"சுந்தரமூர்த்தி நாயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 மாதங்களுக்கு முன்
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2702776 BalajijagadeshBot உடையது. (மின்))
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
===தடுத்தாட்கொள்ளல்===
 
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை [[திருமணம்]] செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு [[ஓலைச் சுவடி|ஓலை]]யைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு [[அடிமை]] என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு [[கோயில்|கோயிலுள்]] நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தமம்முடையதம்முடைய நண்பராக்கிக் கொண்டார். [[சிவத் தலங்கள்]] தோறும் சென்று [[தேவாரம்|தேவார]]ப் [[பதிகம்|பதிகங்கள்]] பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் [[பதிகம்]] மூலம், குண்டலூரில் தான் பெற்ற [[நெல்]]லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.
 
===திருமணங்கள்===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2783032" இருந்து மீள்விக்கப்பட்டது