சுயாட்சிக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1:
{{unreferenced}}
 
'''சுயாட்சிக் கட்சி''' (''Swaraj Party'') அல்லது ''சுவராஜ் கட்சி'' அல்லது ''சுவராஜ்ய கட்சி'', '''சுயராஜ்ய கட்சி''' என்பது 1922-2535 காலகட்டத்தில் [[இந்தியா]]வில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி. [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசிலிருந்து]] பிரிந்து உருவான இது காலப்போக்கில் காங்கிரசுடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியது. காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாக செயல்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதனுடன் இணைந்துவிட்டது.
 
1919ல் ஆரம்பிக்கப்பட்ட [[ஒத்துழையாமை இயக்கம்]] 1922ல் [[மகாத்மா காந்தி]]யால் கைவிடப்பட்டது. 1922ல் [[உத்தர பிரதேசம்|உத்தர பிரதேசத்தில்]] [[சௌரி சௌரா|சவுரி சாரா]] என்ற இடத்தில் சௌரி சௌரா போராட்டத்தில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட வன்முறையில் சிலர் காவல் நிலையம் ஒன்றை கொளுத்தியதால் பல காவல்துறையினர் உயிரிழந்தனர். தனது [[சத்தியாகிரகம்|அறவழிப் போராட்டம்]] வன்முறை வழியில் திசை மாறுவதை விரும்பாத காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிடுவதாக அறிவித்தார். ஆனால் இதனை காங்கிரசு கட்சியுள் பலரும் பிற தேசியவாதிகளும் ஏற்கவில்லை. இவர்கள் காந்தியின் தலைமையில் அதிருப்தி கொண்டனர். மேலும் மாநில மற்றும் இந்திய சட்டமன்றங்களில் காங்கிரசு பங்கு பெறாது என்ற காந்தியின் கொள்கையினையும் அவர்கள் எதிர்த்தனர். இச்சட்டமன்றங்கள் காலனிய ஆளுனர்களால் ஆட்டுவிக்கப்பட்டும் கைப்பாவைகள் என காந்தியும் அவரது ஆதரவாளர்களும் கருதினர். தேர்தல்களில் பங்கேற்று சட்டமன்றத்துக்குச் செல்வது அரசுடன் ஒத்துழைப்பதுக்கு சமமென்றும் கருதினர். ஆனால் காங்கிரசு அதிருப்தியாளர்கள் தேர்தல்களில் பங்கேற்று, அரசு எந்திரத்தை உள்ளிருந்தே எதிர்க்க வேண்டுமென்று நினைத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/சுயாட்சிக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது