வீச்சு (துடுப்பாட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Muralitharan bowling to Adam Gilchrist.jpg|thumb|right|250p..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Muralitharan bowling to Adam Gilchrist.jpg|thumb|right|250px|2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஒன்றில் மட்டையாளர் [[அடம் கில்கிறிஸ்ற்]]க்கு [[முத்தையா முரளிதரன்]] பந்துவீசும் காட்சி]]
 
[[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] '''வீச்சு''' ''(Delivery)'' என்பது ஒரு பந்துவீச்சாளர் [[மட்டையாளர்|மட்டையாளரை]] நோக்கி பந்துவீசும் நிகழ்வைக் குறிக்கிறது. களத்தடுப்பு செய்யும் அணியில் இருந்து ஒருவர் பந்துவீச வருவார். ஆறு வீச்சுகளை உள்ளடக்கியது ஒரு அறுவீச்சு ''(Over)'' ஆகும்.
 
பந்துவீச்சாளர், துடுப்பாடும் மட்டையாளருக்கு நேர் எதிரே உள்ள கள முனையில் இருந்து இடது அல்லது வலது கை கொண்டு பந்து வீசுவார்.
 
==வீச்சு வகைகள்==
பொதுவாக பந்துவீச்சாளர்களை வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்று இருவகைகளாகப் பிரிக்கலாம். வீச்சின் போது பந்து நிலத்தில் பட்டு மட்டையாளரை நோக்கி எழும்பும் தூரம் வீச்சின் நீளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நீளத்தின் வரம்பு குத்துவீச்சில் இருந்து நேர்க்கூர் வீச்சு வரை இருக்கும்.
 
ஒரு வீச்சாளர் பந்து வீசுவதற்கு பல்வேறு முறைககளைக் கையாள்வார். அவை வீச்சின் நுட்பம், பந்து வீச்சாளர் தன் கை மற்றும் விரல்களைப் பயன்படுத்தும் விதம், பந்தின் விளிம்பைப் பயன்படுத்தும் விதம், பந்தைக் கையில் நிலைநிறுத்தும் விதம், குச்சத்தை நோக்கி பந்து வீசும் விதம், பந்தின் வேகம் மற்றும் பந்து வீச்சாளரின் தந்திரமான நோக்கம் போன்றவைகளால் வேறுபடுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வீச்சு_(துடுப்பாட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது