"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' ''(Cricket World Cup)'' என்பது 1975 முதல் தற்போது வரை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வரும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியாகும். உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற துவங்கிய பின்னரே [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒரு நாள் போட்டிகள்]] பிரபலமாயிற்று. ஆரம்பத்தில் ஒரு அணிக்கு 60 [[வீச்சலகு|நிறைவுகள்]] வீதம் பந்து வீசி ஆடினர். [[1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1983 உலகக்கிண்ணப் போட்டிக்கு]] பின்னர் இது 50 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற தொடர்களில் [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆஸ்திரேலிய அணி]] 5 முறையும் [[மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]] மற்றும் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியா]] ஆகிய அணிகள் தலா 2 முறையும் [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]], [[இலங்கை துடுப்பாட்ட அணி|இலங்கை]] மற்றும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] ஆகிய அணிகள் தலா 1 முறையும் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.
 
[[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்]] [[இங்கிலாந்து]] மற்றும் [[வேல்சு]] ஆகிய நாடுகளில் நடைபெற்றது. அதில் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து]] மற்றும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]] அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி|இறுதிப்போட்டி]] சமனில் முடிந்தது. எனவே ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றிலேயே முதன்முறையாக [[சிறப்பு வீச்சலகு|சிறப்பு நிறைவு]] ''(Super over)'' முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் சிறப்பு நிறைவும் சமனில் முடிந்ததால் விதிகளின் படி கூடுதலாக அதிக நான்குகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர் [[இந்தியா]]வில் நடைபெறவுள்ளது.
1,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2781741" இருந்து மீள்விக்கப்பட்டது