நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 175:
=== உடல்நலமும், சுற்றுப்புறத் தூய்மைக் கேடும் ===
[[படிமம்:Field Trip- water sampling.jpg|thumb|சுற்றுப்புற சூழல் மாணவர் நீர் மாதிரி சோதித்தல்]]
[[மனிதன்|மனித]]ர்கள் உட்கொள்ளத் தகுந்த நீர் [[குடிநீர்]] அல்லது [[அருந்தத்தக்க நீர்|அருந்தத்தக்க]] நீர் என்றழைக்கப்படுகிறது. அருந்த்தத்தகாத நீர் வடிகட்டுதல் அல்லது காய்ச்சிவடித்தல்(நீர் ஆவியாகும் வரைச் சூடுபடுத்தியப்பின் வெளியாகும் நீராவியை மாசற சிறைப்படுத்தி குளிர்வித்துப் பெறுதல்)மூலமாகவும், வேதியியல் வினைகளுக்குட்படுத்துதல் அல்லது ஏனைய முறைகளாலும் (வெப்பத்திற்குள்ளாக்கிக் கிருமிகளைக் கொல்வது போன்றவை) அருந்தத்தக்க நீராக மாற்றப்படுகிறது. குறைந்த தர மாறுபாட்டைக் கொண்ட நீர் பாதுகாப்பான நீர் என்றழைக்கப்படுகிறது (நீர் சுத்திகரிப்பு நடைமுறைகளுக்கருகில் இல்லாத மனிதர்களுக்கு சிறப்பாக வழங்கப்படும் நீரான இது, கெடுதலை விட அதிகமாக நன்மையே விளைவிக்கிறது). அருந்தத் தகாததாயினும், நீந்தவும், நீராடவும் பயன்படுகிறதான மனிதருக்கு கெடுதல் விளைவிக்காத நீர் அருந்தத்தக்க நீர் அல்லது குடிநீர் எனப்படாமல் பாதுகாப்பான நீர் என்றோ "நீராடப் பாதுகாப்பான நீர்", என்றோ அழைக்கப்படுகிறது. நீரை நீராடுதற்கும், அருந்துவதற்கும் பாதுகாப்பானதாக மாற்ற உதவும் குளோரின் ஒரு தோல் மற்றும் படர்சவ்வு படல உறுத்தியாகும். அதன் உபயோகம் மிகுந்த தொழில்நுட்பம் வாய்ந்ததாகவும் அரசு நெறிமுறைகளால் கண்காணிக்கப்படுவதாகவும் இருக்கிறது.(குடிநீரில் 1 பார்ட் பெர் மில்லியன்(ppm) என்ற அளவிலும் நீராடுதற்குரியநீராடுவதற்குரிய நீரில்,மாசுகளோடூடாத 1–2 ppm குளோரின் என்ற அளவிலும் பொதுவாக பிரயோகிக்கப்படுகிறது).
 
இந்த இயற்கைவளம் சில இடங்களில் கிடைப்பதற்கரியதாய் இருப்பதால், இதன் இருப்பு சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.தற்பொழுது உலகம் முழுவதும் 1 பில்லியன் மக்கள் வாடிக்கையாக ஆரோக்கியமற்ற நீரை உட்கொள்கின்றனர்.பாதுகாப்பான குடிநீரும் [[சுகாதாரம்|சுகாதார]]மும் கிடைக்காத உலக மக்கள் தொகையை 2015 க்குள் பாதியாக்க வேண்டும் என்ற [[29 ஆவது G8 உச்சி மாநாடு|2008 ஆம் ஆண்டைய G8 ஈவியன் உச்சிமாநாட்டில்]] எடுக்கப்பட்ட உறுதிமொழியை பல நாடுகள் ஏற்றுக்கொண்டன.<ref>[http://www.g8.fr/evian/english/navigation/2003_g8_summit/summit_documents/water_-_a_g8_action_plan.html G8 "ஆக்ஷன் ப்ளான்" டிசைடட் அபான் அட் தி 2003 இவியான் சம்மிட் ]</ref> இந்த கடினமான சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றாலும் கூட பின்னும் நிர்ணயிக்கப்பட்ட பாதி பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காதவர்களாகவும் ஒரு பில்லியன் பேருக்கு மேலான மக்கள் போதுமான சுகாதார வசதியற்றவர்களாயும் இருக்கும் நிலையே உள்ளது. மோசமான நீரின் தரம் மற்றும் சுகாதாரமின்மை பயங்கரமானது. மாசுபட்ட குடிநீரால் வருடத்திற்கு 5 மில்லியன் இறப்புகள் நேரிடுகின்றன.பாதுகாப்பான நீர் வருடத்திற்கு 1.4 மில்லியன் [[வயிற்றுப்போக்கு|வயிற்றுப்போக்]]கால் ஏற்படும் குழந்தை மரணங்களைத் தடுக்க வல்லதென [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார நிறுவனம்]] கணித்துள்ளது.<ref>[http://www.who.int/features/qa/70/en/ வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன். ][http://www.who.int/features/qa/70/en/ சேஃப் வாட்டர் அண்ட் குளோபல் ஹெல்த்.]</ref> இருப்பினும் நீரானது முடிவுறும் ஆதாரமல்ல.குளிர்ந்து சுருங்குதலால் ஏற்படும் நீர்க் கோர்வை களின் மூலம் அது மறுசுழற்சிக்குட்பட்டு ,மனிதர்கள் உட்கொள்வதை விடப் பன்மடங்கு அதிகமான அருந்தத்தக்க நீராக மாற்றப்படுகிறது. எனவே பூமியினடியில் காணப்படும் சிறிதளவு நீர் மட்டுமே புதுப்பிக்க முடியாத ஆதாரமாக இருக்கிறது (நிலத்தடி நீர் கொள் படுகைகளிலிருந்து நமக்கென எடுக்கப்படும் [[நீர் விநியோகம்|குடிநீர் விநியோகத்தில்]] 1 சதவீதம் நிறைவு செய்யப்பட 1 முதல் 10 வருடங்கள் ஆகிறது).புவி நீரின் எதார்த்த அளவு அதிகமாய் தென்பட்டாலும், அதற்கு மாறாக அருந்ததக்க மற்றும் பாசன நீரின் விநியோகம் அரிதானதாகவே இருக்கிறது. நீர் வளமற்ற நாடுகள் நீரை இறக்குமதி செய்வதற்கு பதிலாக தயாரிப்பு முழுமை பெற்ற பொருட்களை இறக்குமதி செய்கின்றன.(இதனால் மனிதர்கள் உட்கொள்வதற்கு போதிய அளவு தண்ணீர் மிஞ்சுகிறது)ஏனெனில் பொருட்களின் உற்பத்திக்கு அப்பொருட்களின் எடையை விட 10 முதல் 100 மடங்கு அதிக எடையுள்ள நீர் தேவைப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது