கே. எஸ். கோபாலகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
தற்போதைய [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[மயிலாடுதுறை]]க்கு அருகிலுள்ள [[மல்லியம்]] என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
 
1938 ஆம் ஆண்டில் வெளிவந்த [[தேசமுன்னேற்றம்]] என்ற திரைப்படத்தில் இவர் நடித்தார்.<ref>{{cite journal | title=இது நிஜமா | journal=குண்டூசி | year=1951 | month=நவம்பர் | pages=பக். 82}}</ref> பின்னர் [[சக்ரதாரி]] (1948), [[பாரிஜாதம்]] (1950) ஆகிய திரைப்படங்களை இயக்கினார். [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற நடிகர்களையும், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நடிகைகளையும் வெற்றிகரமாகவைத்து பல வெற்றிகரமான படங்களை இயக்கியவர். கே. ஆர். விஜயா, பிரமீளா, ஜெயசித்ரா, பி. ஆர். வரலட்சுமி போன்றோரை அறிமுகம் செய்தவரும் இவரே. தாம் தமிழில் தயாரித்த பல படங்களைப் பின்னர் [[இந்தி]]யில் இந்தித் திரைப்பட நடிகர்களைக் கொண்டு வெற்றிகரமாக மறுவாக்கமும் செய்தார்.
 
பின்னாட்களில் [[கமலஹாசன்]] நடித்த பேர் சொல்லும் பிள்ளை என்னும் திரைப்படத்தையும் இயக்கினார். ஆயினும், எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் துவக்கத்திலும் தமிழ்த் திரையுலகின் போக்கை மாற்றிய [[பாரதிராஜா]], [[மகேந்திரன்]], [[பாலுமகேந்திரா]] போன்ற இயக்குனர்களின் வரவால், கே.எஸ்.ஜி. பாணித்திரைப்படங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. படிக்காத பண்ணையார், பேர் சொல்லும் பிள்ளை போன்ற அவர் படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியுற்றன.
"https://ta.wikipedia.org/wiki/கே._எஸ்._கோபாலகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது