் பேரரசு]]
* [[பார்த்தியப் பேரரசு]]
* [[ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டு பேரரசு]]
* [[ஹூணர்கள்|ஹூணப் பேரரசு]]
* [[மங்கோலியப் பேரரசு]]
 
== படக்காட்சிகள் ==
<gallery mode="packed" heights=220>
Fileபடிமம்:Красноковыльная степь в бассейне Кукуйки в Курьинском районе.JPG|[[சைபீரியா]]வின் தெற்குப் புல்வெளிகள்
Fileபடிமம்:Луговая красноковыльная степь около Колыванского озера в Змеиногорском районе.JPG|[[சைபீரியா]]வின் தெற்குப் புல்வெளிகள்
Fileபடிமம்:Horses in Kazakhstan.jpg|[[கசக்ஸ்தான்]] புல்வெளிகள்
Fileபடிமம்:Steppe of western Kazakhstan in the early spring.jpg|மேற்கு [[கசக்ஸ்தான்]] புல்வெளிகள்
Fileபடிமம்:Khopyor River (Nizhnehopersky Nature Park) 001.JPG|[[வோல்கோகிராட் வட்டாரம்|வோல்காகிராட்]] புல்வெளிகள்
Fileபடிமம்:Natural Park Donskoy 001.jpg|[[வோல்கோகிராட் வட்டாரம்|வோல்காகிராட்]] புல்வெளியில் இயற்கைப் பூங்கா
Fileபடிமம்:Скала Дракон.jpg|தென்கிழக்கு சைபீரியாவின் புல்வெளிகள்
Fileபடிமம்:Ishenbek surveys the rolling expanse of the high steppe. (3968890120).jpg|[[கிர்கிஸ்தான்]] நாட்டுப் புல்வெளிகள்
 
</gallery>
 
== இதனையும் காண்க ==
* [[ஸ்டெப்பிப் புல்வெளிகள்]]
* [[புன்னிலம்|சவன்னா புல்வெளிகள்]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== ஆதார நூற்பட்டியல் ==
* Plano Carpini, John of, "History of the Mongols," in Christopher Dawson, (ed.), Mission to Asia, Toronto: University of Toronto Press, 2005, pp.&nbsp;3–76.
* Barthold, W., Turkestan Down to the Mongol Invasion, T. Minorsky, (tr.), New Delhi: Munshiram Manoharlal Publishers, 1992.
வரிசை 72:
[[பகுப்பு:ஆசியப் புவியியல்]]
[[பகுப்பு:ஐரோப்பியப் புவியியல்]]
[[பகுப்பு:சைபீரியா]]
[[பகுப்பு:நடு ஆசியா|*]]
[[பகுப்பு:கசக்கஸ்தான்]]
[[பகுப்பு:கிர்கிசுத்தான்]]
[[பகுப்பு:சீனா]]
[[பகுப்பு:மங்கோலியா]]
[[பகுப்பு:ஆசியா]]
[[பகுப்பு:சூழல் மண்டலம்]]
[[பகுப்பு:பாக்கித்தான் வரலாறு]]
[[பகுப்பு:புல்வெளிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யுரேசியப்_புல்வெளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது