பரோடா அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
|common_name = பரோடா சமஸ்தானம்
|nation = [[பிரித்தானிய இந்தியா]]
|subdivision = [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானம்]]
|era =
|year_start = 1721
வரிசை 29:
|footnotes = [https://archive.org/stream/cu31924007471935/cu31924007471935_djvu.txt "A Catalogue of Manuscript and Printed Reports, Field Books, Memoirs, Maps ..." Vol. iv, "Containing the treaties, etc., relating to the states within the Bombay presidency"]
}}
'''பரோடா அரசு''' அல்லது '''பரோடா சமஸ்தானம்''' (Baroda State), [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசின்]] படைத்தலைவர்களான [[பேஷ்வா]]க்களின் வழித்தோன்றல்களில் ஒரு கிளையினரான [[கெயிக்வாட்]] எனும் [[தேசஸ்த் பிராமணர்|தேசஸ்த் பிராமண]] குலத்தவர்களால் ஆளப்பட்டது.
 
[[பரோடா]] நகரத்தை தலைநகராகக் கொண்டு, பரோடா அரசு 1721 முதல் 1949 முடிய கெயிக்வாட்களால் ஆளப்பட்டது. பின்னர் பரோடா [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானத்தின்]] நிலப்பரப்புகள், விடுதலை [[இந்தியா]]வில், 1 மே 1949இல் [[மும்பை மாகாணம்|மும்பை மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. <ref name=fi>{{cite news|url=https://news.google.com/newspapers?id=5Hw-AAAAIBAJ&sjid=4UsMAAAAIBAJ&pg=5018,2762425&dq=baroda-state&hl=en|title=Rulers Farewell Message|date=1 May 1949|work=Indian Express}}</ref>
பரோடா மன்னருடன் [[ஹைதராபாத் நிஜாம்]], [[சம்மு காசுமீர்]] மன்னர், [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்]] மற்றும் [[குவாலியர்]] மன்னர் ஆகிய ஐவருக்கும் மட்டுமே [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசால்]] 21 பீரங்கிகள் முழங்க சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.royalark.net/India/salute.htm|title=Salute States}}</ref>.
 
வரிசை 42:
பரோடா சமஸ்தானத்தின் நிலப்பரப்புகள் தற்கால [[குஜராத்]] மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் 8,182 சதுர கிலோ மீட்டர் பரப்பில் பரந்து காணப்பட்டது. பரோடா சமஸ்தானம் காதி, [[பரோடா]], [[நவ்சாரி மாவட்டம்|நவசாரி]], [[அம்ரேலி மாவட்டம்|அம்ரேலி]] என நான்கு பிராந்தியங்களாக பிரித்து ஆளப்பட்டது.
 
மேலும் கடற்கரை பகுதிகளான [[துவாரகை]] அருகே அமைந்த ஒகா மற்றும் [[தமனும் தியூவும்|டையு மற்றும் தாமன்]] அருகே அமைந்த கொடிநார் பகுதிகளும் பரோடா சமஸ்தானத்தில் அடங்கும். <ref>[[#Im|Gazetteer, p. 26]]</ref>
 
==வரலாறு==
[[File:Sayajirao_Gaekwad_III,_Maharaja_of_Baroda,_1919.jpg|160px|left|thumb|சர் மகாராஜா சாயாஜி ராவ் கெயிக்வாட் III, பரோடா சமஸ்தானம்]]
 
[[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசின்]] காலத்தில் தற்கால [[குஜராத்|குஜராத்தின்]] பெரும் பகுதிகளை மராத்தியர்கள் கைப்பற்றியிருந்தனர். [[மராத்தியப் பேரரசு|மராத்தியப் பேரரசின்]] வீழ்ச்சிக்குப் பின்னர், [[பேஷ்வா|பேஷ்வாக்கள்]] என்ற மராத்திய படைத்தலைவர்கள் மராத்திய பேரரசின் பல்வேறு பகுதிகளை பிரித்துக் கொண்டு தன்னாட்சியுடன் ஆண்டனர். அவற்றில் மராத்திய பேஷ்வா படைத்தலைவர் பிலாஜி கெயிட்வாட் என்பவரால் 1721இல் பரோடா அரசு நிறுவப்பட்டது. <ref name="it">{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2010-09-27/vadodara/28212949_1_vessels-erstwhile-baroda-state-passports|title=280 years ago, Baroda had its own Navy|date=27 September 2010|work=The Times of India}}</ref><ref>[[#Im|Gazetteer, 32]]</ref>
 
1803–1805இல் நடைபெற்ற [[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்|இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப்]] பின்னர், [[குஜராத்]]தின் பெரும்பகுதிகளை [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|ஆங்கிலேய கம்பெனி ஆட்சியாளர்களால்]] வெற்றி கொள்ளப்பட்ட போதிலும், பரோடா அரசின் மன்னர், ஆங்கிலேயர்கள் வகுத்த [[துணைப்படைத் திட்டம்|துணைப் படைத்திட்டத்தை]] ஏற்றுக் கொண்டு, பிரித்தானிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தலையிடாது, பரோடா அரசை தொடர்ந்து ஆண்டு வந்தனர்.
[[ஹைதராபாத் நிஜாம்]], [[ஜம்மு காஷ்மீர்]], [[மைசூர் அரசு|மைசூர்]] மற்றும் [[குவாலியர்]] [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்கள்]] போன்று, பிரித்தானிய இந்தியாவின் நான்கு பெரிய சமஸ்தானங்களில் பரோடா சமஸ்தானமும் ஒன்றாகும்.
 
பரோடாவின் மகாராஜா மூன்றாம் சாயாஜி கெயிக்வாட் அரசாட்சியின் போது, பரோடா சமஸ்தானத்தில் 13 கிளைகளுடன் [[பரோடா வங்கி|பேங்க் ஆப் பரோடா]] 20 சூலை 1908இல் துவக்கப்பட்டது. பின்னர் இவ்வங்கி 19 சூலை 1969இல் [[இந்திய அரசு|இந்திய அரசால்]] நாட்டுடமையாக்கப்பட்டது. தற்போது இவ்வங்கி தற்போது இந்தியாவின் அரசுடமை வங்கிகளில் மூன்றாவது பெரிய வங்கியாகும். <ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/Views/Recommendations/articleshow/5985388.cms |title=Growth potential for Bank of Baroda is pretty high: Arihant|publisher=[[தி எகனாமிக் டைம்ஸ்]] |date=28 May 2010 }}</ref>
 
===இருபதாம் நூற்றாண்டு===
[[File:Baroda Lvp.JPG|thumb|350px|right|மூன்றாம் சாயாஜிராவ் கெயிக்வாட் கட்டிய லட்சுமி விலாஸ் அரண்மனை, ஆண்டு 1890]]
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பரோடா சமஸ்தானம், பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது. <ref>[[Imperial Gazetteer of India]] vol. IV (1907), p. 92.</ref> 1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பரோடா அரசின் மக்கள் தொகை 20, 32,798 ஆக இருந்தது. <ref>{{cite book |author1=Somerset Playne |author2=R. V. Solomon |author3=J. W. Bond |author4=Arnold Wright | title = Indian states: a biographical, historical, and administrative survey | publisher = Asian Educational Services | year = 2006 | isbn = 978-81-206-1965-4 | page=9 | chapter=The State of Baroda |edition=illustrated}}</ref>
 
[[அம்பேத்கர்]] தனது சுயசரிதை நூலிலின் இரண்டாம் அத்தியாயத்தில், பரோடா சமஸ்தானத்தில் [[தீண்டாமை]] பற்றி குறிப்பிட்டுள்ளார்.<ref>{{cite book|last1=Ambedkar|first1=Dr. Bhimrao|title=Waiting for a Visa|date=1991|publisher=Dept. of education, Government of Maharashtra|location=Mumbai|pages=4071–4090|url=https://drambedkarbooks.files.wordpress.com/2009/03/selected-work-of-dr-b-r-ambedkar.pdf|accessdate=15 April 2015}}</ref>
 
1937இல் ஜமீந்தார்கள் ஆண்ட ரேவா காந்தா, சூரத், நாசிக், கைரா மற்றும் தாணா பகுதிகள் பரோடா-குஜராத் முகமையுடன் இணைக்கப்பட்டது.<ref>[http://www.hubert-herald.nl/BhaGujarat1.htm History of the State of Gujarat]</ref>
இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த [[வல்லபாய் படேல்|சர்தார் வல்லபாய் படேலின்]] பெரு முயற்சியால் 1949இல் அனைத்து [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்|சுதேச சமஸ்தானங்கள்]] இந்தியாவின் பெருநிலப்பரப்புடன் இணைத்த போது, 15,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கொண்டுருந்த பரோடா அரசும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. <ref>McLeod, John; ''Sovereignty, power, control: politics in the States of Western India, 1916-1947;'' Leiden u.a. 1999; {{ISBN|90-04-11343-6}}; p. 160</ref>
இறுதியாக 5 நவம்பர் 1944இல் பரோடா-குஜராத் முகமையை மேற்கு இந்திய அரசுகளின் முகமையுடன் இணைக்கப்பட்டு, பரோடா சட்டமன்றம் அமைக்கப்பட்டது.
 
வரிசை 217:
}}
{{coord|22.18|N|73.12|E|source:kolossus-cawiki|display=title}}
 
[[பகுப்பு:குசராத் வரலாறு|*]]
[[பகுப்பு:பரோடா சமஸ்தானம்]]
"https://ta.wikipedia.org/wiki/பரோடா_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது