"இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
சி (பராமரிப்பு using AWB)
==1937ல் முதலாம் எதிர்ப்பு போராட்டங்கள்==
1937ஆம் ஆண்டு [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937|தேர்தலில்]] காங்கிரசு வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் (தற்போதைய [[தமிழகம்|தமிழகத்தையும்]], தெற்கு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]] பகுதிகளையும் உள்ளடக்கியது ), முதலமைச்சராக [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] 14 சூலை 1937ஆம் நாள் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போதே இந்தி பயிலவேண்டியதின் தேவையை விளக்கி வந்தார். அரசுப்பணிகள் குறைவாகவே இருக்கும். தென்னிந்தியர்கள் வட மாநிலங்களில் தனியார்துறையில் வேலை தேட இந்தி பயில்வது மிகத்தேவையானது என ([[சுதேசமித்திரன்]] பத்திரிகையில் மே 6, 1937) எழுதியிருந்தார்.<ref name="more">{{Harvnb|More|1997| pp=156-159}}</ref>.அதன்படியே தாம் பதவிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே 11 ஆகஸ்டு 1937 அன்று பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கவிருப்பதைக் கொள்கை அறிக்கையாக வெளியிட்டார்<ref name="venu2">{{cite book | first= E.Es. | last=Venu| authorlink=| coauthors= | origyear=| year=1979| title= Why South opposes Hindi|edition= | publisher=Justice Publications| location= | id= | pages=54| url=http://books.google.com/books?id=83xIAAAAMAAJ}}</ref>.<ref name="more"/>
1938 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாக ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கப்போவதாக அறிவித்தார். அம்மாணவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும். முதலில் நூறு பள்ளிகளுக்கு இத்திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கப்போவதாக அரசு அறிவித்தது. <ref name="student">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 511-512</ref>
 
1930களின் துவக்கத்திலேயே இந்துஸ்தானி சேவாதள், இந்துஸ்தானி இதாஷி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன.<ref name="ramaswamy421"/>. [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜியின்]] இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, [[மறைமலை அடிகள்]], பாவேந்தர் [[பாரதிதாசன்]] மற்றும் முத்தமிழ் காவலர் [[கி. ஆ. பெ. விசுவநாதம்]] ஆகியோர் [[திருச்சி]]யில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். [[சென்னை]]யில் நீதிக்கட்சியைச் சேர்ந்த [[ஏ. டி. பன்னீர் செல்வம்]], [[பெரியார்|ஈ.வே.ரா பெரியார்]] ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், [[வழக்குரைஞர்]]களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது. இந்த எதிர்ப்புகளுக்கு இடையே [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] 21 [[ஏப்ரல்]], 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் [[இந்தி]]யைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார். அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜாஜி]] மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 3, [[திசம்பர்]] 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.<ref name="baliga1">{{cite book | first= B. S. | last=Baliga| authorlink=| coauthors= | origyear=| year=2000| title=Madras district gazetteers, Volume 10,Part 1|edition= | publisher=Superintendent, Govt. Press| location= | id= | pages=244| url=http://books.google.com/books?id=jBxuAAAAMAAJ}}</ref> சென்னை மாகாணத்தின் தமிழ் பேசும் மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.<ref name="more"/> 1939ல் பேரணியில் பங்கேற்றதற்காக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட [[நடராசன் (இந்தி எதிர்ப்பு போராளி)|நடராசன்]] மற்றும் [[தாலமுத்து]] ஆகியோர் சிறைப்பட்ட நிலையிலேயே இறந்தனர். பிற்பாடு இவர்கள் மொழிப்போர் தியாகிகள் என்றழைக்கப்பட்டனர். பெரியார் உட்பட 1200 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வலுவுற்ற எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டம் கைவிடப்பட்டது.
==விளைவுகள்==
பெரியார் சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை ஏற்படுத்தியபோது அதனால் ஈர்க்கப்பட்ட [[ஜெயபிரகாஷ் நாராயண்]] ஈரோட்டிற்கு வந்திருந்து பெரியாரோடு கலந்துரையாடினார். பெரியாரை அனைத்திந்திய சமதர்மக் கட்சியில் சேர்ந்து பணிபுரிய அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் அதன்பின் ஏற்பட்ட இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம், தமிழக முற்போக்காளர்களும் வட இந்திய முற்போக்காளர்களும் ஒரே அணியில் இருந்து செயல்பட முடியாதபடி பிளவை ஏற்படுத்தி விட்டது. <ref name="student3">நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் ;பக்கம் 536</ref>
 
==1940-1950 காலகட்டங்களில்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2776730" இருந்து மீள்விக்கப்பட்டது