இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இந்திய மாநிலங்களின் உருவாக்கம்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
→‎இந்திய மாநிலங்களின் உருவாக்கம்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 334:
முன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவுசெய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: [[அசாம்]], [[மேற்கு வங்காளம்]], [[பீகார் (இந்தியா)|பீகார்]], [[பம்பாய் மாநிலம்|பம்பாய்]], [[மத்தியப் பிரதேசம்]] (முன்னர் [[மத்திய மாகாணங்களும், பெராரும்]]), [[மதராஸ் மாநிலம்|மதராஸ்]], [[ஒரிசா]], [[பஞ்சாப், இந்தியா|பஞ்சாப்]], [[உத்தரப் பிரதேசம்]] (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்).
 
சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் [[பாசல் அலி]] என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட [[மாநில மறுசீரமைப்பு ஆணையம்]] அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை சீரமைக்க அறிவுறுத்தியது. இந்தக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் 1956 ஆம் ஆண்டில் [[மாநில மறுசீரமைப்புச் சட்டம்|மாநில சீரமைப்புச் சட்டம்]] நிறைவேற்றப் பட்டது. இந்தியா 14 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதே அடிப்படையில் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் [[சத்தீஸ்கர்]], [[உத்திராகண்டம்உத்தராகண்டம்]] மற்றும் [[ஜார்கண்ட்]] என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தில்]] இருந்து உருவாக்கப்பட்ட [[தெலுங்கானா]] மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும்.2019ஆவது ஆண்டு [[ஜம்மு காஷ்மீர் |ஜம்மு காஷ்மீர்]] மாநிலம் [[லடாக்]] மற்றும் [[ஜம்மு காஷ்மீர்]] என இரு ஒற்றிய பகுதிகளாக மாற்றபட்டன. இதன்மூலம் தற்போது மாநிலங்களின் எண்ணிக்கை 28ஆக உள்ளது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==