உடலை துளையிடுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Minor Changes and Spelling Corrections
வரிசை 1:
{{தானியங்கித் தமிழாக்கம்}}
உடலை துளையிடுதல் என்பது இரு பாலரும் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை பழக்கம் ஆகும். இது பல நூற்றாண்டுகளாக பல நாடுகளில் இருந்து வருகிறது. உடல் துளையிடுதல் சில நேரங்களில் ஆபத்தானதாக இருந்தாலும் மக்களிடையே இது உள்ள பழக்கமாக இருந்து வருகிறது. இம்முறையில் உடல் பாகத்தில் தளையிட்டுதுளையிட்டு அணிகலன்கள் அணிவது என ஒரு பண்பாடாக இருக்கிறது.[[படிமம்:Elaine Davidson Front.jpg|thumb|எலேயன் டேவிட்சன், 2009 ஆம் ஆண்டு உலகில் அதிக உடல் துளையிட்டுக்கொண்ட பெண்]]
 
==தமிழரும் உடல் துளையிடுதலும்==
வரிசை 8:
===காது குத்துதல்===
[[படிமம்:Ear with earring.jpg|thumb|right|90px|தோடு]]
தமிழர் மரபில் குழந்தை பிறந்த பதினோராம் மாதம் அல்லது ஒன்று, மூன்று, ஐந்து என ஒற்றைப்படை வயதில் '''காது குத்துதல்''' என்ற சடங்கை இருபாலருக்கும் செய்விக்கின்றனர்.காதணி விழா என்பது இந்து தமிழர்களிடையே காணப்படும் ஒரு சடங்காகும். இந்த சடங்கில் குழந்தைகளுக்கு காதில் துளையிட்டு தங்கக் காதணி அணிவிக்கப்படுகிறது. இச்சடங்கின் முறைகள் சாதி சமயத்திற்கு தக்கவாறு மாறுபடுகிறது.நல்ல நாள் மற்றும் நேரத்தினை கணக்கிட்டு காதணி விழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். தமிழ்ச் சாதிகளில் பெரும்பாலும் குலதெய்வ கோயில்களில் முடி எடுத்தல் மற்றும் காதுகுத்தல் நடைபெறுகிறது. சிலர் வீடுகளிலும், மண்டபங்களிலும் விழா நிகழ்த்துகின்றனர். இடம் மற்றும் காலம் பற்றிய முடிவு எடுக்கப்பட்டதும்,. முக்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கு வாய்மொழியாகவோ, பத்திரிக்கை அடித்து கொடுத்தோ செய்தியினை தெரிவிக்கின்றனர்.தோடு (earring) காதில் அணியப்படும் ஓர் ஆபரணமாகும். பெண்களால் அதிகமாகவும் ஆண்களால் ஓரளவும் அணியப்படுகிறது. ஆண்கள் அணியும் தோடு கடுக்கன் எனப்படுகிறது. காதுச் சோணையில் துவாரமிட்டே தோடு அணியப்படுகிறது. உலோகம், நெகிழி, கண்ணாடி போன்ற பலதரப்பட்ட பொருட்களால் தோடு செய்யப்படுகிறது. தமிழர் உட்பட்ட பல இனத்தவரால் பெண் குழந்தைகளுக்கு மிகச் சிறு வயதிலேயே காது குத்தப்பட்டுத் தோடு அணிவிக்கப்படுகிறது. இதனை ஒரு சடங்காகவும் கொண்டாடுவதுண்டு. திருமணத்தின்போது ஆணுக்குக் கடுக்கன் பூட்டும் வழக்கம் சில பிரதேசத் தமிழர் திருமணங்களில் வழக்கமாக இருந்தது. இப்போது அவ் வழக்கம் அருகிவிட்டது.
 
===மூக்கு குத்துதல்===
வரிசை 16:
===அலகு குத்துதல்===
[[படிமம்:Cheek Piercing.jpg||thumb|அலகு குத்துதல்]]
[[அலகு குத்துதல்]] என்பது தமிழ்க் கோயிற் திருவிழாக்களில் பாற் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து தீபாரதனை காட்டிய பின் நடைபெறும். பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை ஒரு கன்னத்தில் குத்தி, மற்றக் கன்னத்தின் ஊடாக எடுப்பார்கள்; அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கிக் குத்துவதுமுண்டு.
 
== மேலைநாடுகளில் உடல் துளையிடுதல் ==
"https://ta.wikipedia.org/wiki/உடலை_துளையிடுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது