தமிழ் மலர் (மலேசியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மலேசிய தமிழ் நாளிதழ்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Newspaper | name = '''தமிழ் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:51, 25 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

தமிழ் மலர் (மலேசியா); மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ். மலேசியத் தமிழர்களுக்காக மலேசியச் செய்திகள்; தமிழ் நாட்டுச் செய்திகள்; உலகச் செய்திகள்; விளையாட்டுச் செய்திகள்; சிறப்புக் கட்டுரைகள் போன்றவற்றை வெளியிடுகிறது. இதன் உரிமையாளர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். தியாகராஜன்.[1]

தமிழ் மலர்
வகைநாளிதழ்
வடிவம்அகன்ற தாள்
உரிமையாளர்(கள்)ஓம்ஸ். தியாகராஜன்
வெளியீட்டாளர்சிட்டி டீம் மீடியா
CITY TEAM MEDIA SDN BHD
ஆசிரியர்டத்தோ எம். ராஜன்
நவநீதன்
சரஸ்வதி கந்தசாமி
நிறுவியது14 ஏப்ரல் 2013
அரசியல் சார்புமலேசிய, உலக அரசியல் செய்திகள்
மொழிதமிழ்
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
விற்பனை22,000/நாளொன்றுக்கு, 35,000/வாராந்திரம்
ISSN(780079-H)
இணையத்தளம்https://tamilmalar.com.my/

இதன் தலைமையகம் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ளது. இதன் நிர்வாக இயக்குநராக பெரியசாமி முனுசாமி பொறுப்பு வகிக்கிறார். [2]

உள்ளடக்கம்

தமிழ் மலர் நாளிதழ் மலேசிய இந்தியச் சமூகத்தைப் பற்றிய செய்திகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றது. தவிர உள்ளூர்ச் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை பிரசுரிக்கப் படுகின்றன.

மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் tஹொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இந்த நாளிதழ் ’உண்மையின் உரைகல்’ எனும் அடைமொழியுடன் பவனி வருகின்றது.

உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் கொள்கையில் உள்ளூர் எழுத்தாளர்களின் கட்டுரைகள்கவிதைகள்; கதைகள் போன்றவற்றை ஞாயிறு வெளியிட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் சிறப்புக் கட்டுரை எனும் பக்கத்தில் வரலாற்றுச் சமூக கட்டுரைகளையும் பிரசுரித்து வருகிறது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மலர்_(மலேசியா)&oldid=2793676" இலிருந்து மீள்விக்கப்பட்டது