அஞ்சாதே (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 18:
'''அஞ்சாதே''' 2008 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இது இயக்குனர் [[மிஸ்கின்|மிஸ்கினின்]] இரண்டாவது படைப்பாகும்; பெப்ரவரி 15, 2008அன்று வெளியானது.
 
இத்திரைப்படத்தில் நரேன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நரேனின் நண்பனாக இருந்து கால ஓட்டத்தில் எதிரியாக மாறும் கதாப்பாத்திரத்தில் அஜ்மல் நடித்திருக்கிறார். நடிகர் [[பிரசன்னா]] அதிகம் பேசாத வில்லனாகவும் [[பாண்டியராஜன்]] பிரசன்னாவுக்கு துணை நிற்கும் லோகு என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலக்ஷ்மி, இத்திரைப்படத்தில் அஜ்மலின் தங்கையாக நரேனை காதலிக்கும் பெண்ணாக நடித்துள்ளார். இவர்களைத்தவிர [லிவிங்க்ஸ்டன்][லிவிங்ஸ்டன் (நடிகர்)]] அஜ்மலின் தந்தையாகவும்,[ [எம். எஸ். பாஸ்கர் ]] நரேனின் தந்தையாகவும், இயக்குனர், நடிகர் [[பொன்வண்ணன்]] நரேனின் காவல் துறை உயர் அதிகாரியாகவும் நடித்திருக்கின்றார்கள். [[சுந்தர்.சி பாபு ]]இத்திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.
 
அஞ்சாதே திரைப்படம் மூலம் [[விஜய் விருதுகள்|விஜய் டிவி விருதுகளில்]] "சிறந்த இயக்குனர் " விருதுக்காக இயக்குனர் மிஸ்கின் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சாதே_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது