ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 35:
<ref name="Periyar">{{cite web |url= http://www.periyar.org/html/ap_bios_eng1.asp |title=பெரியாரை பற்றி: வாழ்க்கை வரலாறு 1879 to 1909|accessdate=2008-09-06 |publisher= திராவிடர் கழகம் }}</ref>
 
[[1929]] இல் பெரியார் ஈ.வெ.இராமசாமி [[சுயமரியாதை]]யை வலியுறுத்தும் விதமாக, [[செங்கல்பட்டு]] சுயமரியாதை மாநாட்டில்,<ref name="Saraswathi-1.155">சரசுவதி. சுயமரியாதையை நோக்கி, பக்கம். 54.</ref> தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் [[சாதி]]ப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். பெரியார் ஈ.வெ.இராமசாமி மூன்று திராவிட மொழிகளான [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]] ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி [[தெலுங்கு]] ஆகும்.<ref>[http://books.google.com/books?id=WWEk1p_b5YUC&pg=PA150&dq கூகுல் புத்தகம்]</ref><ref>[http://books.google.com/books?id=7ENOnADOlncC&pg=PA92&dq கூகுல் புத்தகம்]</ref><ref name="Periyar-3">{{cite web |url= http://www.periyar.org/html/ap_sayings_eng.asp |title= பெரியாரைப் பற்றி:புரட்சிகரமான கருத்துக்கள்|accessdate=2008-11-30 |publisher= திராவிடர் கழகம்}}</ref> பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன் தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக் (உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் பெரியார் ஈ.வெ.இராமசாமி பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் அறிவுரைகளை மிக ஆர்வமுடன் கேட்டு அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. இராமசாமி வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களைச் சுரண்டுவதற்காகப் போற்றப்பட்ட போர்வையாகப் போர்த்தப்பட்டுள்ளதைக் களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும், இம்மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார்.<ref name="Veeramani2-1">வீரமணி, கே. (1992) ''பெண்ணுரிமைக் குறித்து பெரியார்''. எமரால்டு பதிப்பகம்: சென்னை, அறிமுகப்படுத்தப்பட்டது - xi.</ref>
 
பெரியார் ஈ.வெ.இராமசாமியின் 19 வது வயதில் அவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்களில் பெண் மகவை ஈன்றெடுத்தார். அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.<ref name="Gopalakrishnan">கோபாலகிருஷ்ணன், எம்.டி. (1991) ''பெரியார்: தமிழர் புரட்சியின் தந்தை'', சென்னை. எமரால்டு பதிப்பகம், பக்கம். 3.</ref>
 
=== காசிப் பயணம் ===
[[1904]] இல் பெரியார் ஈ.வெ.இராமசாமி [[இந்து சமயம்|இந்துக்களின்]] புனிதத் தலமாகக் கருதப்படும் [[காசி]]க்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை<ref name=Diehl-1 /><ref name="Periyar" /> தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், [[கங்கை]] ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள்<ref name="Periyar" /> போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார்.<ref name=Diehl-1 />
 
இதனிடையே [[காசி]]யில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தவமுற்றவரானார். இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பிராமணர் போல் [[பூணூல்]] அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறி உள்நுழைய முயன்றார். ஆனால் அவர் மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர் யாரும் இந்து சாத்திரத்தின்படி இவ்வளவு பெரிய [[மீசை]] வைத்திருப்பதில்லை என்று [[கோயில்]] காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார்.<ref name="Periyar" />
வரிசை 48:
== அரசியல் வாழ்வு ==
=== காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (1919–1925) ===
பெரியார் ஈ.வெ.இராமசாமி [[1919]] ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவியான [[ஈரோடு]] நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். [[மகாத்மா காந்தி|காந்தியின்]] கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். [[தீண்டாமை]]யை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். [[1921]] இல் [[ஈரோடு]] கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக பெரியார் ஈ.வெ.இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையாரும் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய [[ஆங்கிலேயர்|ஆங்கில அரசு]] நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை]] மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார்.<ref name=BarathidasanUniversity>{{cite web |url= http://www.evrperiyar-bdu.org/biography.htm |title= பெரியார் ஈ.வெ.ராமாசாமியின் வாழ்க்கை வரலாறு (1879–1973) |accessmonthday= செப்டம்பர் 6 |accessyear= 2008 |year= 2006 |publisher= பாரதிதாசன் பல்கலைக்கழகம்}}</ref>
 
[[1922]] இல் பெரியார் ஈ.வெ.இராமசாமி [[சென்னை]] இராசதானியின் (மதராஸ் இராஜதானி) காங்கிரஸ் கட்சித் தலைவராகத் (தற்பொழுது -தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றது. அதனால் [[1925]] இல் [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] கட்சியிலிருந்து விலகினார்.<ref name="Kandasamy">{{citebook|title=வெண்தாடி வேந்தர் பெரியாரைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவரின் தீண்டாமை ஒழிப்பு பார்வை|author= கந்தசாமி, டபுள்யு.பி. வசந்தா |coauthors= புளோரின்டின் சமாரன்டேச்; கே. கந்தசாமி |year= 2005 |publisher = எக்சிஸ்: போனிக்ஸ் |page = 106 |url= http://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA106,M1}}</ref>
 
=== வைக்கம் போராட்டம் (1924–1925) ===
வரிசை 59:
வைக்கம் போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான [[டி.கே. மாதவன்]] அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அவர் காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். வைக்கம் போராட்டத்திற்கு முப்பதாண்டு கால வரலாறு உண்டு. டி.கே. மாதவன் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு [[திருவிதாங்கூர்]] சட்டச்சபை உறுப்பினராக ஆனதும் அந்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். [[அன்னி பெசண்ட்|அன்னி பெசண்டின்]] உதவியையையும் பின்னர் காந்தியின் உதவியையும் நாடினார். போராட்டத்தைக் காந்தியின் வழிகாட்டலுடன் (சத்தியாக்கிரகப்) அறப்போராட்டமாக முன்னெடுத்தார்.
 
நாடெங்கிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அதில் பங்குகொண்டார்கள். [[வினோபா பாவே]] அதில் பங்கெடுப்பதற்காக வந்தார். கேரளத்தில் காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கேளப்பன், கெ.பி. கேசவமேனன், இ.எம்.எஸ்., ஏ.கே. கோபாலன் போன்றவர்களும் பங்கெடுத்தார்கள். தமிழகத்தில் இருந்து பெரியார் பெரியார் ஈ.வே.இராரா அவர்களும்,[[கோவை அய்யாமுத்து]] அவர்களும், எம்.வி. நாயுடு அவர்களும் பங்கெடுத்தார்கள். போராட்டத்தில் ஈ.வே.ரா முக்கியமான பங்கு வகித்து சிறைசென்றார். பெரியார் ஈ.வே.இராரா அந்தப்போரில் பங்கெடுத்தது சில மாதங்கள் மட்டுமே. ஆனால் வைக்கம் போராட்டம் மேலும் பல மாதங்கள் நீடித்தது.
 
[[ஏப்ரல் 14]] அன்று பெரியார் ஈ.வே.இராமசாமி அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் கலந்து கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டுத் தனித்தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின்படி இப் போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவர்கள் கலந்து கொள்ளவில்லை. பெரியார் ஈ.வே.இராமசாமி கைது செய்யபட்ட போதிலும் இராமசாமியின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தைத் தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதுமுதல் பெரியார் ஈ.வே.இராமசாமி [[வைக்கம் வீரர்]] என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். விடுதலைக்கான பல போராட்டத்தில் கலந்து கொண்ட இராமசாமிக்கு கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது என்றும் காந்தி அரிசன மக்களுக்கு ஆதரவாக எந்தப்போராட்டத்தையும் முன்னெடுத்து நடத்தவில்லை என்றும் இக்கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.<ref name="rereadingperiyar">{{cite news|title=பெரியார் மறுவாசிப்பு|author=ரவிகுமார்|date=மார்ச் 2, 2006|url=http://www.countercurrents.org/dalit-ravikumar020306.htm|publisher=கவுன்டர் கரன்ட்ஸ்}}</ref>
 
நடுவே போராட்டம் வலுவிழந்தபோது காந்தியும் [[ஸ்ரீ நாராயணகுரு]]வும் நேரில் வந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். கேரளத்தில் மாபெரும் சமூக சக்தியாக விளங்கிய நாராயணகுரு பங்கெடுத்து நடத்திய ஒரே போராட்டம் இதுவே. கடைசியில் வெற்றி ஈட்டியது. அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாஸ் காந்தியும் போராட்டக்குழு சார்பில் ராஜாஜியும் கையெழுத்திட்டனர்
வரிசை 70:
{{Main|சுயமரியாதை இயக்கம்}}
[[படிமம்:Periyar during Self respect movement.JPG|thumb|left|[[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்தின்]] துவக்க காலத்தின் பொழுது இராமசாமி ]]
பெரியார் ஈ.வே.இராமசாமி மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்கக் கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பலர் [[இந்திய விடுதலைப் போர்|இந்தியாவின் விடுதலைக்காகப்]] போராடி வந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். [[சுயமரியாதை இயக்கம்]] தொடக்கத்தில் பிராமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்ற பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது.<ref name="Diehl-2">Diehl, ''ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார்'', பக்கங்கள். 77 & 78.</ref>
 
சுயமரியாதை இயக்கம் 1925 இல் பெரியார் ஈ.வே.இராமசாமியால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. [[பகுத்தறிவு]]ச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.
 
* சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.<ref name=dk_movment />
வரிசை 88:
1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். [[தைப்பிங்]], [[மலாக்கா]], [[கோலாலம்பூர்]], [[கங்கைப்பட்டாணி]] போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எஸ்.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். [[எகிப்து]], [[கிரீஸ்]], [[துருக்கி]], [[ரஷ்யா]], [[ஜெர்மனி]], [[இங்கிலாந்து]], [[ஸ்பெயின்]], [[பிரான்ஸ்]], மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், [[1932]] [[நவம்பர் 1]] அன்று இந்தியா திரும்பினார்.<ref name="Saraswathi-1.155" />.
 
இச்சுற்றுப்பயணங்கள் பெரியார் ஈ.வே.இராமசாமியின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. [[ரஷ்யா]]வின் [[பொதுவுடமை]]க் (கம்யூனிசம்) கொள்கை இவருடையக் கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் பெரியார் ஈ.வே.இராமசாமியின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துபோவதாக இருந்தது ஆனால் தனியார் முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை.<ref name="Diehl-3.15">டீல், ''ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார்'', பக்கம். 69.</ref>
பெரியார் ஈ.வே.இராமசாமி திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம். சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் பெரியார் ஈ.வே.இராமசாமியின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறிற்று. இதனால் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று.<ref name="Saraswathi-1.155" />.
 
=== இந்தி எதிர்ப்பு ===
வரிசை 96:
[[படிமம்:Periyar with Rajaji.jpg|230px|thumb|left|[[இராஜாஜி]]யுடன் இராமசாமி]]
 
1937 இல் [[இராஜாஜி|சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்]] மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது.<ref name="Chatterjee-2">சட்டர்ஜி, ''உயர்சாதி எதிர்ப்பு: அம்பேத்கார் மற்றும் பெரியாரின் ஒற்றுமைகள்'', பக்கம். 40.</ref> நீதிக்கட்சியைச் சார்ந்தவர்களான சர். ஏ. டி. பன்னீர் செல்வம் மற்றும் பெரியார் ஈ.வே.இராமசாமி இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இப்போராட்டம் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் இராஜாஜி அரசால் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே வருடம் '''தமிழ்நாடு தமிழருக்கே''' என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது.<ref name="Saraswathi-2">சரசுவதி, எஸ். ''சுயமரியாதையை நோக்கி'', பக்கங்கள். 118 & 119.</ref> பெரியார் ஈ.வே.இராமசாமி பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ''ஆரியர்கள்'', ''திராவிடர்களின் பண்பாடுகளை'' ஊடுருவிச் சிதைக்க திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார்.<ref name="Saraswathi-2" /> இந்தியை ஏற்றுக்கொள்வது இந்தி பேசும் வட [[இந்தியா|இந்தியர்களிடமிருந்து]], [[தமிழர்]]களைப் பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாக பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்று இராமசாமி வலியுறுத்தினார்.<ref name="Saraswathi-3">சரசுவதி. ''சுயமரியாதையை நோக்கி'', பக்கம். 88.</ref> தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் [[1948]], [[1952]], மற்றும் [[1965]] ஆம் ஆண்டுகளில் நடந்தன<ref name="Diehl-3.155">டீல், ''ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார்'', பக்கம். 79.</ref>
 
=== நீதிக்கட்சித் தலைவராக (1938–1944) ===
வரிசை 102:
''தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்'' என்ற [[அரசியல் கட்சி]] [[1916]] ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் துவக்கப்பட்டது. இக்கட்சியே, பின்னாளில் [[நீதிக்கட்சி]] என பெயர்மாற்றம் பெற்றது. பிராமணர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்கட்சி, பிராமணரல்லாதாரை ஒடுக்க, [[பிராமணர்]]கள் பின்பற்றி வந்த [[வர்ணம் (இந்து மதம்)|வர்ணாசிரம தத்துவத்தை]] முற்றிலும் எதிர்த்தது.<ref name="Pandian-2">பாண்டியன், ''சாதி, தேசியவாதம் மற்றும் மனித இனம்'', பக்கம். 62.</ref>
 
[[1937]] இல் இந்தி கட்டாயப் பாடமாக மதராஸ் மாகாணப் பள்ளிகளில் அரசால் திணிக்கப்பட்டபோது, தனது எதிர்ப்பை நீதிக்கட்சியின் மூலம் வெளிப்படுத்தினார். 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட இயக்கத்திற்கு கணிசமான மாணவர்களின் ஆதரவு கிட்டியது. பின்னாட்களில் இந்தி எதிர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்தது. இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்கள் அடிமைப்படுவார்கள் என்ற காரணத்தால் முற்றிலும் எதிர்க்கப்பட்டது. நீதிக்கட்சிக்கு மிகுதியான மக்களாதரவு இல்லாததினால் மிகவும் நலிவடைந்திருந்தது. [[1939]], இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த பெரியார் ஈ.வே.இராமசாமி விடுதலையானதும் அக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவரின் தலைமையில் கட்சி சிறப்புடன் வளர்ச்சி கண்டது. இருப்பினும், கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தமையால் பலர் பெரியார் ஈ.வே.இராமசாமியின் தலைமையின் கீழ் ஈடுபட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர்.<ref name="Pandian-2" />
 
=== திராவிடர் கழகம் (1944-முதல்) ===
வரிசை 108:
 
==== திராவிடர் கழகம் உருவாதல் ====
[[1944]] இல் நீதிக்கட்சித் தலைவராக பெரியார் ஈ.வே.இராமசாமி முன்னின்று நடத்திய நீதிக்கட்சிப் பேரணியில் திராவிடர் கழகம் என இராமசாமியால் பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும் பெரியார் ஈ.வே.இராமசாமி [[நீதிக்கட்சி]]யைத், [[திராவிடர் கழகம்]] எனப் பெயர் மாற்றியதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணி, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, [[பி.டி. ராஜன்]], தலைமையில் துவக்கப்பட்டு [[1957]] வரை அம்மாற்று அணி செயல்பட்டது.
 
திராவிடர் கழகத்தின் கொள்கை நகர மக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டன. அவ்வடையாளங்களின் பாதுகாவலர்களாக விளங்கும் பார்ப்பனர்கள், இந்நிலையை எதிர்த்து வாய்மொழித் தாக்குதல்களைத் தொடுக்கலாயினர் <ref name="Pandian">பாண்டியன், ஜே., (1987).''சாதி, தேசியவாதம் மற்றும் மனிதநேயம்''. பாப்புலர் பிரக்காசன் பிரைவேட் லிமிடெட்.: மும்பை, பக்கம். 64.</ref>. 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை [[மூடநம்பிக்கை]] எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர். திராவிடர் கழகம் [[தலித்]]துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் [[தீண்டாமை]]யை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. [[பெண்கள் உரிமை]], [[பெண் கல்வி]], பெண்களின் விருப்பத்திருமணம், [[கைம்பெண்]] திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் <ref name="ITLF">பன்னாட்டு தமிழ் மொழி நிறுவனம், (2000).''திருக்குறள்/ தமிழர் பரம்பரை மற்றும் பண்பாட்டு கையேடு''. ஐ டி எல் எப்: சிகாகோ, பக்கம். 1346.</ref> இவைகளில் தனிக்கவனம் செலுத்தினர்.
வரிசை 118:
[[படிமம்:Annadurai and Periyar.jpg|thumb|200px|right|இராமசாமியுடன், [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரை]]]]
 
1949 இல் பெரியார் ஈ.வே.இராமசாமியின் தலைமைத் தளபதியான [[கா. ந. அண்ணாதுரை|காஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரை]] பெரியார் ஈ.வே.இராமசாமியிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார்.<ref name="Pandian" /> இந்த பிரிவுக்கு பெரியார் ஈ.வே.இராமசாமி மற்றும் அறிஞர் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது. பெரியார் ஈ.வே.இராமசாமி திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அறிஞர் அண்ணாதுரை [[தில்லி]] அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார்.<ref name="Diehl-3.1555">டீல், ''ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார்'', பக்கம். 29.</ref> அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். பெரியார் ஈ.வே.இராமசாமி தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, [[இறைமறுப்பு|கடவுள் மறுப்பு]] போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் பெரியார் ஈ.வே.இராமசாமி தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். பெரியார் ஈ.வே.இராமசாமியிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், [[ஜூலை 9]], 1948 அன்று பெரியார் ஈ.வே.இராமசாமி, தன்னை விட '' 40'' வயது இளையவரான [[மணியம்மையார்|''மணியம்மையாரை'']] மறுமணம் புரிந்ததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து அறிஞர்[[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரைத்]] தலைமையில் விலகினர்.<ref name="periyar_tamilnation">{{cite web|url=http://www.tamilnation.org/hundredtamils/periyar.htm|title=20 ஆம் நூற்றாண்டின் ஒரு நூறு தமிழர்கள் - பெரியார் ஈ. வெ. ராமசாமி|accessdate=2009-01-17 |publisher= தமிழ்நேசன்.ஒஆர்ஜி |date= }}</ref>
 
[[படிமம்:Maniammai and periyar.jpg|இடது|thumb|200px|இராமசாமியும் மணியம்மையாரும் காப்பகக் குழந்தைகளுடன்]]
 
அறிஞர் அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கியத் தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்களின் [[திமுக]] கட்சியை ''கண்ணீர்த்துளி கட்சி'' என அதுமுதல் வர்ணிக்கலானார்.<ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=20308151&format=print&edition_id=20030815 பெரியார் இவர்களை கண்ணீர்த்துளிகளாகப் பார்க்கின்றார்-ஞாநி-திண்ணை] பார்த்து பரணிடப்பட்ட நாள் 28-06-2009</ref>
 
==== 1957 தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு ====
பெரியார் ஈ.வே.இராமசாமி 1957 தேர்தலில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸை]] முழுமையாக ஆதரித்தார். அத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. [[திராவிட முன்னேற்றக் கழகம்]] 15 இடங்களைப் பிடித்தது.<ref>நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 257</ref>
 
=== இறுதிக் காலம் ===
[[1956]] இல் [[சென்னை]] [[மெரினா]]வில் [[இந்து சமயம்|இந்து கடவுளான]] [[இராமர்|ராமரின்]] உருவப்படம் எரிப்பு போராட்டத்தை நடத்திய பெரியார் ஈ.வே.இராமசாமிக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த [[கக்கன்|பி.கக்கன்]] அவர்களால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.<ref name="manyramayanas">{{cite book | title=தெற்காசியாவின் பழைமை வழக்கங்களின் காணப்படும் வேற்றுமைகள், அத்தியாயம் 9: ஈ.வெ. இராமசாமியின் இராமாயண வாசிப்பு| url=http://www.escholarship.org/editions/view?docId=ft3j49n8h7&chunk.id=d0e9800&toc.depth=1&toc.id=d0e9800&brand=eschol| last=ரிச்மென்| first=பவுலா| date=1991| publisher=கலிபோர்னியா பல்கலைக்கழகம்}}</ref> பெரியார் ஈ.வே.இராமசாமி அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்<ref name="manyramayanas" />.
 
[[1958]] இல் பெரியார் ஈ.வே. இராமசாமி மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் பெரியார் ஈ.வே.இராமசாமி [[ஆங்கிலம்|ஆங்கிலத்தை]], [[இந்தி]]க்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திக் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். [[1962]] இல் பெரியார் ஈ.வே.இராமசாமி தனது கட்சியான [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தின்]] புதிய பொதுச்செயலாளராக [[கி. வீரமணி|கி.வீரமணியை]] முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் நியமித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பெரியார் ஈ.வே.இராமசாமி வடஇந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி 1970 சூன் 27 அன்று யுனஸ்கோ மன்றம் என்ற அமைப்பு "''புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி''" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.<ref>{{cite news |title=Periyar's 45th death anniversary: Here are some rare photos of the Dravida Kazhagam founder |url=http://www.newindianexpress.com/galleries/nation/2018/mar/07/periyars-45th-death-anniversary-here-are-some-rare-photos-of-the-dravida-kazhagam-founder-101314--5.html |accessdate=7 May 2019 |agency=நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்}}</ref><ref name="Tamilnation">{{cite web | url=http://www.tamilnation.co/hundredtamils/periyar.htm | title=One Hundred Tamils of the 20th Century Periyar E.V.Ramaswamy - பெரியார் | accessdate=3 மே 2019}}</ref><ref name="cc">{{cite web | url=https://www.countercurrents.org/dalit-periyar280603.htm | title=Periyar's Movement | publisher=Countercurrents.org | date=28-06-2003 | accessdate=3 மே 2019}}</ref><ref name="Kandasamy-7">{{citebook|title=வெண்தாடி வேந்தர் பெரியாரின் பகுத்தறிவு ஆய்வு மற்றும் தீண்டாமை குறித்த பார்வை|author= கந்தசாமி,|coauthors= |year= |publisher = |page = 104 |url= http://books.google.com/books?id=hgb-MKcsSR0C&printsec=frontcover&dq=Fuzzy+and+neutrosophic+analysis+of+Periyar%27s+views+on+untouchability#PPA104,M1}}</ref>
 
== இதழ்கள் ==
பெரியார் ஈ.வேவெ.இராமசாமிராமசாமி தன்னுடைய கருத்துகளை பரப்புவதற்காக பின்வரும் இதழ்களை வெளியிட்டு வந்தார்:
 
# குடிஅரசு (வார இதழ்) 1925 மே 2ஆம் நாள் தொடங்கப்பட்டது.<ref name="ReferenceA">பெரியார் பகுத்தறிவாளர் நாள் குறிப்பு</ref>
வரிசை 149:
== மறைவு ==
[[படிமம்:Periyar memorial Chennai.jpg|thumb|வேப்பேரியில் உள்ள இராமசாமி நினைவிடம்]]
பெரியார் ஈ.வே.இராமசாமியின் கடைசிக் கூட்டம் [[சென்னை]], [[தி.நகர்|தியாகராய நகரில்]], [[திசம்பர் 19]], 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற பெரியார் ஈ.வே.இராமசாமி, [[வேலூர்]] சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட பெரியார் ஈ.வே.இராமசாமி, சிகிச்சை பலனின்றி [[திசம்பர் 24]], 1973 அன்று தனது ''94'' ஆம் வயதில் இயற்கை எய்தினார்.<ref name="periyar_tamilnation" />
 
=== விமர்சனங்கள் ===
* பெரியார் ஈ.வே.இராமசாமி இந்து மத மூடநம்பிக்கைகளையும், பிராமணியத்தையும் இந்து மத இதிகாசம் இராமாயணத்தையும் எதிர்த்தார். பிற மதங்களைப் பற்றி அவர் விமர்சிக்கவில்லை.{{cn}}
* சுதந்திரப்போராட்ட வீரரும் கவிஞருமான பாரதியாரை, கிறுக்கன் பாரதி என்று குறிப்பிடுகின்றார்.
* பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் நூல் என்றும், "விபசாரத்தில் ஆரம்பித்து பத்தினித்தனத்தில் வளர்ந்து முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷம்" என்றும் இராமசாமி சிலப்பதிகாரத்தை விமர்சித்தார்.<ref>http://siragu.com/?p=9481</ref>
வரிசை 171:
== நினைவகங்கள் ==
 
[[தமிழ்நாடு அரசு]] பெரியார் ஈ.வே.ஈ.வெ.ராமசாமி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த [[ஈரோடு]] இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு பெரியார் ஈ.வே.இராமசாமியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது.
 
== மறைக்கப்பட்ட புத்தகம் ==
1979 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் குழு அமைத்து [[நெ.து. சுந்தரவடிவேலு]]வை பெரியார் ஈ.வே.இராமசாமி வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்காக எழுதப்பணித்தது. 1000 பக்க அளவிலான நூலாக அவரும் எழுதித்தந்த பின்னரும் அவை எக்காரணம் கொண்டோ வெளிவரவில்லை.<ref>http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/25421-2013-11-08-10-29-17</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது