"சொற்புணர்ச்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (clean up using AWB)
 
தமிழில் சொல்லோடு சொல் புணரும் புணர்ச்சியானது '''சொற்புணர்ச்சி''' என்றும், [[பொருட்புணர்ச்சி]] என்றும் பாகுபடுத்திக் காணுமாறு அமைந்துள்ளது. புணரும் சொற்களிலுள்ள ஓசைகளின் ஒத்திசைவோடு புணர்வதைச் சொற்புணர்ச்சி என்கிறோம். [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்திலுள்ள]] புணரியல், தொகைமரபு, உருபியல் ஆகிய இயல்கள் இவற்றை விரிவாக விளக்குகிறது. ஓசை இசைவுக்கு மாறுபட்டு நிலைமொழி, வருமொழி ஆகியவற்றில் உள்ள பெயரின் பொருள் தன்மைக்கு ஏற்பப் புணர்வது பொருட்புணர்ச்சி.
 
எடுத்துக்காட்டு
* குமரிப்பெண், எட்டிப்பட்டம், காவிதிப்பட்டம், வள்ளிக்கூத்து என வரும் புணர்நிலைகளைச் சொற்புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இவற்றில் குமரி, எட்டி, காவிதி, வள்ளி என்னும் சொற்கள் உயர்திணையைச் சுட்டுகின்றன. உயர்திணைச் சொல் எல்லாவழியும் இயல்பாகப் புணரவேண்டும். <ref>
உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும் <br />
புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும்<br />
எல்லா வழியும் இயல்பு என மொழிப. (தொல்காப்பியம் தொகைமரபு 11)</ref> அவ்வாறு புணராமல் ஒற்று மிக்குப் புணர்ந்துள்ளது. <ref>
அவற்றுள்,<br />
இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே. (தொல்காப்பியம் தொகைமரபு 12)</ref> காரணம் 'இ' என்னும் பல்லெழுத்தோடு 'ப' என்னும் இதழெழுத்து இணைய முடியவில்லை. இணைவதற்காகப் 'ப' என்னும் பல்லெழுத்து மிக்குப் புணர்ந்துள்ளது.
{{Reflist}}
 
[[பகுப்பு:புணர்ச்சி (இலக்கணம்)]]
[[பகுப்பு:எழுத்திலக்கணம்]]
8,651

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2775153" இருந்து மீள்விக்கப்பட்டது