சுப்பிரமணிய பாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 36:
| signature = Subramanya Bharathi Signature.jpg
}}
'''சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி''' (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)<ref name="dinakaran">{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=83162 | title=93 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் மாற்றம்: பாரதியார் நினைவு தினம் இனி செப்.12ல் அனுசரிப்பு | publisher=தினகரன் | date=13 மார்ச் 2014 | accessdate=11 செப்டம்பர் 2015|quote=1921ம் செப்டம்பர் 12ம் தேதி அதிகாலை 1.30மணிக்குக் காலமானார்.}}</ref>, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் '''பாரதியார்''' என்றும் '''மகாகவி''' என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.<ref>{{cite web |url=http://tamilnadu.com/personalities/mahakavi-bharathiyar.html |title=Mahakavi Bharathiyar – Tamilnadu|publisher=Tamilnadu.com|date=13 February 2013}}</ref>. [[தமிழ்]], [[தமிழர்]] நலன், [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை]], பெண் விடுதலை, [[சாதி]] மறுப்பு, பல்வேறு [[சமயம்|சமயங்கள்]] குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். [[எட்டப்ப நாயக்கர்]] மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, ''கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி'' என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.<ref name="Hindu02082015">{{cite web | url=http://m.thehindu.com/news/cities/chennai/bharathi-the-first-poet-whose-works-were-nationalised/article7490803.ece | title=Bharathi, the first poet whose works were nationalised | publisher=[[தி இந்து]] | date=2 ஆகத்து 2015 | accessdate=23 ஆகத்து 2015}}</ref>
 
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். [[பால கங்காதர திலகர்]], [[உ. வே. சாமிநாதையர்]], [[வ. உ. சிதம்பரம் பிள்ளை]], மகான் [[அரவிந்தர்]] முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் [[விவேகானந்தர்|விவேகானந்தரின்]] மாணவியான சகோதரி [[நிவேதிதா|நிவேதிதையை]] தமது குருவாகக் கருதினார்.<ref>ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்-மார்ச் 2014; கட்டுரை : சகோதரி நிவேதிதா பாரதியாரின் குரு</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
'''சின்னசாமி''' ஐயர் '''இலக்குமி''' அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள (அன்றைய [[திருநெல்வேலி மாவட்டம்]]) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். <ref>http://www.tamilvu.org/courses/degree/c011/c0111/html/c0111111.htm 1.1 தோற்றமும் பிள்ளைப் பருவமும் தமிழாய்வு தளம்</ref>. 1887ஆம்1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
 
தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். [[1897]] ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். [[1898]] ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து [[காசி]]க்குச் சென்றார். 1898 முதல் [[1902]] வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், [[1904]] ஆம் ஆண்டு [[மதுரை]]யில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் [[சேதுபதி மேல்நிலைப் பள்ளி]]யில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
 
பாரதி, [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[இந்தி]], [[சமற்கிருதம்சமசுகிருதம்]], [[வங்காள மொழி]] ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.
 
== இலக்கியப் பணி ==
வரிசை 66:
 
=== பாஞ்சாலி சபதம் ===
 
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் [[பாஞ்சாலி சபதம்]]. அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
வரி 85 ⟶ 84:
 
== புதுக்கவிதைப் புலவன் ==
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். சிறு பிள்ளைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் உதவும் ஒரு அறிவு சார்ந்த புதுக்கவிதை இவர் தொகுப்பில் இருக்கும். அதற்கு ஒரு மிக சிறந்த உதாரணம் தான் பாப்ாபாப்பா பாட்டு என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை.
 
== பெண்ணுரிமைப் போராளி ==
வரி 99 ⟶ 98:
 
== மறைவு ==
1921 ஆம் ஆண்டு சூலை மாதம் [[திருவல்லிக்கேணி]], [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்|பார்த்தசாரதி கோவில்]] யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921இல்1921 இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார்.<ref name="dinakaran" /><ref>பாரதியார் கவிதைகள்- பூம்புகார் பிரசுரம்</ref> அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணிய_பாரதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது