அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி -{{தலைப்பை மாற்றுக}}
வரிசை 55:
 
==ஈழப்போர்==
சுந்தர சோழருக்கும், வீரபாண்டியருக்கும் நடந்த போர்களில் ஈழத்திலிருந்து மகிந்தன் எனும் அரசினின்அரசனின் படைகள் வீரபாண்டியருக்கு உதவிகள் செய்தன. ஆதித்த கரிகாலன் வீரபாண்டியரை வெற்றி கொண்டபின்பு, சோழ சைன்யம் ஒன்றை இலங்கைக்கு அனுப்பிச் சிங்கள மன்னர்களுக்குப் புத்தி கற்பிக்க எண்ணினார். கொடும்பாளூர்ச் சிற்றரசர் குடும்பத்தைச் சேர்ந்த பராந்தகன் சிறிய வேளான் என்னும் தளபதியின் தலைமையில் ஒரு பெரும் படையைச் சிங்களத்துக்கு அனுப்பினார். மகிந்தரராஜனுடைய தளபதி ஸேனா என்பவனின் தலைமையில் சிங்களப்படை எதிர்பாராத விதத்தில் வந்து சோழப் படையுடன் நடந்த தாக்குதலில் சோழ சேனாதிபதியான பராந்தகன் சிறிய வேளான் தன் வீரப்புகழை நிலைநிறுத்திவிட்டு இன்னுயிரைத் துறந்தான்!
 
அதன்பிறகு ஈழப்போருக்கு அருள்மொழிவர்மனின் தலைமையில் பெரும்படை சோழதேசத்திலிருந்து செல்வதென முடிவெடுக்கப்பட்டது. பத்தொன்பதே வயதான அருள்மொழிவர்மனுக்கு பெரும் விடையளிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் குந்தவை தேவி தன்னுடைய தோழிகளுடன் கலந்து கொண்டார். அதிலொருத்தி ஈழத்தில் இறந்துபோன சிறிய வேளார் மகள் [[வானதி (கதைமாந்தர்) |வானதி]]. அவள் இளவரசன் அருகே வந்ததும் மூர்ச்சையாகி கீழே விழுந்தாள். ஈழத்திற்கு செல்லும் முன் வானதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்டார் அருள்மொழிவர்மன். வானதிக்கு அது பெரும் வியப்பினையும், தான் மூர்ச்சையுற்று விழுந்தது வெட்கத்தினையும் தந்தது.
"https://ta.wikipedia.org/wiki/அருள்மொழிவர்மன்_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது