எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்க்கைக் குறிப்பு: பராமரிப்பு using AWB
→‎வாழ்க்கைக் குறிப்பு: Actually the govt gazette has only Vanniyakkula Kshatriya name so I changed vanniyar as above said name. Vanniyars are the only Kshatriya in Tamilnadu
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 31:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[வன்னியர்வன்னியக்குல சத்ரியர்]] சாதியில் பிறந்த மாணிக்கவேலு சட்டக் கல்வி கற்றவர். [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியில் இணைந்து செயல்பட்ட அவர் பின்னர், அதிலிருந்து பிரிந்த [[சுராஜ்யக் கட்சி]]யில் இணைந்தார். [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1926|1926]] சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|சென்னை மாகாண சட்டமன்ற]] உறுப்பினரானார். 1937 வரை அப்பதவியில் நீடித்தார். 1935ல் சுராஜ்யக் கட்சி மீண்டும் காங்கிரசுடன் இணைந்து விட்டது. 1951ல் வன்னிய சாதியினரின் நலனுக்காக குரல் கொடுக்க [[காமன்வீல் கட்சி]] என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். இக்கட்சி [[வட ஆற்காடு மாவட்டம்|வட ஆற்காடு]] மற்றும் [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு]] மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்தது. [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952]] சட்டமன்றத் தேர்தலில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டது. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக [[திராவிட நாடு]] கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் காமன்வீல் கட்சியும் ஒன்று (மற்றொன்று [[எஸ். எஸ். ராமசாமி படையாச்சி]]யின் [[தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி]]).
 
மாணிக்கவேலு உட்பட 6 காமன்வீல் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்றனர். ஆரம்பத்தில் [[த. பிரகாசம்]] தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு [[சி. ராஜகோபாலாச்சாரி]] (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று காமன்வீல் கட்சி. அரசுக்கு மாணிக்கவேலு அளித்த ஆதரவுக்கு பிரதிபலனாக அவருக்கு ராஜாஜியின் அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. 1954ல் [[காமராஜர்]] முதல்வரான பின்னர் மாணிக்கவேலுவுக்கு விற்பனை வரித்துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டது. 1954ல் அவர் காமன்வீல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 1962 வரை அமைச்சராகப் பணியாற்றினார். 1962-64ல் இந்தியாவின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1964-70 காலகட்டத்தில் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை]]த் தலைவராகப் பணியாற்றினார். 1996ம் ஆண்டு மரணமடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஏ._மாணிக்கவேலு_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது