லொயோலா இஞ்ஞாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
 
{{Infobox saint
ஒரு சமயம் இஞ்ஞாசியார் தேயேகோ லேனசிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இஞ்ஞாசியார் அவரிடம், “சகோதரரே! ஒருவேளை கடவுள் உங்களிடம் உடனடியாக விண்ணகம் செல்லலாம் அல்லது இவ்வுலகில் இருந்து அவரை மகிமைப்படுத்த ஏதாவது செய்யலாம் என்ற வாய்ப்பைக் கொடுத்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு தேயேகோ, “நான் உடனடியாக விண்ணகம் செல்வேன்” என்றார். பின்னர் அவர் இஞ்ஞாசியாரிடம் அதே கேள்வித் திருப்பிக் கேட்டார். அதற்கு இஞ்ஞாசியார், “நான் என் பங்கிற்குக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற இவ்வுலகில் தாங்கிடுவேன். என் ஆன்மாவை ஈடேற்றும் பொறுப்பை கடவுள் பார்த்துக்கொள்வார். அவர் மீது கொண்ட அன்பினால் விண்ணகத்திற்குத் தாமதமாக வருபவரை அவர் கைவிட்டுவிடமாட்டார்” என நம்புகிறேன்” என்றார்.
| image=St Ignatius of Loyola (1491-1556) Founder of the Jesuits.jpg
 
| imagesize=180px
| caption= புனித லொயோலா இஞ்ஞாசி<br /><small>ஓவியர்: [[பீட்டர் பவுல் ரூபென்ஸ்]].</small>
 
| birth_date=1491<br />[[லொயோலா]], [[எசுப்பானியா]]
லயோலா இஞ்ஞாசியார் எப்போதும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதனால்தான் இன்றைக்கு நாம் அவருடைய விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
 
 
வாழ்க்கை வரலாறு
 
 
இஞ்ஞாசியார் ஸ்பெயின் நாட்டில் உள்ள லயோலா என்னும் இடத்தில் 1491 ஆம் ஆண்டு பிறந்தார். இவர்தான் குடும்பத்தின் கடைசிப் பிள்ளை. இவருடைய குடும்பம் அரச குடும்பம். எனவே, செல்வச் செழிப்பில், எல்லா விதமான இன்பங்களையும் அனுபவித்து வாழ்ந்து வந்தார். இவருடைய கனவெல்லாம் மிகச் சிறந்த போர்வீரனாக மாறவேண்டும் என்பதே ஆகும். அதற்காக அவர் கடுமையாகப் பாடுபட்டார்.
 
 
1521 ஆம் ஆண்டில் ஒரு நாள் பிரான்சு நாட்டு இராணுவம் இவர் இருந்த பம்பிலோனா கோட்டையை சுற்றி வளைத்துக்கொண்டது. நீண்ட நேரம் நடைபெற்ற போராட்டத்தில் இவருடைய கால்களில் கடுமையான காயம் ஏற்பட இவர் நிலைகுலைந்து போனார். பின்னர் இவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்துவைக்கப்பட்டார். அப்போது இவர் அங்கே இருந்தவர்களிடம் வாசிப்பதற்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டபோது, அவர்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தையும் புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தையும் இவருக்குக் கொடுத்தார்கள். அதை வாசிக்க வாசிக்க இஞ்ஞாசியார் ஒருவிதமான பரவசநிலையை உணர்ந்தார். அதுமட்டுமல்லாமல் இதுவரை தான் வாழ்ந்த வாழ்க்கை முற்றிலும் வீண் என எண்ணத் தொடங்கி, சாதாரண மனிதர்கள் எல்லாம் புனிதராக மாறியிருக்கும்போது எதற்காக நாம் புனிதராக மாறக்கூடாது என சிந்தித்தார். அதன்படியே தன்னுடைய வாழ்கையை வாழத் தொடங்கினார்.
 
 
இஞ்ஞாசியாரின் இத்தகைய மனமாற்றத்திற்கு பிறகு, அவர் மன்ரேசா குகைக்குச் சென்று, அங்கே பதினோரு மாதங்கள் ஜெபத்திலும் தவத்திலும் தன்னையே முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு ஆன்மீகப் பயற்சிகளை மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட ஆன்மீகப் பயற்சிகள் அனைத்தும் இன்றைக்கும் பலருக்கும் தூண்டுதலாக இருக்கின்றன. இஞ்ஞாசியார் அங்கு ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த தருணம் அவருக்கு மரியன்னை குழந்தை இயேசுவோடு காட்சிதந்தார். அந்த நிகழ்வு அவருடைய வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.
 
 
இஞ்ஞாசியார் தன்னுடைய ஆன்மீகப் பயிற்சிகளை முடித்துக்கொண்ட பிறகு எருசலேம் நகருக்குச் சென்று, புனித பூமியை பார்வையிட்டார். அதிலிருந்து அவர் ஆறுதலையும் புதிய தெம்பையும் பெற்றார். பின்னர் அவர் பாரிஸ் நகருக்குச் சென்று, அங்கே குருத்துவப் பணிக்காக தன்னையே பக்குவப்படுத்திக்கொண்டார். இலத்தின் போன்ற மொழிகளைக் கற்றுக்கொண்டு தன்னை மேலும் மெருகேற்றிகொண்டார். அங்கேதான் அவர் பிரான்சிஸ் சவேரியார், பீட்டர் பேபர் போன்ற ஆறு இளைஞர்களைச் சந்தித்தார். அவர்களைக் கொண்டு ‘இயேசு சபை’ என்னும் புதிய சபை ஒன்றைத் தோற்றுவித்தார். அந்த சபையின் நோக்கம் மறைகல்வி போதிப்பதும், மறைபோதகப் பணியைச் செய்வதும், ஒப்புரவு அருட்சாதனங்களை செய்வதும், நோயாளிகளை, சிறையில் இருப்பவர்களை பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதும் ஆகும். இன்றைக்கு இச்சபை உலகமெங்கும் பரவி பற்பல பணிகளைச் செய்கிறது என்றால் அதற்கான விதை இந்த ஆறுபேர் கொண்ட குழு போட்டதுதான்.
 
 
குருத்துவப் பயிற்சிகளை மேற்கொண்ட இஞ்ஞாசியார் 1538 ஆம் ஆண்டு குருவாக மாறினார். அதன்பிறகு அவர் உரோமை நகருக்குச் சென்று, திருத்தந்தை மூன்றாம் பவுலைச் சந்தித்து, தன்னுடைய சபையைப் பற்றி விளங்கிச் சொன்னார். பின்னர் இஞ்ஞாசியார் அவரிடம் புனித பூமியில் தன்னுடைய சபையார் பணிகளை மேற்கொள்ளப் போவதாகச் சொன்னார். ஆனால் திருத்தந்தை அவர்களோ, அங்கே பணிசெய்ய ஏற்ற சூழல் இல்லாததால், மற்ற இடங்களிலும் உரோமை நகரிலே பணிசெய்யச் சொன்னார். அதன்படி இஞ்ஞாசியார் உரோமை நகரிலே பணிசெய்தார், அவருடைய சபையைச் சேர்ந்த மற்றவர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று மறைபோதக பணிகளை மேற்க்கொண்டார்கள். இஞ்ஞாசியார் ஏற்படுத்திய இயேசு சபை, கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் என்ற மூன்று வார்த்தைப்பாடுகளோடு சேர்த்து, திருத்தந்தைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடத்தல் என்ற புதிய வார்த்தைப்பாட்டினையும் எடுத்துக்கொண்டது.
 
 
திருத்தந்தையின் ஆணையின் பேரின் உரோமை நகரில் பணிசெய்யத் தொடங்கிய இஞ்ஞாசியார் நோயாளிகளைச் சந்திப்பதுமாக, சிறையில் இருந்தோரை பார்க்கச் செல்வதுமாக, மறைக்கல்வி கற்றுத்தருவதுமாக பற்பல பணிகளைச் செய்தார். தான் செய்த பணிகள் அனைத்தையும் இறைவனின் அதிமாக மகிமைக்காகச் செய்த்தார். இப்படி ஓய்வில்லாமல் இறைப்பணி செய்த இஞ்ஞாசியார் 1554 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாள் இந்த மண்ணுலக வாழ்க்கைத் துறந்தார். 1622 ஆம் ஆண்டு இவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.
 
 
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
 
 
தூய லயோலா இஞ்ஞாசியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்
 
 
இறைத்திருவுளத்திற்கு பணிந்து வாழ்தல்
 
 
 
இஞ்ஞாசியார் தன்னுடைய இளமைக் காலத்தில் ஒரு மிகச் சிறந்த போர்வீரானாக மாறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் பம்பிலோனோவில் ஏற்பட்ட சண்டையில் அவருடைய காலில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு, அவர் வாசித்த இயேசுவின் வரலாறும் புந்தர்களின் வரலாறும் அவருடைய வாழ்வை முழுமையாய் மாற்றிப்போட்டுவிடுகின்றது. ஆம், அவர் புனிதர்களுடைய வாழ்க்கை வரலாற்றை வாசிக்க வாசிக்க, தான் இதுவரை வாழ்ந்துவந்த வாழ்க்கை எத்துனை இழிவானது என்பதை உணர்ந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல் இனிமேல் இறைவனுக்காக தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணிக்கவேண்டும் என முடிவு செய்து, அதன்படி வாழத் துணிகிறார்.
 
 
நம்முடைய வாழ்வில் நாம் கடவுளுடைய திருவுளத்திற்குப் பணிந்து வாழ்கிறோமா? அல்லது நம்முடைய விருப்பத்தின்படி நடக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
 
 
உலக பழுதூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஜாக் தெம்ப்சே (Jack Dempsey) என்பவர். அவர் சாம்பியன் பட்டத்தை வென்ற அந்த நாள் இரவில் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் தான் போராடிப்பெற்ற சம்பியன் பட்டம் அவரிடமிருந்து பறிக்கப்படுவதாய் உணர்ந்தார். உடனே தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த ஜான், தான் இதுவரை சம்பாதித்த பேர் புகழ், பட்டம் எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற உண்மையை உணர்ந்தார். அதன்பிறகு இறைப்பணி செய்வதே நிறைவான நிலையான மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்பதை உணர்ந்து, தன்னுடைய வாழ்வு முழுவதையும் இறைப்பணி செய்வதற்காக அர்ப்பணித்தார். அதன்பிறகு அவர் ஒரு சிறந்த நற்செய்திப் பணியாளராய் விளங்கினார்.
 
 
ஜாக் தெம்ப்சேவை போன்று பல நேரங்களில் நாமும் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ நினைக்கிறோம். அதிலே இன்பம் காண நினைக்கிறோம். ஆனால் ஒவ்வொருக்கும் இறைவன் வகுத்து வைத்த திட்டம் வேறொன்றாக இருக்கின்றது. நாம் இறைவனின் திருவுளத்தின்படி நடக்கின்றபோது என்றென்றைக்கும் அவரால் ஆசிர்வதிக்கப்படுவோம் என்பது உறுதி.
 
 
ஆனால் வேடிக்கை என்னவென்றால், நாம் கடவுளின் விருப்பத்தின்படி நடந்தால் துன்பங்களையும் அவமானங்களையும் சிந்திப்போம் என்பதற்காக உலகப் போக்கிலான வாழ்க்கையை அல்லது நம்முடைய மனம்போன வாழ்க்கையை வாழ நினைக்கின்றோம். நாம் ஆண்டவராகிய இயேசுவும் அன்னை மாறியும் அப்படி இல்லை. அவர்கள் எத்தகைய துன்பம் வந்தாலும், இடர்கள் வந்தாலும் இறைத்திருவுளம நிறைவேற்றுவதிலேயே மன உறுதியாய் இருந்தார்கள். நாமும் இறைவனின் திருவுலத்திற்குப் பணிந்து, அதன்படி வாழ முற்படும்போது இறைவனின் அன்புப் பிள்ளைகள் ஆவோம் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
 
 
ஆகவே, தூய லயோலா இஞ்ஞாசியாரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில், நாமும் அவரைப் போன்று இறைத்திருவுளத்திற்குப் பணிந்து நடப்போம், இறைவனின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவை பெறுவோம்.
| birth_date=1491<br />[[லொயோலா]], [[எசுப்பானியா]]
| death_date=ஜூலை 31, 1556<br />[[உரோமை நகரம்]], [[திருத்தந்தை நாடுகள்]]
| feast_day=ஜூலை 31
"https://ta.wikipedia.org/wiki/லொயோலா_இஞ்ஞாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது