நாணயச் சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 7:
நாணயச் சேகரிப்பு பெரும்பாலும், நடப்பில் உள்ள நாணயங்கள் கிடைக்கும் போது சேமித்து வைப்பதுடன் தொடங்குகின்றது. இவை, வெளிநாட்டுப் பயணங்களின் பின்னர் மீந்தவையாகவோ, சுற்றோட்டத்தில் இருந்த பழைய நாணயம் ஒன்றாகவோ இருக்கக்கூடும். பொதுவாக இத்தகைய பல சந்தர்ப்பங்கள் நாணயங்கள் மீது ஆர்வத்தை உண்டாக்குகின்றன. இவ்வார்வம் காலப்போக்கில் அதிகரிக்கும்போது, வெறுமனே புதிய நாணய மாதிரிகளுக்காகக் காத்திருப்பது மட்டும் போதாது. புதுப்புது நாணயங்களைத் தேடிச் சேகரிக்க வேண்டியிருக்கும்.
 
பொதுவாக, கிடைக்கக்கூடிய எல்லா வகையான நாணயங்களிலும் சிலவற்றை மட்டும் சேகரிக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான நாணயங்களில் வெளியிடப்பட்ட எல்லாவற்றையுமே சேகரிக்க முயலலாம். முதல் வகைச் சேகரிப்பில் முழுமையான சேகரிப்பு என்பது அடைய முடியாத ஒன்று எனலாம். ஆனால், இரண்டாவது வகையில் சேகரிப்புக்காக எல்லையை வரையறை செய்வதன் மூலம் சேகரிப்பை முழுமை ஆக்குவதற்கான சாத்தியங்கள் கூடுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக, [[லூயிஸ் எலியாஸ்பர்க்]] (Louis Eliasberg) [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க ஐக்கிய நாடுகளால்]] வெளியிடப்பட்ட எல்லா நாணயங்களையும் சேகைப்பதில்சேகரிப்பதில் வெற்றி பெற்றார். ஆனால், உலகில் இவர் மட்டுமே இவ்வாறான ஒரு முழுமையான சேகரிப்பைச் செய்ய முடிந்துள்ளது.
 
இவ்வாறு நோக்கை வரையறை செய்வதில் பல முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு நாட்டில் வெளியிடப்பட்ட முழு நாணயங்களையும் சேகரித்தல், ஒரு நாட்டின் குறிப்பிட்ட காலப்பகுதியைச் சேர்ந்த நாணயங்களைச் சேகரித்தல், [[தவறுள்ள நாணயம்|தவறுள்ள நாணயங்களைச்]] சேகரித்தல், எனப் பல வழிகளில் சேகரிப்புப் பரப்பை வரையறுக்க முடியும். சேகரிப்பாளர்கள் தங்களுடைய ஆர்வம், பொருள் வசதி என்பவற்றைக் கருத்தில் கொண்டே இவ்வாறான முடிவுகளை மேற்கொள்ள முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/நாணயச்_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது