சிங்கீதம் சீனிவாசராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox person
| name = சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
| image = File:Singeetam srinivasa rao.jpg
| alt =
| caption =
வரிசை 18:
 
சீனிவாசராவ் தெலுங்கு நயோகி பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து இயற்பியல் பட்டம் பெற்றார். திரையுலகில் முதலில் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் ஹரிந்திரநாத் சட்டோ பாத்யாய், கே.வி. ரெட்டி மற்றும் பிங்கலி நாகந்திரராவ் ஆகியோருடன் இணை இயக்குனராகப் பணியாற்றினார். மாயா பஜார் (1957), பெல்லி நாட்டி பிரமானலு (1958), ஜகதேக வீரணி கதா (1961), ஸ்ரீ கிருஷ்ணர்ஜுனா யுத்தம் (1963), சத்யா ஹரிச்சந்திரா (1965) முதலியன. 1972 ஆம் ஆண்டு முதல் இயக்குனராக கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அறுபது திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
 
1988 ஆம் ஆண்டில் அவர் முதல் இந்திய மௌன திரைப்படமான புஸ்பக் என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தேசிய பொழுதுபோக்கு விருது பெற்றது. கர்நாடக அரசு திரைப்பட சிறந்த இயக்குநர் விருது இந்த திரைப்படத்திற்காக பெற்றார்.
 
== கன்னடத் திரைப்படப் பங்களிப்புகள் ==
இவரது இயக்கத்தில் கன்னட சூப்பர் ஹிட் படமான ஹாலு ஜெனு (1982), சலிசுவா மோடகளு (1982), எராது நட்சத்திரகளு (1983), ஷ்ராவன பந்து (1984), ஜவாலாமுகி (1985) பாக்கியலட்சுமி பரம (1985 )ஆனந்த் (1986), தேவத மனசுயா (1988), சிரஞ்சீவி சுதாகர (1988), ஷீரா சாகரா (1992), துவி துவி துவி (1999) மற்றும் மேக்-அப் (2002) ஆகிய படங்களை இயக்கினார் .
 
சம்யுக்தா (1988) படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார், பாடலுக்கு மட்டும் இசை அமைத்துள்ளார் படத்தில் பிண்ணனிஇசை [[சங்கர் கணேஷ்]] அமைத்தார்.
 
== தெலுங்குத் திரைப்படப் பங்களிப்புகள் ==
1984 ஆம் ஆண்டு தெலுங்கு நடன வாழ்க்கைத் திரைப்படமான மயூரி தேசிய திரைப்பட விருது பெற்றது. 1988 ஆம் ஆண்டில் அவர் முதல் இந்திய மௌன திரைப்படமான புஸ்பக் என்ற திரைப்படத்தை தயாரித்தார். இது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தேசிய பொழுதுபோக்கு விருது பெற்றது. தெலுங்கில் வெற்றி பெற்ற படமான அமெரிக்கா அம்மாயியும், அமெரிக்கா அப்பாயியும் வெற்றி பெற்றது. 1990 களின் நகைச்சுவைத் திரைப்படமான மைக்கேல் மதன காமராஜன் வசூலில் சாதனை படைத்தது .
 
தெலுங்கில் 26 மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார், சில படங்களுக்கு திரைக்கதையும் எழுதி தந்துள்ளார்.
 
== தமிழ்த் திரைப்படப் பங்களிப்புகள் ==
தமிழில் கமலுடன் இணைந்து, தேசிய விருது பெற்ற இயக்குநரான சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய ''[[ராஜ பார்வை]]'', ''[[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]]'', ''[[மைக்கேல் மதன காமராஜன்]]'', ''[[பேசும் படம்]]'' என இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வசூல் மற்றும் பாராட்டுக்களைக் குவித்தவை. சிங்கீதம் சீனிவாச ராவ் 2008 இல் 'கடோத்கஜ்" என்ற உயிரோவியத் திரைப்படத்தை இயக்கினார். இது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவர் இயக்கிய ''[[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]]'' முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து 1989ல் உருவாக்கிய பல புதிய சாதனைகள் படைத்தது.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Singeetam-reveals-secret-behind-Kamalrsquos-dwarf-role/article15276178.ece Singeetam reveals secret behind Kamal’s dwarf role]</ref> 1990 களின் நகைச்சுவைத் திரைப்படமான மைக்கேல் மதன காமராஜன் வசூலில் சாதனை படைத்தது. 2005 ஆண்டில் [[மும்பை எக்ஸ்பிரஸ் (திரைப்படம்)|மும்பை எக்ஸ்பிரஸ்]] என்ற பெயரில் தமிழ் மற்றும் [[இந்தி]] என இரு மொழியிலும் படமாக்கினார்.
;தமிழ் திரைப்படங்கள்
* [[திக்கற்ற பார்வதி]] (1974)
* [[இரு நிலவுகள்]] (1979) (டப்பிங்)
* [[ராஜ பார்வை (திரைப்படம்)|ராஜ பார்வை]] (1981)
* [[பேசும் படம் (திரைப்படம்)|பேசும் படம்]] (1988)
* [[அபூர்வ சகோதரர்கள் (1989 திரைப்படம்)|அபூர்வ சகோதரர்கள்]] (1989)
* [[மைக்கேல் மதன காமராஜன்]] (1990)
* [[மகளிர் மட்டும்]] (1994)
* [[சின்ன வாத்தியார்]] (1995)
* [[காதலா! காதலா!]] (1998)
* [[லிட்டில் ஜான்]] (2001)
* [[மும்பை எக்ஸ்பிரஸ் (திரைப்படம்)|மும்பை எக்ஸ்பிரஸ்]] (2005)
== பிற மொழி திரைப்படப் பங்களிப்புகள் ==
மலையாளத்தில் 1977 ஆண்டில் ''நிரபரயும் நிலவிலக்கும்'' என்ற திரைபடத்தை இயக்கினார்.
 
[[இந்தி]] மொழியிலும் நான்கு மேற்பட்ட திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிங்கீதம்_சீனிவாசராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது