சிறிமா–சாத்திரி ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
இலங்கையைப் [[பிரித்தானியர்]] ஆண்ட காலத்தில், [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டின்]] தொடக்கப் பகுதியில் [[1820]] ஆம் ஆண்டுக்கும் [[1840]] ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில், இலட்சக்கணக்கான இந்தியத் தமிழர் தமிழ் நாட்டிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக இலங்கைக்குக் கூட்டிவரப்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் தொடங்கப்பட்ட [[கோப்பி]], [[தேயிலை]], [[இறப்பர்]]த் தோட்டங்களில் பணி புரிவதற்காக அமர்த்தப்பட்டனர். கடுமையான சூழ்நிலைகளில் வேலை வாங்கப்பட்ட இவர்களில் உழைப்பினால் உருவான பெருந்தோட்டங்கள் இலங்கையின் வெளிநாட்டு வருமானத்தின் பெரும்பகுதியை ஈட்டிக்கொடுத்தன.
 
பிரித்தானியர் இலங்கையை விட்டு வெளியேறிய போது, சிங்களத்தேசிய வாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் [[1948]] ஆம் ஆண்டு [[நவம்பர் 15]] ஆம் தேதி [[இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1948|இலங்கைக் குடியுரிமைச் சட்டம்]] இல. 18 நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு [[தலைமுறை]]யினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒருவர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது. இது மலையகத் தமிழ் மக்களுக்குப் பாதகமாக அமைந்தது. இவர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதன் காரணமாகச் சுமார் 7 [[இலட்சம்]] மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன், [[1949]] ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட [[இலங்கைப் நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48]] இன் மூலம் அவர்களது [[வாக்குரிமை]]யும் பறிக்கப்பட்டது.
 
நாடற்றவர்கள் பிரச்சினை தொடர்பாக 1949 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட [[இந்திய, பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டம்|இந்திய, பாகிஸ்தானியர் குடியுரிமைச் சட்டமும்]], [[1954]] ஆம் ஆண்டில் கையெழுத்தான [[நேரு - கொத்தலாவலை ஒப்பந்தம்|நேரு - கொத்தலாவலை ஒப்பந்தமும்]] இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதிகம் பயன்படவில்லை. இலங்கைக் குடியுரிமைக்குத் தகுதியற்றவர்கள் எல்லோரையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியக் குடியுரிமை கோருபவர்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள இந்தியா சம்மதித்தது. நாடற்றவர்களில் பெரும்பாலானோர் இலங்கையிலேயே வாழ விரும்பியதால் இப் பிரச்சினை தீராமலேயே இருந்தது. இந்தப் பின்னணியிலேயே சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் ஏற்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறிமா–சாத்திரி_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது