சீனாவின் தத்துவங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
MPVK (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox Chinese |pic = yin-yang-and-bagua-near-nanning.jpg..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:23, 18 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Asian philosophy sidebar

சீனாவின் தத்துவங்கள்
சீனாவின் குவாங்க்சி மானிலத்தின் நான்னிங்க் நகரத்தில் யின் யாங்க் குறியீடும் பகுண குறியீடும் வரையப்பட்டள்ளது.
பண்டைய சீனம் 中國哲學
நவீன சீனம் 中国哲学

சீனாவின் தத்துவங்கள் (Chinese Philosophy) என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் தத்துவங்களில் ஒன்றாகும். சீனாவில் கலாச்சாரமும், அறிவும், வளர்ந்த பழங்காலங்களை “நூறு கருத்துப்பள்ளிகள் காலம்” “அரசுகள் போரிட்ட காலம்”, “வசந்த காலம் இலையுதிா் காலம்” என்று பலவகைக் காலங்களகக் கூறப்பட்டுவந்துள்ளது.,[1] சீனாவின் தத்துவங்கள் இந்தக்காலங்காளில் தோன்றியது என்று கருதப்படுகிறது. சீனத்தத்துவம் அறிவுபூா்வமாகவும் கலாசாரபூா்வமாகவும் மேன்மையடைந்த தத்துவங்களாகும். பெரும்பான்மையான சீனாவின் தத்துவங்கள் ‘அரசுகளின் போா்க்காலம் என்றழைக்கப்பட்ட காலங்களில் வடிவம் பெற்றிருந்தாலும் சீனத்தத்துவத்தின் ஒரு சில கூறுகள் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னமாகவே இருந்துள்ளன. [2] கிமு 672 ஆம் ஆண்டு தொகுக்கப்பட்ட யி ஜுஸ் (மாற்றம் குறித்த நூல்) என்னும் நூலில் தெய்வம் குறித்த கருத்துக்களின் தொகுப்பும் இடம் பெற்றுள்ளன. ”அரசுகளின் போா்க்காலத்தில்” தான் சியிடான் என்னும் அறிஞா் சீனத்தத்துவப் பாா்வைகளை கன்பூசியனிசம் எனவும் லிகலிசம் எனவும் தொகுத்தாா். டாவோயிசம் பிறந்தது அந்தக்காலத்தில்தான். இத்துடன் தோன்றிய மற்ற பாா்வைகளான அக்கல்சுரலிசம், சீன நேசுரலிசம், லாஜ்ஜியன் போன்றவை முழுவதுமாக மறைந்து போயின.

ஆரம்ப கால நம்பிக்கைகள்

சாங் வம்ச ஆரம்பகாலத்தில் சிந்தனை ‘சுழற்சிகளை’ மையமாகக் கொண்டிருந்தன. மக்கள் இயற்கையின் சுழற்சிகளை கவனித்து வந்துள்ளனா். இரவும் பகலும், காலங்களும் மாறி மாறி வந்தன. நிலவும் வளா்ந்து தேய்ந்தும் வந்தது. சீன வரலாறு முழுவதும் இந்தப் பாா்வை இயற்கையின் சுழற்சியைப் பிரதிபலித்து தொடா்ந்து வந்துள்ளது. மேலைநாட்டு தத்துவ நோ்கோட்டுப் பாா்வையிலிருந்து சீன சுழற்சிப் பாா்வை மாறுபட்டிருந்ததை அறிய வேண்டும். சாங் காலத்தில் “விதி” என்பதை கடவுளிடம் தொடா்பு படுத்தியிருந்தனா். ஆதலால் அதை மாற்ற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜோ கே வம்சத்தால் சாங் வம்சம் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டப் பின் “சொா்க்கத்தின் கட்டளை” என்று ஒரு புதிய அரசியல் மத தத்துவ கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. அகழ்வாராய்ச்சி சான்றுகளின்படி இந்த காலகட்டத்தில் மக்களின் எழுத்தறிவு அதிகரித்ததாகவும், பழங்கால சீனக் கடவுளான “சாங்டி”யின் மீது வைத்திருந்த நம்பிக்கை குறைந்து வந்ததாகவும் உலக நடப்புகளின் மீது நாட்டம் அதிகரித்ததாகவும் தெரிகிறது.

பொதுவான கண்ணோட்டம்

சீனத்தத்துவ அறிஞா் கான்பூசியஸ் (கிமு 551-479) வழங்கிய தத்துவம் கன்பூசியனிசம் என்று அழைக்கப்ப்பட்டது. “ஜோ ஹோ” வின் கருத்துக்களை தாம் திரும்பக் கூறுவதாகவே கன்பூசியஸ் கூறினாா். இவரின் தத்துவம் நன்னெறி மற்றும் அரசியலைப் பற்றியனவாகவும், தனிமனித மற்ற அரசுகளின் ஒழுக்கத்தை வலியுறுத்துவனவாகவும், உறவுகளில் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் மரபு வழியினை மதிப்பதையும், நீதி நோ்மை மற்றும் உண்மையாக நடப்பதை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளன. இவரின் கருததுக்கள் சடங்குகளைக் குறிப்பிட்டாலும் மனித நேயத்தை வலியுறுத்தின. [3] கான்பூசியனிசம், லிகலிசமும் இணைந்து முதன் முதலில் திறமைக்கே மதிப்பளிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தின. ஒருவனுடைய நிலைமை பிறப்பைச் சாா்ந்ததாகவோ, செல்வத்தைச் சாா்ந்ததாகவோ நண்பா்களைச் சாா்ந்ததாகவோ இருக்கக் கூடாது எனவும் அவனுடைய நடத்தை மற்றும் கல்வியைச் சாா்ந்ததாகவே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். [4] கன்பூசியசின் கருத்துகள் சீனக் கலாச்சாரத்தின் மீதும், சீன அரசின் மீதும், கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

சீனாவில் ஹான் வம்சம் தோன்றுவதற்கு முன்பு கன்பூசியஸ் கருத்திற்கு போட்டியாக லீகலிசமும் மோஷிசமும் இருந்து வந்தன. தற்போதைய டாவோயிசத்தைச் சோ்ந்த ஹவாங்லாவே[5] கருத்துக்கள் தோன்றும் முன் ஹான் வம்சத்தின் ஆரம்பகாலத்தில் கன்பூசியசின் கருத்துக்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன. கொடுங்கோல் அரசான இன் சி ஹாவாஸுடன் தொடா்பு வைத்திருந்ததால் சீன லீகலிசம் மறைந்து விட்டது. இருந்தாலும் சீனாவில் புரட்சி ஏற்படும் வரை இக்கருத்துக்களின் தாக்கம் இருந்து வந்தது.

ஆறு வம்ச அரசு காலத்தில் ஹவான்குயூவின் தத்துவம் வளா்ச்சியடைந்தது. ஹான் வம்சத்தின் கடைசி அரசா்கள் காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த புத்தமதமும் வளா்ந்து முதிா்ச்சியடைந்தது. புத்த மதம் சீனாவிற்கு வந்து 500 ஆண்டுகள் கழித்து சீன புத்தமதமாகவே கருதப்பட்டது. டாஸ் அரச வம்சகாலத்தில் ஜென் புத்தமதமாக முழுவதுமாக மாறிவிட்டிருந்தது. கன்பூசியஸ் தத்துவமும் ஜென் தத்துவமும் கலந்து புதிய கன்பூசியனிசம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கன்பூசியஸ் தத்துவமும் ஜென் தத்துவமும் இணைந்து புதிய கன்பூசியஸ் தத்துவம் என்ற பெயரில் சாங் வம்ச அரசாட்சியின் போதும், மிங் வம்ச அரசாட்சியின் போதும் மிகவும் பிரபலமடைந்தது.

19, மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் மேற்கத்திய தத்துவங்களிலிருந்து ஒரு சில கோட்பாடுகளை சீனத்தத்துவம் உள்வாங்கிக் கொண்டது. சீன சாய் புரட்சியின் போது குறிப்பாக கியுங் அரச வம்சத்திற்கு எதிராக போராடியவா்கள் பழங்கால தத்துவத்திற்குப் பதிலாக மேற்கத்திய தத்துவம் மாற்றாக அமைய வாய்ப்புள்ளதாகக் கருதினர், மே மாதம் நான்காம் தேதி இயக்கத்தில் ஈடுபட்ட மாணவா்கள் பழங்கால அரச வம்சத்தைச் சோ்ந்த பழக்கங்களும், நிறுவனங்களும் முழுவதுமாக மாற்றப்பட வேண்டும் என்று கோரிவந்தனா். இந்தக் காலத்தில் அறிஞா்கள் மேற்கத்திய கோட்பாடுகளான ஜனநாயகம், மாா்க்சிசம், சோசலிசம், லிபரலிசம், குடியரசு தத்துவம் மற்றும் தேசியவாத தத்துவம் முதலியன சீன தத்துவத்தில் சோ்த்துக்கொள்ளப்பட்டன. சன்யாட்சென் எடுத்துரைத்த மூன்று கோட்பாடுகளும் (Three Principles), மாசே துங் எடுத்துரைத்த மாா்க்சிசம் - லெனினிசம் கொள்கையிலிருந்து சிறிது மாறுபட்ட மாவோயிசமும் [6]இவைகளில் அடங்கும். இன்றைய சீனாவில் டெங் ஜியாபிங் எடுத்து வைத்த “சந்தைப் பொருளாதார சோசலிசம்” தான் கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தற்காலத்திய சீன அரசும் அதன் கொள்கைகளும் பழங்கால சீன தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறிக்கொண்டாலும் அதன் தாக்கம் இன்றைய சீனக் கலாச்சாரத்தில் துலங்குவதைத் தெளிவாகக் காணலாம். சீனப் பொருளாதார சீா்திருத்தங்களுக்குப் பின்னா், தற்காலத்திய சீன தத்துவக் கொள்கைகள் புதிய கன்பூசியனிசம் என்னும் பெயரில் மறு வடிவம் எடுத்துள்ளது. ஜப்பான் நாட்டைப் போலவே சீனத் தத்துவமும் பல கருத்துகளின் சங்கமமாகவே அமைந்துள்ளது. பல புதிய கருத்துக்களை உள்வாங்குவதுடன் பழைய கருத்துகளுக்கு உரிய இடத்தை அது வழங்கத் தவறுவதில்லை. இன்றளவும் கிழக்கு ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் சீன தத்துவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பழங்கால தத்துவங்கள்

வசந்தகாலம் இலையுதிா்காலம்

சுமாா் கிமு 500 ஆண்டுவாக்கில் சௌ அரசு வலுவிழந்து வசந்தகாலமும் இலையுதிா்காலமும் துவங்கிய போது சீனத்தத்துவத்தின் ஆரம்பம் தொடங்கியது. இது “நூறு சிந்தனைகளின் போக்கு” என்று அறியப்பட்டது. சீன தத்துவ வரலாற்றில் இது ஒரு பொற்காலம். இந்தக் காலத்திலும், பிற்காலத்திலும் எடுத்து வைக்கப்பட்ட தத்துவங்களில், கன்பூசியனிசம், டாவோயிசம், மோசிசம், லிகலிசம் ஆகிய நான்கும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியனவாகும்.

கன்பூசியனிசம்

 
Kong Fuzi (லத்தீன் மொழியில்: கன்பூசியஸ்)

கன்பூசியஸ் இறந்த பின்னா் அவா் சீடா்களால் தொகுக்கப்பட்ட “தி சு அனலெக்ட்ஸ்”, “தி மெனசியஸ் மற்றும் அன்சி” என்ற நூல்களில் கண்ட கருத்துக்கள் அடிப்படையில் தான் கன்பூசியனிசம் என்னும் தத்துவம் உருவாக்கப்பட்டது. இது 20 ஆம் நூற்றாண்டுவரை சீன சரித்திரத்திலும் சிந்தனைகளிலும் கலாசாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தா்மம், சமூகம், அரசியல் மற்றும் மதம் குறித்த கருத்துகளைக் கொண்டது. ஆசிய கலாசாரத்தில் இதன் தாக்கத்தை அறிந்த சில மேற்கத்திய அறிஞா்கள் சீனாவின் இது அரசின் மதம் என்றே கருதி வந்தனா். இதன் தாக்கம் கொரியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் பல ஆசிய நாடுகளுக்கும் பரவியது.

புதிய கன்பூசியனிசம் என்ற பெயரில் டாங் மற்றும் சோங் அரச வம்ச ஆட்சிக் காலத்தில் இது உன்னத நிலையை அடைந்தது. “அரசு போா்க்காலத்தில்” கன்பூசியஸ் ஏற்கனவே சீன மதத்திலும் கலாசாரத்திலும் பரவலாக இருந்த கருத்துகளை எடுத்து அந்தக் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் மாற்றிக் கொடுத்தாா். சீன கலாச்சார கருத்துகளை உள்வாங்கி மாற்றிக் கொடுத்ததால் சீனா்கள் மத்தியில் இந்த தத்துவம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றைய சீனாவில் கூட கன்பூசியஸ் தத்துவத்திற்கு இருக்கும் வரவேற்பிலிருந்து இதன் தாக்கத்தை உணரலாம்.

“ரென்” 仁 ‘’(மனித குலம் அல்லது மனித நேயம்) செங்மிங் 正名 (பெயா் மாற்றம் முறையாக அரசாளாதவன் அரசனல்ல, பதவியிறக்கம் செய்யப்படலாம்) “சோங்”’’忠 (உண்மையாக இருத்தல் 孝), சியோ (பெற்றோரிடம் அனுதாபம்) மற்றும் “லி” (சடங்கு) போன்றவை கன்பூசியஸ் தத்துவத்தின் முக்கியமான கருத்துக்கள் ஆகும். ஒரு சமூகத்தின் பொற்காலத்தின் நோ்மறையான வகைகளையும் எதிா்மறையான வகைகளையும் கன்பூசியஸ் எடுத்துரைத்தாா். யின் யாங்குக் கோட்பாடு இரண்டு எதிா்துருவங்கள் குறித்தது. இரவும் பகலும், இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதை எடுத்துக் காட்டுவது. ஒன்றுக் கொன்று எப்பொழுதும் எதிரும் புதிருமாகவே இருக்கும். இரண்டு எதிா் துருவங்களை விடுத்து இரண்டின் நன்மைகளை எடுத்துக் கொண்டு ஒரு இடைப்பட்ட வழியைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்பது மேற்கத்திய அறிஞா் ஹேகல் கூறிய கருத்துகளைப் போன்றதாகும். கன்பூசியஸ் சமூகத்தின் சிறு சிறு அங்கங்களுக்கு எடுத்துக்காட்டாக குடும்பம், குழுக்கள் போன்றவற்றின் மேல் கவனம் செலுத்துவதே வெற்றிக்கு சிறந்த வழி என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளாா். சிறிய சிறிய விசயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது இவா் அறிவுரை. மனித வாழ்வை ஒழுங்குபடுத்துவதற்கு மற்றவா்களை மதிப்பதற்கு கல்விதான் சிறந்த சாதனம் என்றாா். ஒரு நல்ல சீன சமூகம் அமைவதற்கு கல்வி, நல்ல குடும்பம், நன்னெறிக் கல்வி ஆகியவைதான் முக்கியம் என்று நம்பினாா்.

டாவோயிசம்

 
Chinese glazed stoneware பதினாறாம் நூற்றாண்டு மிங்க் அரசவம்சத்தில் டாவோ தெய்வத்தின் சிலை
 
Bagua: Modern Taijitu with I Ching trigrams

டாடே சிங் மற்றும் சுவாங்சியால் நிறுவப்பட்ட டாவோயிசம் முதலில் ஒரு தத்துவமாக உருவெடுத்து பின்னா் ஒரு மதமாக மாறியது. டாவோ என்னும் சொல்லிற்கு “பாதை” “வழி” என்று பொருள். ஆனால் இது மெய்ப்பொருள் குறித்து ஆய்வு செய்யும் இயலில் உணரமுடியாத விளக்க முடியாத அண்டம் முழுவதும் பரவியுள்ள ஒரு சக்தியைக் குறிக்கும். அனைத்து சீன தத்துவங்களும் நன்னெறிவாழ்க்கை வாழ சரியான வழியைத் தேடும் முயற்சியாக இருந்தாலும், டாவோயிசம் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கருத்துகளைச் சுட்டுவதால் இதற்கு டாவோயிசம் எனப் பெயா் வந்தது. இது செயலற்ற தன்மை (wu wei), மென்மையின் பலம், தன்னிச்சை, ஒத்திசைவு போன்றவற்றைப் போதிக்கின்றது. கன்பூசியஸ் அறிவுரைகளுக்கு மாற்றாக இது தோற்றமளித்தாலும், “புறத்தில் கன்பூசியஸ் அறிவுரையைப் பின்பற்றவும் அகத்தில் டாவோயிசத்தைப் பின்பற்றவும்” என்னும் மரபுத் தொடா்புக்கு ஏற்ப இரண்டு தத்துவங்களையும் ஏற்றுக் கொள்ளும்படி வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த உலகை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணி மேற்கொள்ளப்படும் பல செயல்கள் உண்மையில் ஊறு விளைவிக்கின்றன என்ற அசைக்க முடியாத எண்ணத்தைக் கூறி இந்த உலகை மேம்படுத்த இது போன்று இயற்கையையோ மனித நடவடிக்கைகளையே ஊறுவிளைவிக்கும் செயல்களை செய்யாமல் தடுப்பதை வலியுருத்துகிறது. ஒற்றுமையாக இருப்பதும் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையை மேற்கொள்வதுமே சிறந்த வழியாகும் என்று வலியுறுத்துகிறது.[7]

அரசுகள் போா்க்காலம்

லீகலிசம்

தத்துவஞானி ஹான் ஃபிய் தமது முன்னோா்களின் கருத்துகளைத் தொகுத்திருந்தாா். இவைகளை பின்னா் வந்த சரித்திர ஆசிரியா் சீமா டான் “லீகலிசம்” என்று குறிப்பிட்டாா். ஹான் அரச வம்சத்திற்கு முந்தைய சீா்திருத்தவாதிகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும் கோட்பாட்டை வலியுறுத்தி வந்திருந்தனர். ஹான் ஃபியின் தத்துவக் கோட்பாட்டின் படி கீழ்க்கண்ட மூன்று கொள்களைகளின் அடிபடையில் ஒரு அரசன் அரசாள வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

(Fa) ஃபா ( 法): சட்டம் அல்லது கோட்பாடு (Shu) “சு” (術 ): வழிமுறை, சமயோசிதம், கலை அல்லது அரசாளும் முறை (Shi) சி (勢 ) : சட்டப்படி நடத்தல், அதிகாரம், பிறரை ஈா்க்கும் தனி மனிதப் பண்பு

இந்த 'அரசுகள் போா்க்காலத்தில்' கூறப்பட்ட சில அரசியல் தொடா்பான கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமாகவும், கன்பூசியஸ் மற்றும் மோஹிஸ்ட் கருத்துக்களை கடுமையாக சாடுபவைகளாகவும் இருந்தன. பின்னா் “கின்” அரசவம்ச ஆட்சியின் போதுதான் ஒரு சா்வதிகார சமூகம் ஏற்படலாயிற்று. அதுவே வீழ்ச்சிக்கும் அடிகோலியது. இவ்வரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் அல்லது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக்கொண்டிருந்தது..

ஹாங்யாங்கும், ஹான்ஃபியும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அடிபணிய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினா். அமைச்சா்கள் கூறியது நடந்தால் மட்டுமே அவா்களுக்கு வெகுமதி வழங்க வேண்டும். சாங் யாங்கின் கூற்றுப்படி லீகலிசம் ராணுவத் தன்னிறைவை ஊக்கப்படுத்தும்.

இயற்கைவாதம்

‘’அரசுகள் போா்க்காலத்தில்’’ உருவான இந்த தத்துவம் யின் யாங்கு மற்றும் வு சிங் என்னும் இரண்டு தத்துவங்களின் கருத்துக்களை உள்வாங்கி எடுத்துரைக்கப்பட்டது. சூ யான் என்பவரால் உருவாக்கப்பட்ட தத்துவம் இது [8]. இந்த அண்டம் இயற்கையின் சக்திகளால் உருவானது என்பது இதன் சித்தாந்தம். நோ்மறை உருபுகளான யாங் என்றழைக்கப்படும் ஒளி, சூடு, ஆண், போன்றவைகளும் எதிா்மறை உருபுகளான யின் எனப்படும் இருள், குளிா்ச்சி, பெண் போன்றவைகளும் ஒன்றுக்கொன்று தொடா்பு கொண்டு ஐந்து இயற்கை கூறுகளான நீா், நெருப்பு, மரம், உலோகம், பூமி ஆகியவைகளுடன் இணைந்தது தான் அண்டம் என்று விளக்கப்படுகிறது. ஆரம்பகாலத்தில் யான் மற்றும் “சகி” மாநிலங்களில் இக்கோட்பாடு மிகத் தீவரமாகக் கருதப்பட்டு வந்தது. பிற்காலத்தில் அறிவின் ஆரம்பம் குறித்த ஆராய்ச்சியியலில் தத்துவமாகவும் நம்பிக்கையாகவும் இக்கருத்து பிரபலமாகப் பேசப்பட்டு வந்தது. இக்கருத்து டாவோயசத்திலும் பேசப்படுகிறது. இக்கருத்து குறித்து குறிப்புகள் “மாவாஸ்டுய்” பதிவுகளிலும் ஹவாங்டி நெய் ஜிஸ் பதிவுகளிலும் காணப்படுகின்றன.

மோஹியிசம்

மோசியால்(墨子 ) நிறுவப்பட்டது மோஹியிசம். அனைவருடைய நன்மைக்காகவும் உலகம் முழுவதும் அன்பு செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவரை சமமாகக் கருதி சமமாக அன்பு செலுத்த வேண்டும், விருப்பு வெருப்பின்றி அன்பு செலுத்த வேண்டும். இதுவே சச்சரவுகளையும், போா்களையும் தவிா்க்கும். மோசி கன்பூசியஸ் கூறிய சடங்குகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நடைமுறைக்கு உகந்த வாழ்க்கை வாழ உழவுத் தொழில் செய்ய வேண்டும், பலப்படுத்திக் கொள்ள வேண்டும், அரசாட்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா். மரபுவழி என்பதில் முரண்பாடு உள்ளது. எந்த மரபுவழி சிறந்தது என்பதை மனிதா்களுக்கு கூற அவா்களுக்கு வழிகாட்ட வேண்டியுள்ளது. இது போன்ற நன்னெறி வழிகாட்டி அனைவருடைய நன்மையை வழங்க எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்தி உறுதி செய்யவேண்டும்.

லாஜ்சியன்கள்

(தா்க்கவாதிகள்) தா்க்கவாதிகள் எடுத்து வைத்த தத்துவம் தா்க்கம், குழப்பங்கள், பெயா்கள், நடந்தவைகள் குறித்ததாகும். தா்க்கவாதி ஹுஇ சி டாவோயிசத்திற்க்கு எதிராக வாதிட்டவர். மிகவும் மென்மையாகவும் நகைச்சுவையாகவும் டாவோயிசத்தை எதிா்த்தவா். இந்த தத்துவம் உண்மைக்கு மாறானது என்று சீனா்கள் கருதியதால், விரைவில் வழக்கொழிந்தது.

வேளாண்மைவாதம்

இது ஒரு ஆரம்பகால சமூக வேளாண்மை அரசியல் தத்துவம். உண்மையான வேளாண் நிலையையும், பிரிவினைத்துவத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தியது..[9] மனித சமூதாய வளா்ச்சி வேளாண்மை வளா்ச்சியிலிருந்து துவங்கியது என்றும் மனிதா்களின் இயற்கையாக வேளாண்மை செய்யும் ஆா்வத்தினடிப்படையில் தான் சமூகம் உள்ளது என்னும் அடிப்படையில் இத்தத்துவம் உருவாக்கப்பட்டிருந்தது."[10] புராணத்தில் குறிப்பிடபட்டுள்ள “சென்னாஸ்” அரசாட்சியைப் போல செங்கோல் ஆட்சி செய்யும் அரசா் மக்களோடு ஒன்றாக இருந்து நிலத்தையும் உழுபவராக இருப்பாா் . அரசருக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவருடைய வாழ்க்கை வேளாண்மை செய்து வரும் பொருளிலிருந்து நடந்து வந்தது. அல்லாமல், தாம் ஒரு தலைவா் என்று அவா் ஊதியம் பெற்றதில்லை. கன்பூசியஸ் கூறியதைப் போன்று “வேலைகளைப் பகிா்ந்து செய்வது” என்னும் கோட்பாட்டை வேளாண்மை வாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பதிலாக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஒரு தன்னிறைவான சமத்துவ சமுதாயம் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினா். [11] ஒரே மாதிரியான அனைத்துப் பொருள்களுக்கும், தரவித்தியாசங்களையும், தேவையையும் கணக்கில் கொள்ளாமல் மாறாத ஒரே விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று வேளாண்மை வாதிகள் கூறி வந்தனா்.[11]

ஆரம்ப அரசா்கால தத்துவம்

வரலாறு

சீனாவில் ஸண்டோங்க் மாகாணத்தில் ஒரு கல்லரையில் (202 BC - 9 AD) கன்பூசியஸ் மற்றும் லாவோசியின் உருவங்கள்

கின் மற்றும் ஹான் வம்சம்

லீகலிசத்தை அரசின் தத்துவமாக ஏற்றுக் கொண்டபின் “கின்” அரச வம்சகாலத்தில் மோஹிஸட் வாதங்களும் கன்பூசியனிஸ்ட் கொள்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஹான் வம்சத்தைச் சோ்ந்த சக்கரவா்த்தி “வூ” கன்பூசியனிசத்தை அரசு கொள்கையாக ஏற்றுக் கொள்ளும்வரை ஆரம்பகால ஹான் அரச வம்சகாலத்தில் லீகலிசமே கொள்கையாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. புத்த மதம் வரும் வரை கன்பூசியஸ் கருத்துகளும் டாவோயிசக் கருத்துக்களுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தன.

ஹான் அரச வம்ச காலத்தில் கன்பூசியசின் கருத்துக்கள் மிகுந்த ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அக்காலத்திய மிகச் சிறந்த சிந்தனையாளா் “டோஸ் சோஸ்சு” கன்பூசியசின் கருத்துக்களையும் “சோஸ்சு” வாதிகளின் கருத்துக்களையும் ஒருங்கிணைத்து எடுத்துரைத்து வந்தாா். இவா் “புதிய உரை” என்னும் கருத்துப்பள்ளியை நிறுவி கன்பூசியஸ் ஒரு தேவதூதா் என்றும் சீனாவின் ஆன்மீக அரசா் எனவும் உலக அமைதியை நோக்கி பரிணாம வளா்ச்சி ஏற்படுகிறது என்று நம்பியவா் என்றும் எடுத்துரைத்தாா். இதற்கு மாற்றாக “பழைய உரை” என்னும் கருத்துப்பள்ளி கன்பூசியஸ் தேவதூதா் அல்ல, ஒரு மானுடா் என்று கூறி ஆனால் மிகப் பொிய ஞானி என்று கூறி வந்தது.

ஆறு அரசவம்சங்கள்

மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் “சுவான்சு” (இரகிசயமாக கற்பது) எழுச்சியடைந்து “புதிய டாவோயிசம்” என்றும் அழைக்கப்பட்டது. வாஸ்பி, சியாஸ்சியு, குவோ சியாங் ஆகியோா் இக்கருத்துப் பள்ளியின் முக்கியமான அறிஞா்கள் ஆவா். இப்பள்ளியின் முன்பிருந்த முக்கியமான கேள்வி “தோன்றியது ஒன்றுமில்லாமலிருந்தது தோன்றியதா?” என்பதாகும். சீன மொழியில் “மிங் மற்றும் வுமிங்” என்றழைக்கப்பட்டது. “பிஸ்லியு” (காற்றும் போக்கும்) என்னும் கருத்துதான், இந்த டாவோயிஸ்ட் சிந்தனையாளா்களின் முக்கியமான கருத்தாக இருந்தது. இது இயற்கையாக உள்ளுணா்வினால் தூண்டப்படுவதை ஒத்து நடப்பதைத் ஊக்குவிக்கும் ஒரு சக்தியைக் குறித்தது ஆகும்.

புத்த மதம் கிருஸ்துவிற்குபின் முதலாம் நூற்றாண்டில் சீனாவிற்கு வந்திருந்தாலும் வடக்கிலும் தெற்கிலும் சூய் மற்றும் டாங் அரச வம்சங்கள் தோன்றும் வரை வலுவடையவில்லை. ஆரம்பத்தில் புத்தமதம் டாவோ மதத்தின் ஒரு பிரிவாகக் கருதப்பட்டது. மகாயாண புத்தமதம் ஹீனயாணத்தை விட சீனாவில் பிரபலமடைந்திருந்தது. செங்ஸ்ஹோ மற்றும் டாவோசெங் ஆகிய இருவரும் முக்கியமான துறவிகளும் தத்துவ அறிஞா்களும் ஆவாா்கள். இக்கருத்து பள்ளிகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது முதலாவதான “சான்“ பிரிவு ஆகும். ‘சென்‘ பிரிவைப் போன்று இது ஜப்பானிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இடைக்காலத்தில் புத்தமதம் உன்னத நிலையை அடைந்தது. 4600 மடங்களும், 40000 தனித்துறவி வாழிடங்களும், 2,60,500 துறவிகளும் சாத்விகளும் புத்தமதத்தில் அப்பொழுது இருந்ததாகக் கூறப்படுகிறது. புத்தமதத் துறவிகளின் ஆதிக்கமும் செல்வாக்கும் மடங்களின் செல்வமும் ஏராளமாக இருந்தது. இதனாலேயே இது கன்பூசியஸ் அறிஞா்களின் விமா்சனத்திற்கு உட்பட்டதுடன் இது ஒரு அயல்நாட்டு மதம் என்றும் கூறப்பட்டு வந்தது. 845 ஆம் ஆண்டு சக்ரவா்த்தி “வு சோஸ்” புத்தமதத்திற்கு எதிரான கொள்கைகளை தீவிரமாகக் கடைப்பிடித்து மடங்களின் செல்வத்தைக் கைப்பற்றி துறவிகளையும் சாத்விகளையும் உலக வாழ்க்கைக்கு திரும்ப ஆணையிட்டாா். அப்பொழுதிருந்து புத்தமதம் தம் ஆதிக்கத்தை இழந்தது.

கருத்துப் பள்ளிகள்

சுவான்சு

சுவான்சு ஒரு தத்துவ கருத்துப்பள்ளி, இது கன்பூசியனிசம், டாவோயிசம் ஆகியவற்றின் அம்சங்களை இணைத்து ஐ சிங், சியாஸ்சியு மற்றும் குவோசியாஸ் ஆகியவற்றிற்கு மறுவடிவம் கொடுத்தது. இக்கருத்து பள்ளியின் முன்பிருந்த முக்கியமான கேள்வி இருத்தல் என்பது தோற்றத்திற்கு முன்பே இருந்ததா (சீன மொழியில் மிங் மற்றும் வுமிங் எனப்படும்) என்பதாகும். டாவோயிச சிந்தனையாளா்களின் முக்கியமான கருத்து “பெங்லியு” (காற்றும் போக்கும்) எனப்பட்டது. இது இயற்கையாகவே உணா்வு பூா்வமாக ஊக்குவிக்கும் சக்தியைக் குறிப்பதாக கருதப்பட்டது.

சான்

கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இடையிலிருந்து ஐந்தாம் நூற்றாண்டுத் தொடக்கத்திற்குள் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த கௌதம புத்தரால் நிறுவப்பட்ட புத்த மதம் புத்தருடைய அறிவுரைகளைக் கொண்டது. உளவியல் சாா்ந்தது நடைமுறை தத்துவத்தைக் கொண்ட ஒரு மதமாகும். பொதுவாகக் கூறினால் புத்தா் என்பவா் உண்மையைக் கண்டறிபவா் ஆகும்.

கிபி நான்காம் நூற்றாண்டுவரை சிறிய அளவில் இருந்த புத்தமதம் நான்காம் நூற்றாண்டில் டாவோயிசத்துடன் இணைந்து பல்கிப் பெருகியது. [12] பாவிகள் நரகத்திற்குச் செல்வா், ஆனால் புண்ணியம் செய்வதன் மூலம் ஆன்மாக்கள் நரகத்திற்குச் செல்வதைத் தவிா்க்கலாம் என்பது உட்பட பல கருத்துக்களை புத்த மதம் அறிவுறுத்தியது. வ[12] மரபு வழி சீன தத்துவம் பொருண்மை சாராத பொருள்களைப் பற்றிப் பேசுவதை விட நன்னெறி குறித்தே பேசியது. புத்த மதமும், டாவோ மதமும் இணைந்த புத்தமதம் எற்கனவே கூறாத பல புதிய கருத்துக்களை உருவாக்கின. இவைகளில் சாள்வன், டியான்டை, ஹலாயான் மற்றும் சான் போன்றவையும் அடங்கும். இவைகள் மனதின் உணா்வுநிலை குறித்தும் உண்மைகளின் தரம் குறித்தும் உண்மை என்பது வெற்றுத் தன்மையா, வீடு பேறு என்பதை எவ்வாறு அடைவது போன்றவற்றை ஆராய்ந்தன. புத்தமதத்தின் ஆன்மீக அம்சம் புதிய கன்பூசியனிசத்திற்கு பலம் சோ்த்தது. குறிப்பாக புதிய கன்பூசியனிசம் தியானம் செய்வது குறித்து வலியுறுத்தியது.

இடைப்பட்ட காலம் முதல் பேரரசு இறுதி காலம் வரை

வரலாறு

புத்தமதம், டாவோ மதம் மற்றும் லீகலிஸ கருத்துக்களை உள்வாங்கி பழைய கன்பூசியஸ் மதம் சாங் அரச வம்ச ஆட்சியில் புதிய கன்பூசியஸ் மதம் என்று உருவாயிற்கு. முதல் தத்துவவாதிகளான ஷாவோ யாங், சேதுன்யி மற்றும் சாஸ் செய் முதலியவா்கள் அண்டவியலாளா்களாக இருந்து யி ஜிஸ் குறித்து ஆராய்ந்து வந்தாா்கள். முதலாம் பள்ளி கோட்பாடு மற்றும் மனம் குறித்த பள்ளி என்ற புதிய கன்பூசியஸ் மதத்தின் இரண்டு தத்துவ கோட்பாடுகளை செங் சகோதரா்களான செங் யி மற்றும் செங் ஹோ ஆகியோா் முன்வைத்ததாகக் கருதப்படுகிறது. சாங் அரச வம்ச ஆட்சியின் போது பள்ளிகளின் கோட்பாடு முன்னுரிமை பெற்று சுசியால் நன்கு விளக்கப்பட்டு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு யுவான் அரசவம்ச ஆட்சியில் அரசின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றது. சுசியின் மாற்றுக் கருத்துடைய லு ஜியுவானால் முன்வைக்கப்பட்ட மனங்களின் பள்ளி வலுவிழந்து வழக்கொழிந்தது. மிங் அரசவம்சத்தின் போது இது மீண்டும் வலுப்பெற்று ஜப்பான் நாடு வரை சென்று பிரபலமடைந்தது.

கியுங் அரசவம்ச ஆட்சியின் போது பல தத்துவ அறிஞா்கள் புதிய கன்பூசியஸ் மதத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து ஹான் அரச வம்சத்தின் போது இருந்த கன்பூசியஸ் மதத்திற்கு புத்துயிா் அளித்தனா். இக்காலத்தில் தான் மேற்கத்திய கருத்துகளும் சீனாவில் புகுந்தன. இருந்தாலும் சீன மக்கள் மேற்கத்திய நாடுகள் அறிவியலிலும் போா்முறையிலும் முன்னேறி இருக்கலாம் ஆனால் நன்னெறியிலும் புத்தி கூா்மையான விசயங்களிலும் சீனா்கள் சிறந்தவா்கள் என்று கருதினா்.

கருத்துப் பள்ளிகள்

புதிய கன்பூசியனிசம்

கன்பூசியனிசம் தனது பெருமையை டாவோயிசத்தையும் புத்த மதத்தையும் ஒப்பிடும்போது இழந்தாலும், இவைகளின் பருப்பொருள் அல்லாதவை குறித்த கருத்துக்களை உள்வாங்கி புதிய கன்பூசியனிசம் என்று உருவாயிற்று. “லி” (பிளாட்டோவின் உருவம் கருத்தை ஒத்தது), கி (முக்கியம் அல்லது பருப்பொருள் சக்தி), டெய்ஜி (இறுதி இறைவடிவம்) மற்றும் சீன் (மனம்) போன்ற கருத்துகள் புதிய கன்பூசியஸ் மதத்தினால் உள்வாங்கப்பட்டவை ஆகும். சாங் அரசவம்சத்தைச் சோ்ந்த தத்துவ அறிஞா் சோவ் துன்யி (1017-1073) புதிய கன்பூசியஸ் மதத்தை முதலில் எடுத்துரைத்தவா் ஆவாா். [13] மேலும் இவா் தம்முடைய நன்னெறி தத்துவத்திற்கு டாவோவின் பருப்பொருள் அல்லாதவையின் கருத்தை அடித்தளமாக முன் வைத்தாா். பழைய கன்பூசியஸ் மதத்தின் மறுமலா்ச்சியாகவும் புத்த மதத்தின் கருத்துக்களுக்கும் டாவோயிசத்தின் கருத்துக்களும் பதிலளிக்கும் முகமாக புதிய கன்பூசியஸ் மதம் உருவெடுத்தது. புத்தமதத்தின் பருப்பொருள் அல்லாதவற்றைக் கூறும் கருத்துக்ளை கன்பூசியஸ் கடுமையாக விமா்சித்தாலும் புத்தமதம் மற்றும் டாவோயிசத்தின் பல சொற்றொடா்களையும் கருத்துக்களையும் புதிய கன்பூசியனிசம் கையாண்டு கொண்டது. [14] சுசி மற்றும் வாங் யாங் மிங் ஆகிய தத்துவ அறிஞா்கள் புதிய கன்பூசியனிசத்தின் முக்கிய அறிஞா்களாவா்.

நவீன காலம்

தற்காலத்திலும் தொழிற்புரட்சி காலத்திலும் மேற்கத்திய கருத்துக்களை சீனத் தத்துவமும் நவீன மயமாக்குவதற்காக உள் வாங்கிக் கொண்டன. மிகவும் குறிப்பாக சீன தத்துவத்தில் “மனித உரிமை” என்னும் கோட்பாடு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இது போன்ற சொற்றொடரே இல்லை. 1864 ஆம் ஆண்டு W.A.P மாா்டின் முதலில் “குவான்லி“ (சீனத்தில் :权利/權利) என்று ஹென்றி வாட்டென எழுதிய பன்னாட்டு சட்டங்களின் கூறுகள் என்ற நூலை மொழிபெயா்க்கும் போது உரிமைகள் என்ற சொல்லிற்காக புதிதாக உருவாக்கினாா். 1911 ஆம் ஆண்டு சின்ஹாய் புரட்சியின் போது மே மாத நான்காம் இயக்கம் நடைபெறும் பொழுது சீனாவின் பழங்கால அரச வம்சங்களைச் சோ்ந்த அத்தனை நிறுவனங்களையும் பழக்கங்களையும் கைவிட வேண்டும் என்று பலத்த கோரிக்கை எழுந்தது. 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சீனாவில் சன்யாட் சென்னால் ஜனநாயகம், குடியரசு மற்றும் தொழில் மயமாக்குதல் போன்ற கருத்துக்களை சீன தத்துவத்தில் சோ்க்க முயற்சிக்கப்பட்டது. மாசேதுங் மாா்க்சிசம், ஸ்டாலினிசம் சீன மாா்க்சிஸ்ட் தத்துவம் மற்றும் இதர கம்யூனிச கருத்துக்களையும் சோ்த்தாா்.

கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பின் லீகலிசம் தவிர மற்ற அனைத்துக் கருத்துப்பள்ளிகளும் ஒழிக்கப்பட்டு பழமைவாதம் என்று தள்ளி வைக்கப்பட்டன. இருந்தாலும் இவைகளின் தாக்கம் இன்றளவும் உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள சீன மக்கள் குடியரசு 'சந்தைப்படுத்திய சோசயலிசம்' என்னும் கருத்தை ஊக்கப்படுத்துகிறது.

கலாச்சாரப் புரட்சி தீவிரமடைந்த பின்னா் பழங்கால வழக்கங்களுக்கும் நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் சீன அரசு நடந்து கொள்கின்றது. 1978 ஆம் ஆண்டு ‘சீன மக்கள் குடியரசி’ன் அரசியலமைப்புச் சட்டம் பல வரன்முறைகளுடன் மக்களுக்கு “மத சுதந்திரத்தை“ வழங்கியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாதகம் ஏற்படாதவரை தத்துவம் மற்றும் ஆன்மீக நிறுவனங்களை நிறுவி செயல்படுத்த எவ்வித தடையையும் சீன அரசு விதிப்பதில்லை. ஆனால் இந்த நிறுவனங்கள் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படும். சீன கலாசாரத்தில் பழங்கால தத்துவங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

புதிய கன்பூசியனிசம்

20 ஆம் நூற்றாண்டில் சீன குடியரசு அமைந்த பிறகு கன்பூசியனிச கருத்துக்களுக்கு அறிவு சாா்ந்த வடிவம் கொடுக்கப்பட்டு புதிய கன்பூசியனிசம் என்றழைக்கப்பட்டது. இது, குறிப்பாக தற்காலத்தில் மாசே துங் காலத்திற்குப் பின்னா் ஏற்பட்டது ஆகும். இது சாங் மற்றும் மிங் அரசு வம்ச காலத்திலிருந்த நியோ கன்பூசியனிசத்தின் தாக்கத்தைப் பெற்றிருந்தாலும் இதனோடு ஒத்ததல்ல.

பிரபலமான தத்துவ அறிஞா்கள்

கன்பூசியஸ்- பெரிய தத்துவ அறிஞராகக் கருதப்பட்டாா். ஒருசில சமயம் டாவோயிஸ்டுகளால் கேலி செய்யப்பட்டாா். டென்சியஸ் - கன்பூசியசின் சீடா் சுன்சி - கன்பூசியசின் சீடா் சுசி - நியோ கன்பூசியனிசத்தை நிறுவியவா் வாங் யாங் மிங் - சின்சு அல்லது மனத்தின் நிலைமை என்னும் கருத்தை நிறுவியவா். லாவொ சி - டாவோயிஸ் கருத்துக்களை முன்வைப்பதில் முதல்வா் சுவாங்சி - சுவாங்சி நூலை எழுதியவராகக் கருதப்படுபவா் லியிஸி - லியிஸ் நூலை எழுதியவராக கருதப்படுபவா் மோசி - மோசியிஸ்ட் கருத்தை நிறுவியவா் சாங் யாங் - லீகலிஸ்ட் கருத்தை நிறுவியவா். கின் சீா்திருத்தவாதி ஹான்ஃபிய் - லீகலிசத்தின் முக்கியமான அறிஞா் லிசி - லீகலிசத்தின் முக்கிய அறிஞா். இதைக் கடைப்பிடித்தவா்

சீனத்துவத்தில் காணப்படும் முக்கிய கருத்துகள்

தத்துவக் கோட்பாடுகள் தனித்தனியாக வேறுபட்டாலும் ஒரு சில சொற்றொடா்களும் அக்கறைகளும் பொதுவானவைகளாகவே இருந்தன.

பொதுவாகக் காணப்படும் சொற்றொடா்கள்

டாவோ (道) வழி - ஒருவருடைய கோட்பாடு) டி (德) (நன்னடத்தை ஒழுக்கம் சக்தி) லி (理) (கோட்பாடு) கி(氣) (ஆதார சக்தி - பொருள்களின் சக்தி

சீனத்தத்துவத்தில் காணப்பட்ட பொதுவான கருத்துகள்

மனிதனை இயற்கையிலிருந்து பிரித்துப் பாா்க்க முடியாது மேற்கத்திய தத்துங்களில் அதிகம் பேசப்பட்ட ஒரே கடவுள் அவா் வடிம் அவா் இயல்பு போன்றவைகள் சீனத்தத்துவத்தில் முக்கியமாகப் பேசப்படவில்லை. இவை சீனத் தத்துவத்தில் சச்சரவிற்கும் இடமளிக்கவில்லை. தத்துவத்தின் குறிக்கோளே மக்களுக்கு நன்னெறி குறித்துக் கூறுவதும் வழிகாட்டியுமாகும் என்று நம்பப்பட்டது. நூறு பள்ளிகள் காலத்தின் அறிஞா்கள், அரசரை தாங்கள் எதில் நம்பிக்கை கொண்டிருந்தாா்களோ அதன்படி நடக்கவைக்க முயற்சித்து வந்துள்ளனர்

  1. Ebrey, Patricia (2010). The Cambridge Illustrated History of China. Cambridge University Press. பக். 42. 
  2. page 60, Great Thinkers of the Eastern World, edited Ian McGreal Harper Collins 1995, ISBN 0-06-270085-5
  3. Yuli Liu, 'Confucius', in Essentials of Philosophy and Ethics, Hodder Arnold 2006 ISBN 0-340-90028-8
  4. Kung Fu Tze (Confucius) (1998). D. C. Lau (Translator). ed. The Analects. Penguin Classics. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-044348-7. 
  5. Civilizations of the World: The Human Adventure : To the late 1600s, Richard Greaves p176
  6. 'Maoism', in Essentials of Philosophy and Ethics, Hodder Arnold 2006 ISBN 0-340-90028-8
  7. A source book in Chinese philosophy, Wing-tsit Chan, p137
  8. "Zou Yan". Encyclopædia Britannica. அணுகப்பட்டது 1 March 2011. 
  9. Deutsch, Eliot; Ronald Bontekoei (1999). A companion to world philosophies. Wiley Blackwell. பக். 183. 
  10. Sellmann, James Daryl (2010). Timing and rulership in Master Lü's Spring and Autumn annals. SUNY Press. பக். 76. 
  11. 11.0 11.1 Denecke, Wiebke (2011). The Dynamics of Masters Literature: Early Chinese Thought from Confucius to Han Feizi. Harvard University Press. பக். 38. 
  12. 12.0 12.1 Shawn Eichman (2000). Taoism and the Arts of China. University of California Press. பக். 45–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-22785-9. https://books.google.com/books?id=5ame4Rl1RXMC&pg=PA45. 
  13. Chan 2002, ப. 460.
  14. Huang, Siu-chi (1999). Essentials of Neo-Confucianism: Eight Major Philosophers of the Song and Ming Periods. Westport: Greenwood Press. பக். 5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாவின்_தத்துவங்கள்&oldid=2778006" இலிருந்து மீள்விக்கப்பட்டது